கொச்சி : உச்ச நீதிமன்றம் ‘அர்னேஷ் குமார் வழக்கின் வழிகாட்டுதல்’ படி ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்காக மக்களைக் கைது செய்வதற்கான தடையை கடுமையாக அமல்படுத்துமாறு கேரள உயர் நீதிமன்றம் மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஆனந்த் கல்யாணகிருஷ்ணன் மூலம் திருச்சூரை சேர்ந்த முகமது ரபி என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் முகமது நியாஸ் சிபி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.வடக்கஞ்சேரியின் வட்ட ஆய்வாளர் சதீஷ் குமார் எம்.வி. 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்ததற்காக நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் (அர்னேஷ் குமார் எதிராக மாநில அரசு…
Read Moreகள்ளக்குறிச்சி சிறுமி மரணம், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்களுக்கு உத்தரவு : சென்னை உயர்திநீதிமன்றம்
கள்ளக்குறிச்சி : 10 நாட்களாக பிணவறையில் இருந்த சிறுமியின் உடலை இறுதியாக அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் குழுவிற்கு நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டார். சுமார் 10 நாட்கள் பிணவறையில் இருந்த சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல இறந்த சிறுமியின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். ஜூலை 17-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை மற்றும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாரின் மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் நகலை அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பி. ராமலிங்கம் SC-இல் தனது குடும்பத்தின் விருப்பப்படி ஒரு டாக்டரை உள்ளடக்கிய இரண்டாவது பிரேத பரிசோதனை…
Read Moreஅதிமுக தலைமைத் தகராறு, பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கும் : சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : அதிமுக தலைமைப் போட்டியில் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்), ஓ பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இடையே யார் வருவார்கள் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த சிவில் வழக்கின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதனிடையே பொதுக்குழு (GC) கூட்டம் ஜூலை 11 (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை மூன்று மணி நேர வாதங்களுக்குப் பிறகு, திங்கள் கிழமை காலை 9 மணிக்கு உத்தரவு வழங்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறினார். ஓபிஎஸ் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை தீர்ப்பை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.இபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் தனது வாதத்தில், கடந்த டிசம்பரில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை தேர்வு செய்ய கடந்த டிசம்பரில் நடந்த செயற்குழு…
Read More“அக்னிபாத்” திட்டத்தின் மீதான மனுக்களை, விசாரிக்க கேவியட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது : மத்திய அரசு
புது தில்லி : மத்திய அரசு பாதுகாப்புப் படைகளுக்கான “அக்னிபாத்” ஆள்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. கேவியட் விண்ணப்பத்தை தாக்கல் செய்த வழக்கறிஞர், தனது விண்ணப்பத்தில் அவர்களுக்கு (அவன், அவள் ) எதிராக எந்த எதிர்மறையும் இத்திட்டத்தில் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.இதற்க்கு முன்னதாக அக்னிபாத் திட்டத்திற்கான மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல மனுத் தாக்கல் செய்தார். பொதுநல மனுவில் ஜூன் 14 – ம் தேதியன்று பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பத்திரிக்கை அறிவிப்பு குறிப்பை சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மற்றும் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருந்தார்.வழக்கறிஞர் ஹர்ஷ் அஜய் சிங்கும், ஆயுதப்படைகளுக்கான அக்னிபாத் ஆள்சேர்ப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய…
Read MoreU/S, 12 குடும்ப வன்முறைச் சட்டத்தின் விண்ணப்பங்களை முதல் விசாரணை தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர மாஜிஸ்திரேட் கட்டுப்பட்டுள்ளார் : கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடகா : குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, பிரிவு 12 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அது சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்) மாஜிஸ்திரேட் முடிவு எடுக்க வேண்டும், என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராஜம்மா. எச் அவர்கள் குற்றவியல் மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த விண்ணப்ப மனுவை ஏற்ற, பெங்களூரு பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு, ஜீவனாம்சம் கோரிய குற்றவியல் விண்ணப்பத்திற்கு , இரண்டு வார காலத்திற்குள் மனுதாரர் தாக்கல் செய்த மனுவை முடித்துவைக்குமாறு நீதிபதி எம்.நாகபிரசன்னாவின் தனி நீதிபதி அமர்வு, உத்தரவிட்டது.மனுதாரர் தனக்கு ஆதரவாக ஜீவனாம்சம் கோரி இடைக்கால மனுவை 12-11-2021 அன்று தாக்கல் செய்தார். 20-12-2021 அன்று வழக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டது, அதன் பிறகு, பராமரிப்பு கோரிய அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை.இதனால் சட்டத்தின் கீழ் தாக்கல்…
