நாடாளுமன்றத்துக்கு தேர்வானார் நடிகை ரம்யா

Congress wins Karnataka by-polls: Actress Ramya wins Mandya seat

 

கர்நாடகாவில் உள்ள இரு மாக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

மாண்டியாவில் போட்டியிட்ட பிரபல நடிகை ரம்யா, மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் புட்டராஜுவை விட 67 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.

அதேபோல பெங்களூர் ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி கே சுரேஷ், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியை ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனான, குமாரசாமி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

அதையடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல மாண்டியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வராயன் சுவாமி, சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த இரு தொகுதிகளும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கோட்டையாக கருதப்படுபவை. இந்த இருதொகுதிகளிலும் போட்டியிடாத பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தள் வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது.

Congress wins Karnataka by-polls: Actress Ramya wins Mandya seat

 

Ruling Congress party candidates on Saturday surged ahead of JDS rivals maintaining good leads in their opponent’s stronghold in the prestigious bypolls for the Mandya and Bangalore rural Lok Sabha seats.

Multi-lingual actress and Congress candidate Ramya was ahead with 33,000 votes over her rival C S Puttaraju of JDS in the Vokkaliga heartland of Mandya.

In Bangalore rural, D K Suresh of Congress had established a lead of over 42,000 votes against JDS’ Anita Kumaraswamy, wife of former Chief Minister H D Kumaraswamy, who had won the seat in the last Lok Sabha poll before resigning after his election as an MLA in the May Assembly polls.

Both Ramya, making her electoral debut, and Suresh have been maintaining comfortable margin, as counting of votes was taken up this morning.

The by-polls had been turned into a prestigious battle between the Congress which swept to power in the May Assembly polls and JDS.

The BJP had backed JDS candidates in the two segments. The by-poll to Mandya was necessitated following the resignation of N Cheluvarayaswamy after he became MLA.

Suresh is the brother of senior Congress leader and MLA D K Shivakumar.

Mandya is a bastion of JDS, which won five of the eight Assembly seats in the district in the May elections.

In Bangalore rural, where Kumaraswamy had won by 1.3 lakh votes in the 2009 Lok Sabha polls, the Congress has secured the support of Samajwadi Party MLA, C P Yogeeshwara, who had defeated Anita Kumaraswamy in the May polls.

 

Related posts