Five killed as cars ram each other in Tiruchi-Madurai NH திருச்சி அருகே நள்ளிரவில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த கோர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:– தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பத்திரம் கருப்பூர் வானுவதெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 58). இவரது உறவினர் கும்பகோணம் பழனிச்சாமி நகரை சேர்ந்த கண்ணன் (50). இவரது மனைவி விஜய லெட்சுமி (42). இந்த தம்பதியின் மகன் ராஜ்குமார் (15). கும்பகோணம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாரிசாமி (47). இவர்கள் 5 பேரும் வெங்கடசாமியின் உறவினர் குழந்தைக்கு அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த காதணி விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு 10 மணிக்கு ஒரு சொகுசு காரில் வீட்டில் இருந்து புறப்பட்டனர். காரை…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்ட யானை விடுவிப்பு
Elephant ‘cries’ while being rescued after 50 years of abuse in India ஐம்பது ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்ட யானை பாகனிடமிருந்து விலங்குகள் அறக்கட்டளை ஊழியர்களால் மீட்கப்பட்டது. இதை தனது அறிவால் உணர்ந்த அந்த யானை கண்ணீர் வடித்து தனது நன்றியை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச தெருக்களில் பணம் வசூலிக்க பயன்படுத்தப்பட்ட யானைகள் பலவும் பழக்கப்படுத்தப்படுகின்றன. அதுபோன்ற ஒரு ஆண் யானைதான் 50 வயதான ராஜு. வெயில், மழை என்று பார்க்காமல் அந்த யானை யாசகம் கேட்க பயன்படுத்தப்பட்டது. அதன் கால்களில் இரும்பு சங்கிலி பிணைக்கப்பட்டிருந்தது, இதுகுறித்து அறிந்த லண்டனை தலைமையிடமாக கொண்ட பால்மர் கிரீன் என்ற விலங்குகள் அறக்கட்டளை அமைப்பினர் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த யானையை மீட்க கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ராஜுவை மீட்க விலங்கு…
Read Moreதிருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் பீரோக்களை உடைத்து 369 பவுன் நகைகள் கொள்ளை
369 sovereign gold jewels stolen from business man house செய்யாறில், தொழில் அதிபரின் வீட்டில் புகுந்து 369 சவரன் நகை, ஒன்றைரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து திங்கள்கிழமை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. செய்யாறு பெரிய தெருவில் வசிப்பவர் வி.ஜி.பாபு (52). இவர் ரைஸ் மில், திருமண மண்டபம் ஆகியவற்றை வைத்து தொழில் செய்து வரும் தொழில் அதிபர் ஆவார். இவரின் மூத்த மகள் பரணிப்ரியாவின் திருமணம் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த உறவினர்களை அழைத்துக் கொண்டு தொழிலபதிபர் பாபு ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்கு சென்றாராம். வீட்டின் காவலுக்காக சம்பத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தததாகத் தெரிகிறது. அவரும் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து திருமணத்திற்கு சென்றுவிட்டதாகத் தெரிகிகிறது. திங்கள்கிழமை காலை திருமணம்…
Read Moreதிருவள்ளுவர் மாவட்டத்தில் சுற்றுச்சுவர் விழுந்த விபத்தில் தனது உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய கொத்தனார்
tiruvallur wall collapse my father sacrificed his life to save me son interview திருவள்ளூர் மாவட்டம் உப்பரப்பாளையம் என்ற இடத்தில் நடந்த குடோன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரு கொத்தனார் தனது மகன் மீது விழுந்து அவரது உயிரைக் காத்து தான் இறந்துள்ள உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. அலாமதி அருகேயுள்ள உப்பரபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 2 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கிடங்குகளின் அருகே புதிதாக மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணியில் ஆந்திரா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவரையொட்டி குடிசை வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இதில் குடும்பம், குடும்பமாக தொழிலாளர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சுற்றுச்சுவர் இடிந்து குடிசை வீடுகளில்…
Read Moreஅமெரிக்கா வானியல் ஆராயச்சியாளர்கள் புதிய கண்டுபிடித்துள்ளனர்
