பொலிவியா சிறை கலவரம்.. குழந்தை உட்பட 30 பேர் பலி

Violence in Bolivia jail takes 30 lives   பொலிவியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறையில் இரு பிரிவினருக்கு இடையே நேற்று முன்தினம்  ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு குழந்தை உள்பட 30 பேர் பலியாகினர். பொலிவியாவின் சான்டா குரூஸில் இருக்கிற பால்மசோலா சிறைச் சாலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. இந்த வன்முறையின் போது சிறைக்குள் இருந்த ப்ரோபோன் வாயு டேங்குகளை கைதிகள் சிலர் தீயிட்டனர். மேலும் பலரை எரித்தும் கொன்றுள்ளனர். இந்த மோதலில் 18 மாத கைக்குழந்தை உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கு யார் தலைவராக இருப்பது என்ற மோதலிலேயே இந்த கலவரம் மூண்டதாக தெரிகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பொலிவியா அரசு 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தங்கள் பெற்றோருடன் சிறையில் இருக்க…

Read More பொலிவியா சிறை கலவரம்.. குழந்தை உட்பட 30 பேர் பலி

உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் தேவை: பிரதமருக்கு கடிதம்

Food Security Bill CM writes another letter to PM சென்னை, ஆக. 25: தமிழக அரசின் சார்பில் தாம் குறிப்பிட்டுள்ள பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து போதிய திருத்தங்களை உணவு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டு வரவேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள நேர்முக கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- மத்திய அரசால் அவசர அவசரமாக பிறப்பிக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து ஆகஸ்ட் 2ம் தேதி நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். நான் தெரிவித்த யோசனைகளில் சிலவற்றை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு மசோதாவில் சில திருத்தங்கள் செய்து இருப்பதாக அறிகிறேன். இதில் மிக முக்கியமானது என்னவென்றால் எனது வேண்டு கோளின்படி பொதுவிநியோக திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு தற்போது…

Read More உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் தேவை: பிரதமருக்கு கடிதம்

விஜயகாந்துக்கு ராகுல் காந்தி டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்து..

Rahul gandhi sent birthday greeting to DMDK chief Vijayakanth 25 ஆகஸ்ட் 2013: இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி, டெலிபோனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.   தனது மனைவி பிரேமலதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வழிபட்ட அவர் வழக்கம் போல எளிமையாக இன்று பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.  செய்தியாளர்கள் கூட்டத்தில், வரும் 2014- தேர்தலில் யாருடன் கூட்டணி என கேட்டனர். முதலில் தேர்தல் தேதியை அறிவிக்கட்டும் பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கிறேன் என்றார். அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சமீபத்தில்தான் தலைவா பட சிக்கலிலிருந்து மீண்ட நடிகர் விஜய்யும், விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன்,…

Read More விஜயகாந்துக்கு ராகுல் காந்தி டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்து..

மலையாளம் தெரிந்தால் மட்டும் கேரள அரசு வேலை: உம்மன் சாண்டி

Malayalam compulsory for govt jobs ஆகஸ்ட் 25, 2013: திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக பதவியேற்றதும் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் வாழும் தமிழ் மற்றும் கன்னடம் பேசும் சிறுபான்மையின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்தக் கோரி சில மலையாள அமைப்புகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை…

Read More மலையாளம் தெரிந்தால் மட்டும் கேரள அரசு வேலை: உம்மன் சாண்டி

நைஜீரியாவில் 44 பேர் குரல் வளையை அறுத்து கொடூர கொலை

Islamist extremists in Nigeria slit 44 villagers’ throats in dawn attack   நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 41 பேரின் குரல் வளையை அறுத்து பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம், போர்னோ மாகாணத்தில் உள்ள டும்பா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்தது. டும்பா கிராமம் மலைப் பகுதியில் உள்ளது. அங்குள்ள தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் இச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமைதான் வெளியுலகுக்கு தெரிய வந்தது. அப்பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான போகோ ஹராம் அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் இக்கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிராமவாசிகளை துப்பாக்கியால் சுட்டால், பாதுகாப்புப் படையினருக்கு தெரிந்து விடும் என நினைத்து பயங்கரவாதிகள் இந்த முறையைக் கையாண்டிருக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிலரது கண்களை…

