Frontier Airlines pilot buys pizza for stranded passengers on flight
அமெரிக்க விமானம் ஒன்று வானிலை காரணமாக வழியில் இறங்கி தாமதமாக புறப்பட்டதால் அதன் விமானி தன்னுடைய சொந்த செலவில் பயணிகள் அனைவருக்கும் உணவளித்து அசத்தியுள்ளார். அமெரிக்காவில் மலிவு விலை விமான சேவையை “பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ்” என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த திங்கட்கிழமை 160 பயணிகளுடன் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட்டு டென்வர் நகரை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது. அன்று டென்வர் பகுதியில் மோசமான வானிலை நிலவியதால் வழியில் உள்ள செயென்னே விமான நிலையத்தில் தரையிறங்கி நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும்படி விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே போய் சேர வேண்டிய நேரத்தை விட தாமதமாகி விட்டதால் சிறிய விமான நிலையமான செயென்னேவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் முனங்க ஆரம்பித்தனர். விமானத்தில் இருந்த உணவும் தீர்ந்து போனதால் பசி வேறு ஒருபுறம் வயிற்றைக் கிள்ள பயணிகளின் பொறுமை எல்லை தாண்டி கோபத்தின் உச்சகட்டத்தை அடைந்தது. இதை புரிந்துக் கொண்ட விமானி ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். “அன்புக்குரிய பயணிகளே.. பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு “சீப்” ஆன கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கலாம். ஆனால், அந்நிறுவனத்தின் விமானியாக பணியாற்றும் நான் “சீப்” ஆனவன் அல்ல. பசியில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் சொந்த செலவில் “பீட்ஸா” ஆர்டர் செய்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் அவற்றை சாப்பிட்டு மகிழலாம்” என்று திடீர் மகிழ்ச்சியை அளித்தார். அதற்குள் அவர் ஆர்டர் அளித்த பீட்ஸாக்கள் செயென்னே விமான நிலையத்தின் வரவேற்பு பகுதிக்கு வந்து சேர விமான நிலையை அதிகாரிகளின் அனுமதியுடன் டாமினோஸ் நிறுவனத்தின் பீட்ஸா டெலிவரி வாகனம் நேராக அந்த விமானத்தின் அருகிலேயே சென்று விமான பணிப்பெண்களிடம் பீட்ஸாக்களை ஒப்படைத்தது. தனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய தனி ஆர்டரை சந்தித்ததில்லை என்று பேட்டியளித்த செய்ன்னே நகரின் டாமினோஸ் பீட்ஸா கடையின் மேனேஜர், அந்த பில்லுக்கு உரிய தொகை முழுவதையும் அந்த விமானி தனது கிரெடிட் கார்டின் மூலம் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.
Frontier Airlines pilot buys pizza for stranded passengers on flight
A Frontier Airlines pilot helped take some of the sting out of an hours-long delay by ordering pizza for every passenger on his plane Monday evening. The saga of Frontier Airlines Flight 719 began at around 7:40 p.m. Eastern Time Monday when the plane left Ronald Reagan Washington National Airport, bound for Denver one hour behind schedule. Bad weather in the Denver area forced the plane to circle over western Nebraska before low fuel levels forced it to land at Cheyenne Regional Airport in southeastern Wyoming. At that point, with 160 hungry passengers becoming increasingly agitated inside the hot plane, the pilot, whose name has not been released, took command of the situation. “He said ‘Ladies and gentleman, Frontier Airlines is known for being one of the cheapest airlines in the US, but your captain is not cheap,’ passenger Logan Marie Torres told KDVR. “‘I just ordered pizza for the entire plane.'” Cheyenne Domino’s Pizza manager Andrew Ritchie told The Associated Press that he got a call from the plane at about 10 p.m. local time Monday, just as he was about to send employees home. Ritchie said the pilot told him he needed to feed 160 people — fast. “I put my hand over the phone and I said: `Guys, you’re coming back,’ ” Ritchie said, recalling what he told his employees. In all, Ritchie said his crew made about 35 pizzas and delivered them to the airport, where the driver handed the food off to flight attendants. That number of pizzas is usually what the store handles in an entire hour. This time, Ritchie’s employees needed to make them and deliver them in about 30 minutes. But that didn’t deter his co-workers, Ritchie said. “Actually, they were super excited. They had a blast. It was a challenge,” he said. “It was definitely one of those `challenge accepted’ moments in time.” Flight 719 left Cheyenne at approximately 10:30 p.m. local time, soon after the special delivery. It arrived at Denver International Airport just after midnight, nearly five hours after its scheduled landing.