நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நீராவி குழாய் வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

one more dead steam pipeline explosion at nlc நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பயனளிக்காமல் சிவலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆம் தேதி நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் மூவருக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்‌ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். விபத்தை தொடர்ந்து, அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அங்கு பணிப்புரியும் ஊழியர்கள் கோரிக்கை…

Read More

மாயமான மலேசிய எம்.எச் 370 விமானம் பறந்து சென்ற பாதையை பற்றி புதிய தகவல்

Malaysia, Inmarsat release satellite raw data on missing MH370 மாயமான மலேசிய விமானத்தின் செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயானது. பின்னர் அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடும் பணி நடந்து வருகிறபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தை சேர்ந்த இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு…

Read More

காஷ்மீரில் இந்திய ராணுவ விமானம் விபத்து விமானி பலி

IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 வகை போர்விமானம் விழுந்து நொறுங்கியதில் அதன் பைலட் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர்விமானம் (மிக்-21) வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தெற்கு காஷ்மீரின் மதாமா என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியபகுதியில் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், பைலட், ரகுபன்சி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனால், விபத்து குறித்து தகவலறிந்து மீட்புபடையினர் வந்து பைலட்டை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead A MIG-21 fighter aircraft of the Indian Air Force…

Read More

ஒயிட் பிரிண்ட் என்ற பெயரில் பார்வையற்றவர்களுக்காக ஒரு பத்திரிகை

Upasana Makati, the girl behind India’s first English lifestyle magazine in Braille வாசித்தல் ஒரு சுகமான அனுபவம். அந்த அனுபவத்தைச் சாத்தியமாக்க எண்ணிக்கையில் அடங்காத பத்திரிகைகள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் சுவாரசியமான எவ்வளவோ நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதை எல்லாம் நாம் வாசிக்க உதவும் வகையில் தருகின்றன பத்திரிகைகள். படிக்கத் தெரிந்தால் போதும் பரவசமூட்ட பல பத்திரிகைகளும், இதழ்களும் காத்திருக்கின்றன. ஆனால் இவை எல்லாமே பார்வையுள்ளவர்களுக்கானதாகவே உள்ளனவே, பார்வையற்றோருக்கும் பத்திரிகை வேண்டுமே என நினைத்தார் மும்பையைச் சேர்ந்த இளம்பெண் உபாஸனா மகதி. அவரது எண்ணத்தைச் செயல்படுத்தியால் உருவானதே ஒயிட் பிரிண்ட் என்னும் பத்திரிகை. இது முழுக்க முழுக்க பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட பத்திரிகை. இந்தியாவில் பிரெய்லி முறையில் வெளிவரும் முதல் ஆங்கிலப் பத்திரிகை இது. மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த்…

Read More

இந்தியாவில் அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் இந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிவிப்பு

Ambassador Production Stopped as Power Shifts in Delhi சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது. கடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய மோரிஸ் ஆக்ஸ்போர்டு காரைப் போன்ற வடிவமைப்பில் இருந்ததாலும், அம்பாசிடர் கார்களுக்கு, இந்தியா முழுவதும் கிராக்கி எழுந்தது. பின், அம்பாசிடர் கார், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரி கள் உள்ளிட்ட, அதிகார வர்க்கத்தினர் பயணிக்கும், அதிகாரப்பூர்வ காராகவும் மாறியது. இந்துஸ்தான்…

Read More

உ.பி.யில் 2 ரயில்கள் மோதி விபத்து 20 பேர் பலி

20 feared dead as Gorakhdam Express rams into goods train சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபிர் நகர் ரயில் நிலையத்தின் அருகே இந்த விபத்து சம்பவித்துள்ளது. சரக்கு ரயில் மீது கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய வேகத்தில் அதன் 3 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தின் அருகேயுள்ள மரங்களில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மோதி சிதறின. இந்த கோர விபத்தில் கோரக்தாம் ரயிலின் 6 பெட்டிகளில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர். அதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்து உயிருக்கு போராடிவருகிறார்கள். கோரக்பூர் மற்றும் கோண்டா ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்தை…

Read More

பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் தமிழக, கேரள, கர்நாடக முதல்வர்கள்

Karnataka, Kerala Cong CMs to skip Modi’s swearing-in, Jaya keeps up suspense மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப் போவது இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணிப்பதோடு பிரதிநிதியையும் அனுப்ப மாட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலைகள் இருப்பதால் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும்…

Read More

ஒடிஷா மானிலத்தில் போண்டா பழங்குடியினத்தில் இருந்து முதல் எம்.எல்.ஏ. தேர்வு!!

Bonda tribe sends its 1st MLA to Assembly இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடியினத்தவரில் இருந்து முதலாவது எம்.எல்.ஏவாக தம்பரு சிசா தேர்வ்சு செய்யப்பட்டுள்ளார். ஒடிஷா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் ‘போண்டா ஹில்ஸ்” என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு போண்டா எனப்படும் ஆதிபழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இப்பகுதியில் மட்டுமே போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர். இப்பழங்குடி இனப் பெண்கள் கழுத்து நிறைய பெரிய வளையங்கள், காலுக்கு மேலான துண்டு போன்ற கீழாடை, உடல் முழுக்க கயிறு, பாசிகளால் மறைக்கப்பட்ட மேலாடை, தலையில் சணல் வளையம் என ஆதிகால பண்பாட்டை இன்னமும் பின்பற்றுகிறவர்களாக போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். போண்டா பழங்குடியின திருமணமுறை மிகவும் வித்தியாசமானது. சிறுவர்களைத்தான் இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். போண்டா ஹில்ஸ் பகுதி இப்போது மாவோயிஸ்டுகளின்…

Read More

10ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ–மாணவிகள் மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை!

Like any other years, this year also girls have outnumbered boys in pass percentage in the SSLC exam. பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் 18 மாணவிகள், ஒரு மாணவர் என 19 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், 321 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவிகள் 93.6 சதவீதம் பேர் அதாவது 4 லட்சத்து 69 ஆயிரத்து 810 பேர்…

Read More

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு இரண்டாவது இடம்

Shah Rukh Khan 2nd richest celebrity in the world, beats out Johnny Depp and Tom Cruise உலகின் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்றுள்ளார். வெல்த் எக்ஸ் நிறுவனம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களில் பணக்காரர்களாக உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான். ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ஜெர்ரி சீன்ஃபீல்டு தான் உலகின் பணக்கார நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு 820 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக்கான். நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர் என்று பல முகம் கொண்ட ஷாருக்கின் சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர்…

Read More