Read Moreசிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் புதிய குற்றச்சாட்டை விசாரணையின் போது சேர்க்கலாம் : உயர் நீதிமன்றம்
பெங்களூரு : இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ், மைனர் பெண்ணைக் கையகப்படுத்துதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போக்சோவின் பிரிவு 7 இன் கீழ் கூடுதல் குற்றச்சாட்டாக மாற்ற, கோலார் II கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அனுமதித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டை குற்றவியல் விசாரணையில் சேர்க்கலாம் என்று தீர்ப்பளித்து, “சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை” என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 216 இன் கீழ், POCSO இன் கீழ் குற்றத்தைச் சேர்க்க குற்றச்சாட்டை மாற்றுமாறு அரசுத் தரப்பு கோரியது சரியானது…
Read Moreதலைமைச் செயலாளர் மற்றும் ஜிசிசி – யின் அவமதிப்பு நடவடிக்கையை எச்சரித்தது : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை : பிராட்வே வியாபாரிகளை ஜூன் 23க்குள், இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமைச் செயலாளர் (சிஎஸ்), கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் (ஜிசிசி) உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியதற்க்காக மறைந்த ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என் மாலா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு சமீபத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது.இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, இந்த நீதிமன்றம் கடைசி விசாரணைத் தேதி, 5-4-2022 அன்று எதிர்மனுதாரர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அனுமதித்து, வியாபாரிகள் அல்லாத பகுதியில் இருந்து வியாபாரிகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் வியாபாரிகள்…
Read Moreதனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்தங்கிய EWS இடங்களை அடுத்த 5 ஆண்டுகளில் நிரப்ப வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம்
தில்லி : தில்லி உயர் நீதிமன்றம்,தனியார் மற்றும் அரசு நிலங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள EWS (Economically Weaker Section ) இடங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 20% காலியிடங்கள், கட்டாய வருடாந்திர கூடுதலாக 25% .ஆரம்ப நிலையில் முன்பள்ளி, நர்சரி, ப்ரீ-பிரைமரி, கேஜி மற்றும் ஒன்று ஆகிய வகுப்புகள் இதில் அடங்கும்.பொதுப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உண்மையான எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல்.பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் (EWS) ஆரம்ப நிலையில் அறிவிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட 25% மாணவர்கள் நிரப்பப்படுவதை உறுதி செய்யுமாறு தில்லி அரசுக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வஜிரி மற்றும் நீதிபதி விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. நகரத்தில் உள்ள…
Read More“மூத்த குடிமக்கள் சட்டத்தில்”, மோசமாக செயல்பட்ட டெல்லி அரசு, டிஎம், எஸ்டிஎம்களுக்கு தாமாக முன் வந்து நோட்டீஸ் அனுப்பியது : டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி : பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ஐ மோசமாக செயல்படுத்தியதற்காக டெல்லி உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது . வழக்கறிஞர் நேஹா ராய், தனது கடிதத்தில் நீதிமன்றம் இப்பொது நல வழக்கில் மேற்படி சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலைமையை முன்னிலைப்படுத்தி கூறியிருந்தார்.தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “டெல்லி அரசு, மாவட்ட சட்ட சேவை அதிகாரிகள், மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) மற்றும் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுகளுக்கும் (எஸ்டிஎம்)”நோட்டீஸ் அனுப்பியது.நோட்டீஸில்,மூத்த குடிமக்களுக்கான 2007 சட்டத்தை விரைவாக செயல்படுத்துவதில் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் ஆகிய நீதித்துறை அதிகாரிகள் தவறிவிட்டதாகவும், மூத்த குடிமக்களின் முறையீடுகளை கவனத்தில் கொள்ளத் தவறியதன் மூலம் அவர்களுக்கு…
Read Moreவைகையில் “மணல் அள்ளுவது” தொடர்பான மனு மீது அரசு பதிலளிக்க உத்தரவு : சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை: வைகை ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகள் (பிஐஎல்) மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை : சிவகங்கை மானாமதுரையில் உள்ள கிட்டத்தட்ட 25 கிராமங்களுக்கு வைகை ஆறு மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது, இது சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலத்தின் பாசனத்திற்கு உதவுகிறது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல், மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் உள்ள மணல் குவாரிக்கு சிவகங்கை கலெக்டர் அனுமதி அளித்தார் என சிவகங்கை, மானாமதுரை தாலுக்காவில் உள்ள கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான பி. மாயாசாகு, குற்றம் சாட்டினார். ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் குறைந்து கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனுமதியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதேபோன்ற…
Read More



