உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் ரூ.87 கோடிக்கு ஏலம்

World’s most expensive book sells for $14 million

World’s most expensive book sells for $14 million

கடந்த 1640ம் ஆண்டு மசாசூட்ஸ் மாகாணத்தில் அச்சடிக்கப்பட்ட ‘தி பே சாம் புக்’ என்ற இந்த புத்தகம் இன்று நியூயார்க்கில், ஏலம் விடப்பட்டது. அப்போது 14 மில்லியன் டாலர் அளவிற்கு இந்த புத்தகம் ஏலம் போனது. இதையடுத்து, உலகின் மிகவும் காஸ்ட்லியான புத்தகம் என்ற பெருமையை இந்த புத்தகம் அடைந்துள்ளது.

அமெரிக்க நியூயார்க் சோத்பி ஏலமையத்திற்கு அமெரிக்காவிலேயே முதல் முதலாவதாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் ஒன்று நேற்று ஏலத்திற்கு வந்தது. ஏலம் தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே இந்த புத்தகம் 14 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு 87 கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும். இதுவே உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் என்று கூறப்படுகிறது.

நிதி நிறுவன அதிபரும் மனிதநேயவாதியுமான டேவிட் ரூபென்ன்ஸ்டீன் ஆஸ்திரேலியாவில் இருந்து போன் மூலம் தொடர்புகொண்டு இந்த புத்தகத்தை வாங்கினார் என்று சோத்பி ஏல மையம் தெரிவித்துள்ளது.

மாசேசூசெட்ஸ் மாகாண கேம்பிரிட்ஜில் 1640 ஆண்டு வசித்த புரிதான் குடியேறிகளால் ’தி பே சாம் புக்’ என்ற பைபிளின் சங்கீத மொழி பெயர்ப்புகள் அடங்கிய இந்த புத்தகமே முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் ஆகும். மதச் சுதந்திரம் தேடி ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க வந்து குடியேறிய இவர்கள், யூதர்களின் பழைய ஏற்பாட்டு புத்தகத்திலிருந்து மொழி பெயர்த்து எழுதியது தான் இந்த புத்தகம் ஆகும்.

World’s most expensive book sells for $14 million

The first book printed in what is today the United States of America sold for more than $14 million (Rs. 87 crores) at auction in New York on Tuesday, Sotheby’s said, becoming the world’s most expensive book.

Related posts