இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த நகரம் பெங்களூர்: புதிய ஆய்வு

Bangalore tops as business hub, Chennai a close second இந்தியாவிலேயே தொழில் ஒன்றை தொடங்கி நடத்த சிறந்த நகர பட்டியலில் பெங்களூர் நகரம் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குஅடுத்தபடியாக சென்னை, மும்பை, புனே ஆகிய நகரங்கள் அந்த சிறப்பை பெற்றுள்ளன. இந்த சிறப்பு  பட்டியலில், இந்தியாவின் தலைநகரமான டெல்லி இடம்பெறவில்லை எனினும், டெல்லியின் பிராந்தியத்தில் அமைந்து இருக்கும் நொய்டா, குர்கான் ஆகிய நகரங்கள்  17-ம் இடம் மற்றும் 19-ம் இடம் ஆகிய வரிசையில் வருகின்றன. மனிதவளம், அடிப்படை வாழ்க்கைத் தரம், உட்கட்டமைப்பு வசதிகள், நகர கலாச்சாரம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பெங்களூர் தான் தொழில் தொடங்க பெரிதும் உகந்ததாக உள்ளது. மேலும் இங்கு தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடு இல்லாத குடிதண்ணீர் விநியோகம்,  எதிதான போக்குவரத்து வசதி மற்றும் குடியிருப்பு வசதி, அலுவலக இடங்கள் மற்றும்…

Read More இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த நகரம் பெங்களூர்: புதிய ஆய்வு

இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 3-ல் ஒரு பகுதியாகக் குறைவு

reducing infant maternal mortality tamil nadu இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 3-ல் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 50 % மாகக் குறைந்திருப்பதாக  தெரிய வந்துள்ளது. மாநில அரசினால் கையாளப்படும் பொது சுகாதார வழி முறைகள் தான் இது போன்ற முன்னேற்றத்திற்கு முக்கியக்காரணம் என கருதப்படுகின்றது. குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கணக்கிடுவதாகும். இது சுகாதார சேவைகள், ஊட்டச்சத்து அளவு, வறுமை மற்றும் மக்களின் கல்வி நிலை போன்றவற்றில் ஒரு முக்கியக் குறியீடாக விளங்குகின்றது. கடந்த 2000ஆவது ஆண்டுத் துவக்கத்தில் ஐ.நா அமைப்பு, குழந்தைகளின் இறப்பு விகிதம் உலக நாடுகளில் குறைக்கப்பட வேண்டும் என்பதை தன்னுடைய சுகாதாரக் கழகத்தின் வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது. இதற்கான கெடுவாக…

Read More இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 3-ல் ஒரு பகுதியாகக் குறைவு

மாகாத்மா காந்தி பயன்படுத்திய 60 பொருட்கள் இங்கிலாந்தில் ஏலம்

Mahatma Gandhi relics to be auctioned in Britain   புனே ஏர்வாடா சிறையில் மகாத்மா காந்தி இருந்தபோது உபயோகபடுத்திய ராட்டை வரும் 5ம் தேதி நவம்பரில் இங்கிலாந்தில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டித்தில் கலந்து கொண்டபோது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ராட்டை ஒன்றை பயன்படுத்தினார். பின்னர் அந்த ராட்டையை அமெரிக்க பாதிரியாரான ரெவரன்ட் ஃப்லாய்ட் ஏ பஃப்பருக்கு பரிசாக அளித்தார். அந்த ராட்டை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனமான முல்லக்ஸில் ஏலத்திற்கு வருகிறது. இந்த ராட்டையின் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 59 லட்சத்து 68 ஆயிரத்து 827 ஆகும். முல்லக்ஸில் காந்தி தொடர்பான சுமார் 60 பொருட்கள் ஏலத்திற்கு…

Read More மாகாத்மா காந்தி பயன்படுத்திய 60 பொருட்கள் இங்கிலாந்தில் ஏலம்

மேற்குவங்க அரசிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 64 ரகசிய கோப்புகள்

