சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,வைரம் பறிமுதல்

Gold and other valuables seized from 2 railway passengers

Gold and other valuables seized from 2 railway passengers
Gold and other valuables seized from 2 railway passengers

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல இருந்த பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த விவரம்: ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு செல்வதற்காக வந்த வசுந்தராஜ் என்பவர் கொண்டு வந்த பையில், மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்கம், 400 கிராம் வைரம், 300 கிராம் பிளாட்டினம் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து விசாரணை செய்தபோது, தான் ஒரு நகை விற்பனையாளர் என்றும், தங்கம், வைரம் ஆகியவற்றை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார். இருப்பினும் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், தங்கம் மற்றும் வைரத்தை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதனை வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினரிடம் வசம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Gold and other valuables seized from 2 railway passengers

Gold weighing 3.6 kg were among valuables seized from two passengers in two separate incidents at Chennai Central Railway Station today, police said. Police said 3.689 kg gold, 4.5 karat diamond and 3.2 kg of platinum were seized from a person identified as Vasundaraj from T Nagar in the city, who was proceeding to Thiruvananthapuram. Since he didn’t have sufficient documents, he was being questioned, they said. Likewise, during random checking, 25 kg silver was found in the possession of Vigneshwara Rao of Andhra Pradesh, police said.

Related posts