gold price dips in tamilnadu
வியாழக்கிழமை, 27 ஜூன் 2013: இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக தங்களிடம் இருப்பில் இருந்த தங்கத்தை விற்க ஆரம்பித்தன. இதனால், விலை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதிகபட்சமாக ஏப்ரல் 17ம் தேதி ஒரு கிராம் ரூ.2,425க்கு விற்பனையானது. அதன்பின்னர் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் வெளி நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த புதன்கிழமை அறிவித்தது. இதனால் ஏராளமானவர்கள் மீண்டும் அமெரிக்க நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக தங்கத்தின் விலை கணிசமாக குறைய ஆரம்பித்துள்ளது.
gold price dips in tamilnadu
இதையும் படியுங்கள்
- மும்பை பார்களில் அழகிகள் டிஸ்கோத்தே: நீதிமன்றம் அனுமதி
- பணப்புழக்கத்தை இறுக்கியது ஆர்பிஐ!:வட்டி விகிதம் அதிகரிக்கும்?.
- கேதர்நாத்தில் 200க்கு மேற்பட்ட கிராமங்கள் அழிந்தன 5000 பேர் சாவு
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.
அடுத்த செய்தி →: மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி
