மகாபலிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி, நடிகர் நாசர் மகன் கவலைக்கிடம்

Actor Nasser’s son Faizal met with an accident while 3 out of 4 members who accompanied him in a car died. மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நடிகர் நாசர் மகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் நாசர் மகன் பைசல். இவர் இன்று காலை 4 பேருடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். பலியானவர்கள் சென்னையை சேர்ந்த சங்கர் (23), சித்து (22) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பைசலுக்கு…

Read More

சென்னையில் லேசான நில அதிர்வு : சென்னை வாசிகள் அச்சம்

Earthquake off Odisha sparks tremors, panic in Chennai வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் பல இடங்களில் பூமி அதிர்ந்தது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் வங்கக் கடலில் 10 கிமீ ஆழத்தில் புதன்கிழமை இரவு 9.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு, வட இந்தியா மற்றும் சென்னையில் சில இடங்களில் அதிர்வு உணரப்பட்டது. ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி…

Read More

சுவிஸ் நாட்டு கோடீசுவரர் முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார்

This Is How Much The Most Expensive Divorce In History Costs முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக் கொடுத்துள்ளார் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் ஒருவர். இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து என்ற பெருமையை இவர்களது விவாகரத்து பெற்றுள்ளது. சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவர் ரஷ்ய தொழிலதிபர் டெமிட்ரி ரெய்போலோவ்லிவ் (47). உரத்தொழிலில் செய்து வரும் இவரது சொத்து மதிப்பு 2010 ஆண்டில் 6.5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டது. தற்போது 100 பில்லியன் டலர் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவி எலினாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடினார்கள். இருவரும் ஒருமித்து விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் வழக்கு சுமூகமாக முடிந்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த…

Read More

நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள 186 உறுப்பினர்கள் மீது குற்றவழக்குகள்

நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16 ஆவது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 34% ஆகும். 14ஆவது மக்களவையில் இந்த எண்ணிக்கை 24% ஆகவும், 15ஆவது மக்களவையில் 30% ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு, மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவில் மட்டும் 98 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 பேரில் 8 பேர் மீதும், அதிமுக வைச் சேர்ந்த 37 பேரில் 6 பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில்…

Read More

தேனியில் ஆலமரம் விழுந்து 5 பேர் உடல் நசுங்கி பலி

Tamil Nadu: Five die as tree falls near cremation ground பயணிகள் நிழற்குடை மீது ஆலமரம் சாய்ந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மழைக்காக ஒதுங்கிய தந்தை, மகன் உள்ளிட்ட 5 தொழிலாளர்களுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணன் தேவன் பட்டியில் தனியார் திராட் சைத் தோட்டம் உள்ளது. இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வீட்டுக்குப் புறப் பட்டனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஒரு டிராக் டரில் சென்ற நாராயணன் தேவன்பட்டியைச் சேர்ந்த சிங்கத் தேவர் (40), சுருளிபட்டியைச் சேர்ந்த குணசேகரன் (42), குன்னப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (38), திருப் பாண்டி (58), அவரது மகன் ரமேஷ் (32)…

Read More

கொலம்பியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது 32 குழந்தைகள் பலி

32 children die in Colombia bus fire   கொலம்பியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அதில் பயணம் செய்த 32 குழந்தைகள் பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொலம்பியாவின் தலைநகரான பகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஃபண்டாசியன் என்ற நகரின் சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் அங்கிருந்த தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சாலையில் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று பரவியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அங்கிருந்து…

Read More

உலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் கட்டப்பட்டுள்ளது

World’s “most environmentally-friendly office building” opens in Norway     இன்றைய காலத்துக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கப் பல வழிகள் இருந்தாலும் சூரிய ஒளியைப் பயன்படுத்தினால் போதும். அதற்கு மத்திய அரசு மான்யம், மாநில அரசின் ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்தாலும் நம்மூரில் பவர் கட்டிலாமல் வாழத் தயங்கி இந்த திட்டத்தை அதிகம் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் உலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் ரெடி ஆகி இருக்கிறது. 6லட்சத்தி 50 ஆயிரம் கிலோவாட்டை முழுங்கி கொண்டிருந்த இந்த பில்டிங் இப்ப தனக்கு தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியா தயாரிச்சி மத்த பில்டிங்குக்கும் கொடுக்குதாம். இதுல வெறும் சோலார் தகடு மட்டுமல்லா – சூடு – குளிர் தாங்கும் வண்ணம் இதன் கட்டமைப்பு மிக மாறுதாலாக புது டெக்னாலஜியை வைத்து கட்டியிருப்பதால் இதன் தற்போதைய…

Read More

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக மர்ம நபர் மிரட்டல்

bomb threat vote counting centres chennai சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 42 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் வாக்கு எண்ணுகையில் மையங்கள் உள்பட சென்னையில் 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். சென்னையில் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் இந்த 3 மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று…

Read More

துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து 200 பேர் பலி

Death toll in Turkish mine blast rises above 200, many still trapped   மேற்கு துருக்கியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து மற்றும் தீ காரணமாக பலியானோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் டேனர் இல்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் அலறிஅடித்து அங்கும் இங்குமாக ஓடினர். தீ பிடித்ததால் உள்ளே இருந்தவர்களால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தது. மீட்பு படைனர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு…

Read More

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் 29 ஆண்டுகளுக்கு பிறகு அதிக வாக்குகள் பதிவு

India has set a new record in voter turnout in the lok sabha elections 2014. இந்திய வரலாற்றில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு 1984-85ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானது தான இதுவரை அதிகபட்ச வாக்கு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நடந்த 1984-85ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த தேர்தலில்…

Read More