Visually challenged students thrashed by teacher in Kakinada ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில், 3 பார்வையற்ற மாணவர்களை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. இதனை பார்த்து ஆத்திரம் அடைந்தவர்கள், சம்பந்தப்பட்டவர்களை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. 3 நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், ஆசிரியர் 3 பார்வையற்ற மாணவர்களை கதறக் கதற பிரம்பால் அடித்து நொறுக்குகிறார். வலி பொறுக்க முடியாமல் மாணவர்கள் துடிதுடித்து அலறுகிறார்கள். அவர்களில் ஒருவரை பிடித்து ஆசிரியர் தரையில் தூக்கி வீசுகிறார். இவ்வாறாக அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோ 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டாலும், நேற்றுதான் வெளியானது. இதனை பார்த்தவர்களின் பலர் கடும் ஆத்திரம் அடைந்ததால், ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டது.இது குறித்து காக்கிநாடா போலீசார் கூறுகையில், பார்வையற்ற மாணவர்களை…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் உள்ள மாநிலம் ; தமிழகம் முதலிடம்
7 people commit suicide every day due failure examination இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார். அதில், 2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 16,112 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 3-வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 14,957 கடந்த ஆண்டு…
Read Moreஉக்ரைன் வான் பகுதியில் பறந்த மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 298 பேர் பலி
Malaysia Airlines plane with 298 on board crashes over Ukraine near Russian border உக்ரைன் வான் பகுதியில் 298 பேருடன் சென்ற மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து நேற்று கோலாலம்பூர் நோக்கி மலேசியாவுக்கு சொந்தமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. உக்ரைனுக்கு கிழக்கே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினர் சண்டையிட்டு வரும் பகுதிக்கு மேலே பறந்த போது திடீரென வெடித்து சிதறியது. ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ஹிராபோவ் என்ற கிராமத்தில் உடல்கள் சிதறி கிடப்பது தெரியவந்துள்ளது. இது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினர் வசம் உள்ள பகுதியாகும். தற்போது இந்த பகுதியில் விமான மீட்பு பணிகளை நடத்துவதற்கு உதவியாக 3 நாட்கள் போர் நிறுத்தத்தை கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.…
Read Moreசெங்கோட்டை அருகே காரும் அரசுப் பேருந்தும் மோதி விபத்து ஐந்து பேர் பலி
5 killed 7 injured bus car collision திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே இலஞ்சி – கொட்டாகுளம் திருப்பத்தில் அரசுப் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், 5 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த பழனி, பச்சையப்பன், செல்வம், சவுகத் அலி, செல்வராஜ், ராஜ்குமார், பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர், குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு, நேற்று இரவு செங்கோட்டை- பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள புரோட்டா கடையில் உணவுண்டனர். பின்னர் இரவு 11 மணி அளவில் தங்கள் ஊருக்கு காரில் திரும்பினர். பார்டரில் இருந்து சிறிது தொலைவில், அவர்கள் சென்ற கார், செங்கோட்டை-திருமங்கலம் சாலையில் கொட்டாகுளம் கிராமத்தில்…
Read Moreஏர் இந்தியா விமான இன்ஜின் பகுதியில் தீ பிடித்ததால் பரபரப்பு நியூஜெர்சி விமான நிலையத்தில் தரையிறக்கம்
Air India Flight returns to Newark Liberty’s Airport after engine catches fire நியூஜெர்சியிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் என்ஜினில் தீ பிடித்தால் உடனடியாக மீண்டும் நியுஜெர்சி விமான நிலையத்திற்கு திரும்பியது. இது குறித்து நியூஜெர்சி விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் எரிக்கா டுமாஸ் கூறியதாவது: 313 பயணிகளுடன் அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தில் இருந்து போயிங் 777 வகையை சேர்ந்த ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் அதன் விமானத்தில் இடது பக்கத்தில் தீ பிழம்புகள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் மீண்டும் நியூஜெர்சி விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கியது. விமானம் இறங்கும் இடத்திற்கு ஆம்புலண்ஸ் வருமாறு விமானி வேண்டுகோள் விடுத்தார். எனினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளை இந்தியா…
Read Moreதிருட்டு விசிடியை கையும் களவுமாக பிடித்த நடிகர் விஷால்