Make public 64 secret Netaji Subhas Chandra Bose files, Bose family urges Mamata Banerjee இந்திய தேசிய ராணுவம் எனும் இந்தியர்களை கொண்ட போராளிகள் படையை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி  போராட்டத்தை நடத்தி, பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read More மேற்குவங்க அரசிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 64 ரகசிய கோப்புகள்

இந்தியாவில் 91% பதிவு பெறாத எக்ஸ்-ரே நிலையங்கள்

91 pc of X-Ray units in country without registration இந்தியாவில் செயல்பட்டுகொண்டிருக்கும் 91 சதவிகிதமான எக்ஸ்-ரே நிலையங்கள் முறையாக பதிவு செய்யாமல் செயல்படுகிறது என்று, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ சோதனைக்காக செயல்பட்டுகொண்டிருக்கும் எக்ஸ்-ரே எடுக்கும் நிலையங்கள், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடமிருந்து முறையாக பதிவு செய்து கொண்டு, அனுமதி வாங்கவேண்டும். இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தான், இந்தியாவில் உள்ள எக்ஸ்ரே நிலையங்களுடைய செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துகின்றது. இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தினுடைய செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்டிருக்கிறார். இதை, பி.ஏ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் பொது கணக்கு கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. பொது கணக்கு கமிட்டி ஆய்வில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துதிருக்கிறது. இந்தியாவில்…

Read More இந்தியாவில் 91% பதிவு பெறாத எக்ஸ்-ரே நிலையங்கள்

காமன்வெல்த் நாடுகளின் சுற்றுச்சூழல் விருது பெற்ற இந்திய பெண்

Priti Rajagopalan wins commonwealth youth award   மிகுந்த வேகத்தில் மாசு அடைந்து வரும் உலகத்தின் சுற்றுச் சூழ்நிலையில் புதிய மாற்றம் கொண்டுவர சுற்றுச்சூழல் ஆர்வலரான இந்திய பெண் செல்வி.பிரீதி ராஜகோபாலன் (வயது 23) தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சக மாணவர்களுடன் சேர்ந்து கழிவு மேலாண்மை திட்டத்தை செல்வி.பிரீதி ராஜகோபாலன் தனது 18-வது வயதில் துவக்கினார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள 200 பள்ளிகள் மற்றும் 40 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு கழிவுகள் மற்றும் உரமாகும் பொருட்களை தனித்தனியே பிரிப்பதற்காக ஒரு புதிய நவீன பயிற்சியின செல்வி.பிரீதி ராஜகோபாலன் அளித்துள்ளார். பிரிக்கப்பட்டு தயாரான அந்த உரங்கள் யாவும் மலிவு விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தா திட்டத்தை சுமார் 40 நகரங்களில் அவர் நடத்தி வருகிறார். இந்த திட்டத்திற்கு அரசு நிதியுதவி வழங்கி…

Read More காமன்வெல்த் நாடுகளின் சுற்றுச்சூழல் விருது பெற்ற இந்திய பெண்

மும்பையில் 18 வயது பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கொடுமை

18-Year-Old Girl Forced to Drink Acid by Stalker in Mumbai; Victim Battling for Life 18 வயது கல்லூரி மாணவியை மும்பை கோரா கடற்கரை பகுதில் பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர், அவரை வலுகட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் இருக்கும் தாஹிசார் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவியை அந்த பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா(வயது 20) என்பவன் கடந்த பல மாதங்களாக பின் தொடர்ந்து வந்திருக்கிறான். இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஜிதேந்திரா மீது காவல்துறையினரிடம் புகார் ஒன்றை கொடுத்தனர். காவல் துறையினர் அவரை அழைத்து எச்சரித்துவிட்டு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் நேற்று இரவு ஜிதேந்திரா அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வலுகட்டாயமாக ஆசிட்டை வில்…

Read More மும்பையில் 18 வயது பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கொடுமை

