அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும்: நடிகர் விஜய்

actor vijay twitter news words நடிகர் விஜய் தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்றும் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில், “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம். இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன். என் தந்தையோ வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். விஜய்யின் சமீபத்திய ‘தலைவா’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலே அவரை இவ்வாறு கூற வைத்துள்ளதாக தெரிகிறது. ‘தலைவா’ படத்தின் விளம்பரத்தின் கீழ் ‘Time to lead’ ( தலைமையேற்கும் தருணம் ) என்று போடப்பட்ட வாசகமும், அப்படத்தில்…

Read More

ஆவடியில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: இரட்டையர்கள் பலி

Two students killed road accident : twins சென்னை: மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் இருவர் மீது டேங்கர் லாரி மோதியதில் அதே இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் செல்லதுரை. தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் விஜயசாரதி, விஜயவரதன் (வயது 18) இருவரும் இரட்டையர்கள். விஜயசாரதி செம்பரம் பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விஜயவரதன் ஆவடி எஸ்.ஏ.என்ஜினீரிங் கல்லூரியில் பி.டெக் படித்தார். இன்று காலை அண்ணன்-தம்பி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றனர். சென்னீர் குப்பம் அருகே சென்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் லாரியின் அடியில்…

Read More

கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி கைது

Cuddalore District business tax officer Rajeswary arrested கடலூரில் ஒன்றரை லட்சம் ரூபாயை  லஞ்சமாக வாங்கிய மாவட்ட வணிக வரித் துறை அதிகாரி ராஜேஸ்வரி (40) லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால்  இன்று கைது செய்யப்பட்டார். சிதம்பரம்  தேரடி தெருவில் சதீஷ்குமார் என்பவர் நிலக்கரி சாம்பலில் இருந்து செங்கல் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி வந்து கணக்கு வழக்குகளை சரிபார்த்தார். அந்த நிறுவனத்துக்கு வரி குறைப்பு செய்திருப்பதாகவும், அதற்கு ரூ.8 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்றும் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமாரிடம் கேட்டார். அதற்கு அவர் முதல் தவணையாக ரூ. 1½ லட்சம் தருவதாக அதிகாரியிடம் கூறினார். பின்னர் வணிக வரித்துறை அதிகாரி அந்த பணத்தை நாளை காலை சிதம்பரம் தேரடி வீதிக்கு கொண்டு வந்து தரும்படி கூறிவிட்டு…

Read More

கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு தடை

The Sri Lankan government rejected a plan to allow Indian fishermen கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். சர்வதேச கடல் எல்லை கோட்பாட்டை தமிழக அரசோ தமிழக மீனவர்களோ மீற முடியாது என அவர் கூறினார். கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதித்தால் அது இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,ஆண்டுக்கு 70 நாட்கள் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் பகுதியில் தமிழ‌க மீனவர்கள்…

Read More

பெண் புகைபட கலைஞர் பலாத்காரம்: 5 பேர் வரைபடம் வெளியீடு

Photo journalist gang raped in Mumbai மும்பையில் 22வயது ‌பெண் ‌போட்டோகிராபர் மீது பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் தப்பியது.இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் தெற்கு மும்பை மகாலெட்சுமி மில் பகுதியில் நடந்துள்ளது.ஐந்து பேர் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண்ணுடன் பணிபுரியும் சக ஆண் நண்பர்கள் தான் இதில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இக்கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை ரயில் தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பியது. நண்பர்கள் அதிர்ச்சி:சம்பவம் குறித்து அறிந்த பெண் நண்பர்கள் ‌அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அப்பெண் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து என்எம் ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்தில்புகார் செய்தனர்.போலீஸ் அதிகாரிகள் புகார் பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்காக ஜஸ்லோக்‌ மருத்துவமனையில்அப்பெண்ணை சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 20 முதல்…

Read More

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து

fire accident near sivakasi சிவகாசி அருகே எம்.துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறியதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த வெடி விபத்தால் உயிரிழப்பு பற்றி எதுவும் இதுவரை ஆதரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு சிவகாசி அருகே முதலிபட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில்…

Read More

இந்திய பங்குச் சந்தையில் 4 நாட்களில் ரூ.6,00,000 கோடிகள் இழப்பு

stock markets in india has left investors poorer by over $100 billion மும்பை: ரூபாயின் மதிப்பு சரிவைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்கள் ரூ. 6 லட்சம் கோடியை இழந்துள்ளனர். அதாவது பங்குகளின் விலை சரிவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கணக்குப்படி இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ. 58,60,000 கோடி. நேற்று மட்டும் இதில் ரூ. 1,09,000 கோடி காற்றோடு கரைந்துபோய்விட்டது. stock markets in india has left investors poorer by over $100 billion The four-day carnage in stock markets in india has left investors poorer by over $100 billion, while they suffered a…

Read More

சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு தாக்குதல்:1300 பொதுமக்கள் பலி

1300 civilians killed in Syria சிரியாவில் அரசுப்படையினர் நடத்திய ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 1300 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அயர்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் நேற்று இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷவாயு தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரின் நுரையீரலுக்குள் ஊடுருவிய நச்சுப் பொருட்கள், நரம்பு மணடலத்தை பாதித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். இதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அறியாமலேயே பலர் மரணத்தை தழுவியுள்ளனர். இதில் பலி எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஆராயவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கூடுகிறது.…

Read More

தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு 375வது பிறந்த நாள்!

Chennai Day சென்னை: மனிதர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு 375வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சென்னை நகரம் உருவானது. எழும்பூர், திரு வல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. ஆங்கிலேயர் வசமிருந்த காரணத்தால் உலகின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்த வேகத்தில் சென்னைக்கும் வந்தன. தொலைபேசி, ரெயில், சினிமா, தபால் போன்றவை அடுத்த சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு அறிமுகமாகின. Chennai Day It’s August 22, the day Chennaiites commemorate the founding of the city. The Madras Day celebrates the history, heritage, culture and food of our city. Advertisement:…

Read More

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு

India refusal to negotiate with Pakistan இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் இதனை தெரிவித்தார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்று கூறிய அவர், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தனது வாக்குறுதியை அந்த நாடு காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில்தான் இந்தியாவின் கவனம் உள்ளது என்றும் அக்பருதீன் தெரிவித்தார். முன்னதாக, அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொது அவை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்…

Read More