காரைக்குடியில் ஒரு பகுதியில் உள்ள லோக்கல் கேபிள் சேனலில் ரிலீஸ் ஆகி ஒரு மாதமே ஆன உன் சமையல் அறையில், வடகறி போன்ற படங்கள் ஓட்டிக் கொண்டிருந்ததை எப்படியோ அறிந்த விஷால். அந்த கேபிள் டிவியின் அலுவலகத்தை போலீஸ் உதவியுடன் சென்றுள்ளார். முதல் வீடியோவில் வடகறி படம் ஓடிக் கொண்டிருப்பதை நீங்களே பார்க்கலாம். வடகறி ஓட்டுவதற்கு முன்பு தான் உன் சமையல் அறையில் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். இதை வீடியோ ஆதாரத்தோடு பிடித்த விஷால் அலுவலகத்தில் இருந்த எல்லோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இரண்டாவது வீடியோ காவல் நிலையத்தில் விஷாலுடன் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பேச்சுவாக்கில் அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்றும் அந்த பத்திரிக்கையின் பெயரை உரக்க சொல்லியும் விடுகிறார். ஒரு பத்திரிக்கையாளர் இப்படி பட்ட சட்டவிரோதமான செயல்களில் உதவியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
Read Moreகேரள மாநிளத்தில் பணிபுரிந்து வந்த 1300 தமிழ் ஆசிரியர்களை அதிரடியாக பணி நீக்கம்
kerala govt dismiss 1300 tamil teachers from schools கேரளாவில் பணிபுரிந்து வந்த, தமிழகத்தை சேர்ந்த தமிழாசிரியர்கள் 1300 பேரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கேரளாவின் தேக்கடி உள்ளிட்ட தமிழர்கள் அதிமாக வாழும் பகுதிகளில், தமிழ் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க அம்மாநில அரசு 1300 தமிழாசிரியர்களை நியமித்தது. இப்போது இவர்கள் அத்தனை பேரையும் உடனடி பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கேரள அரசின் இந்த திடீர் உத்தரவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களும் தங்களின் குழந்தைகளின் நிலையை எண்ணி அதிர்ச்சியில் உள்ளனர். Kerala Government dismisses around 1300 Tamil…
Read Moreபஞ்சாப் மாநிலத்தில் இறந்துபோன சாமியாரின் உடலை 6 மாதமாக அவர் உறங்குகிறார் என்று கூறி வைத்திருக்கும் சீடர்கள்
Millionaire guru’s body kept in freezer as followers argue over whether he’s dead or asleep இறந்த சாமியாரின் உடலை, தூங்குவதாகக் கூறி கடந்த 6 மாதமாக ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாக்கின்றனர் அவரது சீடர்கள். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் திவ்ய ஜோதி ஜக்ரதி சான்ஸ்தன் என்ற அமைப்பின் மூலம் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் 70 வயதுடைய ஸ்ரீ அஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள். இவருக்கு கோடிக்கணக்கான சொத்து உள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சீடர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். பரிசோதனையில் ஸ்ரீஅஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது சீடர்கள் அவர் இறக்கவில்லை அவர் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார் என கூறி, அவரது உடலை கடந்த 6…
Read Moreபிரான்ஸ்சில் 1982ஆம் ஆண்டு பனிமலையில் காணாமல் போன 23 வயது நபரின் சடலம் 32 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது
Missing climber’s body found in Alps after 32 years பிரான்ஸ் நாட்டில் மொண்ட் பிளான்க் பனிமலையின் மீது கடந்த 1982 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி, தனியாக ஏறத்துவங்கிய 23 வயது பாட்ரிஸ் ஹைவேர்ட் என்பவர் திடீரென வானிலை மாறியதால் காணாமல் போனார். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, பாட்ரிஸ் இறந்ததை உறுதி செய்த மீட்பு படையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் நடைபெற்று 32 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது தலேப்ரே பனிமலைக்கு சென்ற இரு மலையேற்ற வீரர்கள் 2600மீட்டர் உயரத்தில் ஒரு சடலம் இருப்பதாக தகவல் கொடுத்தனர். மலையேற்ற வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பார்த்தபோது, அது 23 வயதில் காணாமல் போன பாட்ரிஸ் ஹைவேர்ட்டின் சடலமென தெரியவந்தது. சுமார் 32 ஆண்டுகள் கழித்து மீட்க்கப்பட்ட…
Read Moreதாமதமாக விமானம் புறப்பட்டதால் பயணிகளுக்கு சொந்த செலவில் பீட்ஸா வாங்கிக் கோடுத்த விமானி
Frontier Airlines pilot buys pizza for stranded passengers on flight அமெரிக்க விமானம் ஒன்று வானிலை காரணமாக வழியில் இறங்கி தாமதமாக புறப்பட்டதால் அதன் விமானி தன்னுடைய சொந்த செலவில் பயணிகள் அனைவருக்கும் உணவளித்து அசத்தியுள்ளார். அமெரிக்காவில் மலிவு விலை விமான சேவையை “பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ்” என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த திங்கட்கிழமை 160 பயணிகளுடன் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட்டு டென்வர் நகரை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது. அன்று டென்வர் பகுதியில் மோசமான வானிலை நிலவியதால் வழியில் உள்ள செயென்னே விமான நிலையத்தில் தரையிறங்கி நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும்படி விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே போய் சேர வேண்டிய நேரத்தை விட தாமதமாகி விட்டதால் சிறிய விமான நிலையமான செயென்னேவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் அமர்ந்திருந்த…
Read More