பாய்லின் புயல் பதிப்பு 1.72 லட்சம் பறவைகள் 4,393 கால்நடைகளும் பலி

4393 animals, 1.7 lakh birds killed in cyclone-flood in Odisha   பாய்லின் புயலால் உண்டான ஒடிஷா மாநில வெள்ளத்தில் சிக்கி 4,393 கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் 1.72 லட்சம் பறவைகள் பலியாகியிருக்கிறது. அண்மையில் ஒடிஷா மாநிலத்தை பலம் வாய்ந்த பாய்லின் புயல் தாக்கியது. இந்தப் புயல் கரையை கடந்த போது பலத்த சூறாவளி காற்று மணிக்கு சுமார் 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. பெருமழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தின் பாதிப்பு பற்றி  நேற்று புவனேஸ்வரில் ஒடிஸா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் மொஹாபாத்ரா பத்திரிக்கை நிருபர்களிடம் உரையாடுகையில், இந்த கடுமையான வெள்ளத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட 4,393 பெரிய விலங்குகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 1,70,970 பறவைகள் பலியாகியுள்ளன. பேரிடர் நிகழ்ந்த போது 31,062 ஆடு,…

Read More பாய்லின் புயல் பதிப்பு 1.72 லட்சம் பறவைகள் 4,393 கால்நடைகளும் பலி

தனியார் வானொலி செய்தி அனுமதி மறுப்பு ஏன்? உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Supreme Court to examine curbs on news on private FM radio இந்தியாவில் இருக்கும் தனியார் வானொலி நிறுவனங்களுக்கு செய்திகள் ஒளிபரப்ப அனுமதி கொடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொது நலன் மனுவை ஒன்றை விசாரணை செய்த இந்திய உச்சநீதிமன்றம், தனியார் தொலைக்காட்சி  நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கும் அரசாங்கம், தனியார் வானொலிகளுக்கு மட்டும் செய்திகள் ஒளிபரப்ப கொடுக்க மறுப்பது ஏன் என இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பி இருக்கிறது. பொது நல மனு ஒன்றை எற்ற தலைமை நீதிபதி திரு.பி.சதாசிவம் அவர்களின் தலைமையில் உள்ள அமர்வு நீதிமன்றம், தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள், செய்தித்தாள் நிறுவனங்கள், சஞ்சிகைகள் உள்பட்ட மற்ற தனியார் ஊடகங்கள் அனைத்திற்கும் செய்திகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ள போது, பண்பலை வானொலி நிறுவனங்களுக்கும், சமுதாய வானொலி நிறுவனங்களுக்கும் மட்டும்…

Read More தனியார் வானொலி செய்தி அனுமதி மறுப்பு ஏன்? உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

ராஜஸ்தானில் மனைவியை சந்தேகப்பட்டு கோடாரியால் வெட்டி கொலை

Monster Husband Butchers Wife to Death Using axe ராஜஸ்தானில் தனது  மனைவி மேல் சந்தேகம் கொண்ட கணவன் ஒருவன், அவனது 6 வயது மகன் கண் முன்னே தனது மனைவியை கோடாரியால் வெட்டி கொன்று விட்டான். கொலை செய்த பின் தனக்கு எதுவுமே தெரியாதது போல தூங்கச் சென்றுவிட்டான். இந்த கொலை  சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்தார்மல் என்ற நபர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர். இவரது மனைவியின் பெயர் திருமதி.கோத்தி. சர்தார்மல், தனது மனைவி திருமதி.கோத்திக்கு வேறொரு ஆள் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருப்பதாக சந்தேகித்து வந்தார். இதனால் மனைவி கோத்தியிடம், சர்தார்மல் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில், இவர்களது தகராறு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த தகராறில் சர்தார்மல் தனது மனைவி…

Read More ராஜஸ்தானில் மனைவியை சந்தேகப்பட்டு கோடாரியால் வெட்டி கொலை