மலேசிய அருகே வந்து கொண்டிருந்த இந்தோனேசியா அகதிகள் படகு கடலில் மூழ்கியது

66 missing after boat sinks off Malaysia இந்தோனேசியாவில் இருந்து அகதிகள் படகு ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் 97 பேர் பயணம் செய்தனர். மலாக்கா ஜலசந்தி அருகே பான்டிங் கடற்கரை நகரில் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் வந்த போது அந்த படகு கடலில் மூழ்கியது. எனவே அதில் பயணம் செய்தவர்கள் கடலில் தத்தளித்தனர். அதை பார்த்த மலேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் ஒரு படகை அனுப்பினர். விரைந்து சென்ற அவர்கள் 31 பேரை மட்டுமே மீட்டனர். மேலும் 66 பேரை மீட்க முடியவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அவர்களின் கதி என்ன என்று தெரிய வில்லை. அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருந்தாலும் 2 படகுகளை அனுப்பி அவர்களை தேடும் பணி நடக்கிறது. மரத்தினால் ஆன…

Read More

ஜூன் 19ஆம் தேதி சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

Auto drivers to go on strike on Thursday பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (ஜூன் 19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆட்டோ ஓட்டநர் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு), ஏஐடியுசி, விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள், குட்வில் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலர் பாலு கூறியது: எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். போலீஸôர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் வாகனங்கள் விடுக்கப்பட வேண்டும் என்பதோடு, மொத்தம் 3,400 ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூடுதல் கட்டண புகாரின் பேரில் வசூலிக்கப்பட்ட…

Read More

இன்று உலக இரத்த தானம் வழங்குவோர் தினம்

World Blood Donor Day உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்படும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினை செய்வதற்குச் சமம். மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200 முதல் 300 வரை மி.லி. இரத்தம் தானம் செய்யலாம். அவ்வாறு கொடுத்த இரத்தம் நாம் உண்ணும் சாதாரண உணவில் இரண்டே வாரங்களில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும்…

Read More

பாகிஸ்தானில் நரமாமிசம் உண்ட இரு சகோதரர்களுக்கும் 12 ஆண்டுகள் சிறை

Pakistan cannibal brothers jailed for eating dead baby பாகிஸ்தானில் இரு நபர்கள் பிணங்களை சாப்பிட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, அவரிகளிடம் விசாரணை நடத்தியில், குழியில் இருந்து தோண்டிய பிணங்களை சகோதரர்கள் இருவரும் பச்சையாகத் சாப்பிட்டது தெரியவந்தது. கடந்த 2011ம் ஆண்டு அவர்களை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர். தண்டனை காலம் முடிந்து 2013ல் விடுதலையான இவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு சிறு குழந்தையின்…

Read More

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்

‘World Day Against Child Labour’ today சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைக் காப்பதற்காக ஒரு சாசனம் இயற்றியது. இந்த நாளே சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக அனசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 12.6 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று சர்வதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்றளவும் அது முற்றிலுமாகத் தடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். விவசாயம், செங்கல் சூளை, குவாரிகள், பட்டறைகள், உணவு விடுதிகள் போன்றவற்றில்…

Read More

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,வைரம் பறிமுதல்

Gold and other valuables seized from 2 railway passengers சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல இருந்த பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விவரம்: ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு செல்வதற்காக வந்த வசுந்தராஜ் என்பவர் கொண்டு வந்த பையில், மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்கம், 400 கிராம் வைரம், 300 கிராம் பிளாட்டினம் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விசாரணை செய்தபோது, தான் ஒரு நகை விற்பனையாளர் என்றும், தங்கம், வைரம் ஆகியவற்றை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார். இருப்பினும்…

Read More

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இரு பிரிவினர் இடையே மோதல் பலர் காயம்

Two Groups Clash in Golden Temple, 12 Injured பஞ்சாப் பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 12 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர் பொற்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மத்திய அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரிய போராளிகள் கொல்லப்பட்டனர். இதன் 30ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவிலுக்குள் இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. தங்களது பாரம்பரிய வாளேந்திய படி இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. Two Groups Clash in Golden Temple, 12 Injured Worship has resumed at the Golden Temple in…

Read More

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

Today is World Environment Day உலகின் கடற்கரையோரங்களில் அமைந்துள்ள நகரங்களையும், கிராமங்களையும், புராதனச்சின்னங்களையும், அவற்றில் வாழும் மக்களையும், இயற்கை வளத்தையும் காக்கும் நோக்கோடு ஐநா ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடி வருகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் இதனைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இவ்வாண்டில் “சிறு தீவுகளும், காலநிலை மாற்றமும்” கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முழக்கமாக “குரலை உயர்த்துங்கள் – கடல்மட்டத்தை அல்ல” என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் – நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் மொத்த கடலோரத்தின் நீளம் 7517 கிலோ மீட்டர் ஆகும். உலகின் மிக அதிகமான கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பூமி வெப்பமடைதலால் துருவங்களில் உள்ள பனிப்படிவங்கள் உருகுகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கடல் நீர்மட்டம் உயர்வதால் நாட்டின்…

Read More

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை தள்ளிவிட்டு கொன்ற டிக்கெட் பரிசோதகர்

Woman dies after being ‘pushed’ off train at Jalgoan மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பெண் பயணியை வலுக்கட்டாயமாக கிழே தள்ளியதில் காயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜலேகான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். ரயில் ஸ்டேசனை விட்டு நகர்ந்த பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண் சுதாரிப்பதற்குள் தடுமாறு கிழே விழுந்து விட்டார். கிழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் டிக்கெட் பரிசோதகரை கைது செய்து…

Read More

குஜராத் மாநிலத்திலுள்ள 17 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

Major fire in Surat commercial building குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பார்வத் பாட்டியா என்ற பகுதியில் உள்ள 17 மாடி வணிக வளாகக் கட்டடத்தில் இன்று காலை 9 மணியளவில் தீ பிடித்தது. இது சிறிது சிறிதாக மற்ற தளங்களுக்கும் பரவி பயங்கர தீ விபத்தாக மாறியது. டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடையின் குடோனாக இருந்த கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து தீ வேகமாகப் பரவியது. முதலில் கரும்புகை எழுந்து, பிறகு கட்டடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்தோ, காயம் குறித்தோ இதுவரை எந்த தகவலும் இல்லை. Major fire…

Read More