துளசி செடியை சந்திரனில் வளர்க்க திட்டம் : நாசா

NASA Project Looks To Grow Turnips And Basil On The Moon அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் ஒன்றில் ஈடுபட உள்ளது. வருகிற 2015–ம் ஆண்டு அதற்கான ஆய்வை தொடங்கி ஆயத்த பணியை இப்போதே ஆரம்பித்து விட்டது. முன்னதாக சந்திரனில் எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது.இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. தாவரங்களை…

Read More

டிசம்பர்-1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம்

December 1st is world AIDS Days உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி  கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்  ஓர் கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதனுடைய பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் தினம்  பற்றிய சிந்தனை முதன் முதலில் 1988-ம் ஆண்டு நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார மாநாட்டில் உருவானது. December 1st is world AIDS Days

Read More

பேஸ்புக், டுவிட்டரில் தேர்தல் முடிவுகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

EC ELECTION COMMISSION to post counting results on Twitter – FACEBOOK ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர்த்து ஏனைய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவுற்றது. வரும் 1ம் தேதி ராஜஸ்தானிலும், வரும் 4ம் தேதி டெல்லியிலும் வாக்கு பதிவு நடை பெறவுள்ளது. 8ம் தேதி, 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுன்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் பேஸ்புக் வாடிக்கை யாளர்களாக உள்ளனர். டுவிட்டருக்கு 8 கோடி மக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்துக்கு 130 வாடிக்கையாளர்களும், டுவிட்டருக்கு 120 வாடிக்கையாளர்கள் மட்டுமே…

Read More

சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !

CAMBRIDGE UNIVERSITY INVENTED A NEW FOR INTERNET WITHOUT URL AND WWW இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது. இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து ஆக்ஸஸ் செய்யும்படி வடிவமைக்கபட்டிருப்பதால் இதனை அழிக்கவும் உலகம் முழுவதும் எங்கிருந்து வேன்டுமாணாலும் செயல்பட முடியும். இதனால் சர்வர் ஹேக் அல்லது சர்வரை கிராஷும் செய்ய முடியும். இதை கவனத்தில் கொண்டு இப்போது WWW…

Read More

உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் ரூ.87 கோடிக்கு ஏலம்

World’s most expensive book sells for $14 million கடந்த 1640ம் ஆண்டு மசாசூட்ஸ் மாகாணத்தில் அச்சடிக்கப்பட்ட ‘தி பே சாம் புக்’ என்ற இந்த புத்தகம் இன்று நியூயார்க்கில், ஏலம் விடப்பட்டது. அப்போது 14 மில்லியன் டாலர் அளவிற்கு இந்த புத்தகம் ஏலம் போனது. இதையடுத்து, உலகின் மிகவும் காஸ்ட்லியான புத்தகம் என்ற பெருமையை இந்த புத்தகம் அடைந்துள்ளது. அமெரிக்க நியூயார்க் சோத்பி ஏலமையத்திற்கு அமெரிக்காவிலேயே முதல் முதலாவதாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் ஒன்று நேற்று ஏலத்திற்கு வந்தது. ஏலம் தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே இந்த புத்தகம் 14 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு 87 கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும். இதுவே உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் என்று கூறப்படுகிறது. நிதி நிறுவன அதிபரும் மனிதநேயவாதியுமான…

Read More

விக்கிபிடியா நடத்திய புகைப்பட போட்டியில் முதல் பரிசு வென்ற தஞ்சை கோவில் புகைப்படம்

Wiki Loves Monuments: India edition of world’s largest photo contest announces winners உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார். கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது. பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப்…

Read More

கூடங்குளம் அணு உலை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 7 பேர் பலி

7 killed in bomb blast in village near Kudankulam nuclear plant   “இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டுகளை ஒரு கும்பல் ரகசியமாக தயார் உள்ளது. குண்டு தயாரித்த போது திடீர் என்று அந்த குண்டுகள் மொத்தமாக வெடித்துள்ளன. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்”.என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தங்குழி கிராமங்களில் தாது மணல் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இந்த இரு கோஷ்டிகளும் தங்கள் பலத்தை காட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். இதில் பயத்தில் உறைந்து போன மக்களில் சிலர் குடும்பங்களுடன் கூத்தங்குழியை விட்டு வெளியேறி உவரி, கூடுதாழை, சொக்கன்குடியிருப்பு…

Read More

ரிப்பன் பில்டிங் கட்டிடம் திறக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு

Ripon building 100th anniversary  சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கம்பீரமான மாளிகை கடந்த 1909ம் ஆண்டு கட்ட துவங்கி 1913ம் ஆண்டு முடிக்கப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த மாளிகையின் மொத்த பரப்பளவு 25 ஆயிரம் சதுரடி. மாளிகை 252 அடி நீளமும் 126 அடி அகலமும் மாளிகைக்கு அழகு சேர்க்கும் கடிகார கோபுரம் 132 அடி உயரமும் கொண்டவை. கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம், 8 அடி விட்டம் உடையது.இந்திய – ரோமானிய கட்டட கலை வடிவமைப்பு கொண்ட ரிப்பன் மாளிகையில் வெப்பத்தை உள் வாங்காத வகையிலான மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் செங்கல், சுண்ணாம்பு, மணல், கடுக்காய் தண்ணீர், வெல்லம் கலந்த கலவையில்…

Read More

நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

Violence Against Women : November 25th International Day for the Elimination of Violence Against Women நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் இப்படியான தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அத்துடன் இன்றைய…

Read More

வாகன ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி வரை பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதக தகவல்

Rs 22,000 crore bribe paid on roads every year   அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்டுதோறும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அதிகாரிகளுக்கு ரூ.22,000 கோடி வரை லஞ்சம் கொடுப்பது தெரியவந்துள்ளது.  லூதியானா, டெல்லி, அகமதாபாத், இண்டோர், மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் சுமார் 1,200 டிரக் ஓட்டுனர்களிடம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் சாலையில் செல்லும் டிரக், கன ரக வாகன ஓட்டுனர்களிடம் இருந்து போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் பெறும் லஞ்சத் தொகை மட்டும் ரூ.22,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் செல்லும் டிரக் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களின் 77 சதவீதம் பேர் தங்களுக்கு போலீசாரால் தொல்லை ஏற்படுவதாகவும், 73 சதவீதம் பேர் போக்குவரத்து துறை…

Read More