Read More நைஜீரியாவில் 44 பேர் குரல் வளையை அறுத்து கொடூர கொலை

இலங்கை ஊடகவியலாளர் வீட்டில் குற்றக்கும்பலுடன் போலீஸ் மோதல்

Sri Lankan editor held at knifepoint as home searched சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டில் சனிக்கிழமை அதிகாலை ஆயுதம் தாங்கிய குழுவினரால் கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனாலும், போலீஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து கொள்ளையர்கள் மீது போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இதில், ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் சிலர் படுகாயமடைந்தனர். கொழும்பு பம்பலப்பிட்டியின் டிக்மன் வீதியிலுள்ள ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழு, அவரின் மகளையும், தாயையும் கத்திமுனையில் வைத்துக் கொண்டு பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் எங்கே என்று கேட்டுள்ளனர். குறித்த சமயத்தில் மந்தனாவின் கணவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வீட்டுக்கு திரும்பியதும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்கிறது என்று உணர்ந்து போலீஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த போலீஸார் ஆயுதம் தாங்கிய கொள்ளைக்குழுவை…

Read More இலங்கை ஊடகவியலாளர் வீட்டில் குற்றக்கும்பலுடன் போலீஸ் மோதல்

அமெரிக்காவில் இறுதி சடங்கு முடிந்த பிறகு உயிரோடு திரும்பிய பெண்

US woman turns up alive after her own funeral   அமெரிக்காவில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டு இறுதி சடங்கு முடிந்த பின்னர் ஒரு பெண் உயிரோடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிலடெல்பியாவை சேர்ந்த 50 வயது பெண்ணான ஷரோலின் ஜாக்சன் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை முடித்துள்ளனர்.கடந்த மாதம் 20 ஆம் தேதி, தெருவில் கிடந்த ஒரு சடலத்தை ஷரோலின் ஜாக்சன் என அவரது மகன் மற்றும் ஒரு சமூக சேவகர் அடையாளம் காட்டி சடலத்தை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று இம்மாதம் 3 ஆம் தேதி அனைத்து இறுதி சடங்குகளையும் முடித்து புதைத்துள்ளனர்.  இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஷரோலின் ஜாக்சன் ஒரு மருத்துவமனையில் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரிந்த பிறகு, யாருக்கு இறுதி…

Read More அமெரிக்காவில் இறுதி சடங்கு முடிந்த பிறகு உயிரோடு திரும்பிய பெண்

டுவிட்டரில் நடிகர் விஜய் பெயரில் விஷமிகள் பொய் தகவல்

news from Twitter regarding Actor vijay in politics is False சென்னை: விஜய் ட்விட்டரில் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டதென்றும் தெரியவில்லை என்று விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு டுவிட்டர் இணையதளத்தில் கணக்கு வைப்பே இல்லை அவர் கூறியதாக வந்த செய்தி பொய்யான ஒன்று என அவர் தரப்பு செய்திகள் தெருவிக்கின்றன நடிகர் விஜய் தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்றும் திடீர் எச்சரிக்கை விடுத்ததாக இணையத்தில் வெளிவந்தது . அவர் பெயர் கொண்ட டுவிட்டர் தளத்தில், “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம், எனது ரசிகர்கள் யாரும் அரசியலில் ஈடுபட வேண்டாம். இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம்…

Read More டுவிட்டரில் நடிகர் விஜய் பெயரில் விஷமிகள் பொய் தகவல்

நாடாளுமன்றத்துக்கு தேர்வானார் நடிகை ரம்யா

Congress wins Karnataka by-polls: Actress Ramya wins Mandya seat   கர்நாடகாவில் உள்ள இரு மாக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மாண்டியாவில் போட்டியிட்ட பிரபல நடிகை ரம்யா, மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் புட்டராஜுவை விட 67 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். அதேபோல பெங்களூர் ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி கே சுரேஷ், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியை ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனான, குமாரசாமி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதையடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல மாண்டியா நாடாளுமன்ற…

Read More நாடாளுமன்றத்துக்கு தேர்வானார் நடிகை ரம்யா

திடீரென ஓய்வு பெறுகிறார் மைக்ரோசாப்டின் CEO

microsoft ceo steve ballmer retire soon அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீவ் பால்மர் பதவி வகித்து வருகிறார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்சின் நீண்டநாள் நண்பரும், நம்பிக்கைக்குரியவரும் ஆவார். இந்நிலையில் ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சிஇஓ தேர்வு செய்யப்படும்வரை ஸ்டீவ் பால்மர் பதவியில் நீடித்திருப்பார். புதிய சிஇஒ தலைமையின் கீழ் புதிய உத்திகளுடன் சந்தையில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் மைக்ரோசாப்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. microsoft ceo steve ballmer retire soon In a surprise move, Microsoft on Friday announced that CEO Steve…

Read More திடீரென ஓய்வு பெறுகிறார் மைக்ரோசாப்டின் CEO