கள்ளக்குறிச்சி சிறுமி மரணம், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்களுக்கு உத்தரவு : சென்னை உயர்திநீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்: ஏழை மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை

கள்ளக்குறிச்சி : 10 நாட்களாக பிணவறையில் இருந்த சிறுமியின் உடலை இறுதியாக அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் குழுவிற்கு நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டார். சுமார் 10 நாட்கள் பிணவறையில் இருந்த சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல இறந்த சிறுமியின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். ஜூலை 17-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை மற்றும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாரின் மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் நகலை அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பி. ராமலிங்கம் SC-இல் தனது குடும்பத்தின் விருப்பப்படி ஒரு டாக்டரை உள்ளடக்கிய இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும் என்ற வாதத்திற்கு SC – எதுவும் பேசவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். மேலும் ஜூலை 20 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தனது உத்தரவில் எந்த திருத்தமும் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது.
“உங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? இரண்டாவது பிரேத பரிசோதனையை நடத்திய டாக்டர்கள் குழுவை இந்த நீதிமன்றத்தால் மட்டுமே அமைக்கப்பட்டதே தவிர அரசு அல்ல ஆகவே இந்த டாக்டர் குழுவில் எந்த ஒரு தவறும் நடக்க இடமில்லை. விரைவில் உண்மை வெளிவரும், அதுவரை காத்திருங்கள் என்றார். பெற்றோரின் பரிதாப நிலையை நீதிமன்றம் புரிந்து கொள்ளும் அதே வேளையில், பள்ளியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
“ஜூலை 17 அன்று பள்ளிக்கூடம் கொள்ளையடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது என்றும் நிர்வாகத்திற்கு யார் இழப்பீடு கொடுப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகி உள்ளது,” என்று நீதிபதி கூறினார். மறு பிரேத பரிசோதனையில் பங்கேற்ற தடயவியல் நிபுணர், முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு இடையில் குழுவால் எந்த மாறுபாடும் காணப்படவில்லை என்று நீதிபதியிடம் கூறினார். இரண்டு பிரேத பரிசோதனைகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் பெற்றோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீடியோ கிளிப்பிங்குகளை நன்றாகப் பார்க்கலாம் என்றும் கூறிய நீதிபதி இன்று 10வது நாளாக பிணவறையில் சிறுமியின் உடல் இருப்பதை பெற்றோருக்கு நினைவூட்டினார். “நீங்கள் ஒரு நேர்மறையான முடிவை எடுங்கள் சிறுமியின் உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை அமைதியாக நடத்துங்கள் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்,” என்றார்.
கள்ளக்குறிச்சியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சின்னசேலம் கணியமூர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்புப் பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமி ஜூலை 13-ஆம் தேதி விடுதி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டார். விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்த சிறுமி, மேல் மாடியில் இருந்து தரையில் குதித்து தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தற்போது மாநில காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

Related posts