தில்லி : தில்லி உயர் நீதிமன்றம்,தனியார் மற்றும் அரசு நிலங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள EWS (Economically Weaker Section ) இடங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 20% காலியிடங்கள், கட்டாய வருடாந்திர கூடுதலாக 25% .
ஆரம்ப நிலையில் முன்பள்ளி, நர்சரி, ப்ரீ-பிரைமரி, கேஜி மற்றும் ஒன்று ஆகிய வகுப்புகள் இதில் அடங்கும்.
பொதுப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உண்மையான எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல்.பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் (EWS) ஆரம்ப நிலையில் அறிவிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட 25% மாணவர்கள் நிரப்பப்படுவதை உறுதி செய்யுமாறு தில்லி அரசுக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வஜிரி மற்றும் நீதிபதி விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
நகரத்தில் உள்ள 132 தனியார் பள்ளிகள், EWS பிரிவில் மாணவர் சேர்க்கையில் அரசாங்கத்தின் வழிகாட்டுதலை மீறுவதாக கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், EWS பிரிவில் உள்ள இடங்கள் ஆரம்ப நிலையில் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும், ஆனால் சில பள்ளிகள் கடந்த பத்தாண்டுகளாக EWS பிரிவில் மாணவர்களை சேர்க்கவில்லை என்றும் தில்லி அரசு சார்பில் ஆஜரான நிலை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
EWS பிரிவின் கீழ், தனியார் பள்ளி நிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளும், அரசு நிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளும் 25% EWS வகை மாணவர்களை ஆரம்ப நிலையில் சேர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசு நிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் EWS பிரிவில் 5% மாணவர்களுக்கு மட்டுமே தில்லி அரசாங்கத்தால் கல்விச் செலவுகள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும், மீதமுள்ள 20% EWS விண்ணப்பதாரர்களின் கல்விச் செலவுகளை ஏற்பது தனியார் பள்ளிகளின் கடமையாகும், ஏனெனில் “அரசு நிலத்தை ஒதுக்குவதே” நிபந்தனைக் காரணமாகும்.
பள்ளிகள் EWS பிரிவில் மாணவர் சேர்க்கையை முழுமையாக கடைபிடிக்காத நிலையில், மாநிலம் அதன் கடமையைச் செய்ய வேண்டும். எந்த அரசு நிலத்தின் பயனாளியும் “கவனிக்காமலோ அல்லது தவிர்க்கவோ” முடியாது.
தில்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து GNCTD இன் இணக்க உறுதிமொழியைக் கோரியது.