காஷ்மீரில் இந்திய ராணுவ விமானம் விபத்து விமானி பலி

IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead

IAF's MiG-21 crashes in Kashmir, pilot dead
IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 வகை போர்விமானம் விழுந்து நொறுங்கியதில் அதன் பைலட் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர்விமானம் (மிக்-21) வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தெற்கு காஷ்மீரின் மதாமா என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியபகுதியில் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், பைலட், ரகுபன்சி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனால், விபத்து குறித்து தகவலறிந்து மீட்புபடையினர் வந்து பைலட்டை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead

A MIG-21 fighter aircraft of the Indian Air Force or IAF today crashed in Bijbehara area of Anantnag district in Kashmir, killing the pilot. The MIG-21, which was on a routine exercise, crashed in an open field at Mirhama in Bijbehara area, 45 kms from Srinagar, defence sources said. The pilot, Raghu Bansi, was killed in the crash, they said. The MIG-21 had taken off from Technical Airport in Srinagar today morning, sources said. The cause of the crash was not immediately known. A team of IAF officials have rushed to the spot. Chief Minister Omar Abdullah tweeted, “My condolences to the family, friends & colleagues of the pilot killed in the MIG crash today. May his soul rest in peace.”

Related posts