“மூத்த குடிமக்கள் சட்டத்தில்”, மோசமாக செயல்பட்ட டெல்லி அரசு, டிஎம், எஸ்டிஎம்களுக்கு தாமாக முன் வந்து நோட்டீஸ் அனுப்பியது : டெல்லி உயர் நீதிமன்றம்

மூத்த குடிமக்கள் சட்டத்தில்", மோசமாக செயல்பட்ட டெல்லி அரசு, டிஎம், எஸ்டிஎம்களுக்கு தாமாக முன் வந்து நோட்டீஸ் அனுப்பியது : டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி : பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ஐ மோசமாக செயல்படுத்தியதற்காக டெல்லி உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு  எடுத்துக்கொண்டது . வழக்கறிஞர் நேஹா ராய், தனது கடிதத்தில் நீதிமன்றம் இப்பொது நல வழக்கில் மேற்படி சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலைமையை முன்னிலைப்படுத்தி  கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “டெல்லி அரசு, மாவட்ட சட்ட சேவை அதிகாரிகள், மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) மற்றும் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுகளுக்கும் (எஸ்டிஎம்)”நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸில்,மூத்த குடிமக்களுக்கான 2007 சட்டத்தை விரைவாக செயல்படுத்துவதில் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் ஆகிய  நீதித்துறை  அதிகாரிகள் தவறிவிட்டதாகவும், மூத்த குடிமக்களின் முறையீடுகளை கவனத்தில் கொள்ளத் தவறியதன் மூலம் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் இருப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்திற்க்கே  ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியிருப்பதாகவும்  இந்த அமர்வு தெரிவித்திருந்தது.
மேலும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக  பதில் மனுக்களை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு இந்த அமர்வு உத்தரவிட்டது. மூத்த குடிமக்களுக்கான 2007 சட்டத்தின் கீழ் தனிப்பட்ட புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் மற்றும் SDM  உடல் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு ஆகியவற்றின் அறிக்கைகளைத் தயாரித்தும், நேரம் குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் துணைப் பிரதேச நீதிபதிகளுக்கு இந்த அமர்வு உத்தரவிட்டது.
ஜனவரி 1, 2022 முதல்  இணையதளம்/உதவி எண்ணில் பெறப்பட்ட புகார்களின் முழுமையான பதிவேட்டின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உதவி  எண் தற்போது  செயலில் உள்ளதா என்றும், செயல்படுவதையும் உறுதி செய்யுமாறு,பிரிதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு  ஜூலை 12, 2022  அன்று விசாரணைக்கு வரும் என்று இந்த அமர்வு கூறியது.


Related posts