Earth-like planet raises hope of life in space மெரிக்கா வானியல் ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையில் புவியில் இருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிடித்துள்ள புதிய கிரகமானது வாழ்வாதாரத்தைக் கொண்டு விளங்குவதாக தெரிய வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலமாக புவியைப் போலவே அமைப்புடைய வேறு சில கிரகங்களும் அண்டத்தில் இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. மேலும், அவை புவிக்கு மிக அருகிலேயே இருக்கவும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புவியை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட இந்தக் கிரகமானது இரட்டை நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரத்தினை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றது. மேலும், அந்த நட்சத்திரத்திற்கும், புதிய கிரகத்திற்கும் உள்ள தொலைவானது கிட்டதட்ட சூரியன் மற்றும் புவிக்கு இடையிலான தொலைவு போன்றே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய கிரகம் சுற்றிவரும்…
Read More72 மணிநேரம் கழித்து இடிபாடுகளில் இருந்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி என் செருப்பு எங்கே
After 72 hours under rubble, man emerges asking for his slippers மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான். சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார். கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவர் சிக்கிய இடத்தில் மோப்ப நாய் குரைத்தது. இதையடுத்து மீட்பு பணியினர் அங்கு யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்தனர். அப்போது தான் அங்கு…
Read Moreசென்னையில் முப்பத்தி ஐந்து ஆயிரம் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்
thirty five thousand buildings chennai were constructed illegally சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் எவ்வித அனுமதியின்றி சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் போரூர் மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அக்கட்டிடத்தில் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருவதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே கட்டிட விபத்திற்கு இடி விழுந்தது தான் காரணம் என கட்டுமான நிறுவனம் கூறினாலும், ஏரி நிலத்தில் 11 மாடி கட்டியதே முக்கியக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக இடிந்த கட்டிடத்தில் அருகில் உள்ள மற்றொரு 11…
Read Moreஇளம் பெண்ணின் இடுப்பில் குத்திய 3 இரும்பு கம்பிகள் 10 மணி நேரம் போராடி மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்
young girl bihar 3 rods construction worker accident clinic doctors surgery இளம் பெண்ணின் இடுப்புப் பகுதியில் புகுந்து மறுபுறம் வெளியே வந்த 3 கட்டட கம்பிகளை, 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதில் 17 வயதுடைய இளம் பெண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். விழுந்த இடத்தில் காங்கீரீட் போடுவதற்காக இரும்பு கம்பிகள் வைக்கபட்டிருந்தன. அதில் விழுந்ததால் 3 கம்பிகள் அவரது இடுப்புப் பகுதியில் குத்தி மறுபுறம் வெளியே வந்தன. அவருடன் பணியாற்றியவர்கள் உடனடியாக அந்தப் பெண்ணை பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.…
Read Moreபாகிஸ்தானில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை தலையை வெட்டி கொலை
Newly-wed couple killed in public over love marriage in Pakistan பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை அந்தப் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் அவர்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய முவாபியா பீபி. அவர் பக்கத்து கிராமமான ஹசனாபாத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சாஜத் அகமத் என்பவரை காதலித்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் முவாபியா கடந்த 18ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நீதிமன்றத்தில் சாஜதை திருமணம் செய்து கொண்டார். முவாபியா திருமணம் முடிந்து ஹசனாபாத்தில் இருப்பது அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து முவாபியாவின் தந்தை தில்ஷாத் உள்பட 7 பேர் ஹசனாபாத் சென்றனர். அங்கு அவர்கள்…
Read Moreசென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரெளடி வெட்டிக் கொலை
Rowdy dies after attack in GRH சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரௌடி பொக்கை ரவி திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி என்ற பொக்கை ரவி (35). இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், நரம்பு தளர்ச்சி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த ரவி, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மூட நீக்கியல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரவி திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சாந்தகுமார், தமிழச்செல்வன் ஆகியோருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல், திடீரென பொக்கை ரவியை அரிவாளால்…
Read More