வெயில்நோய்களில் இருந்தும் தப்பிக்க பூசணிக்காய் அவல் சாலட்

pumpkin Aval salad தேவையான பொருட்கள்: 1. பூசணிக்காய் – 1 2. அவல் – 1 கிலோ 3. தயிர் – 4 லிட்டர் 4. நறுக்கிய குடைமிளகாய் – 100 கிராம் 5. நறுக்கிய கொத்தமல்லி – 1 கப் 6. உப்பு & மிளகு – தேவையான அளவு செய்முறை: பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும். அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும். பூசணிக்காய் தயிர்அவல் ரெடி! விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும். தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்த நேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். pumpkin Aval…

Read More வெயில்நோய்களில் இருந்தும் தப்பிக்க பூசணிக்காய் அவல் சாலட்

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி பெட்ரோல் பங்கை இரவு மூட முடிவு

Government decides to close the petrol pumps at night பெட்ரோல் பங்குகளில் டீசல், பெட்ரோல்  விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க இரவு 8:00 மணி முதல் காலை 8:00 மணி வரை வரை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது . இதன் படி  16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பரிந்துரைத்துள்ளார் . அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு  நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மத்திய அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக  நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க மத்திய அரசு போராடி வருகிறது.அதிக மக்கள் தொகையுள்ள இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிள்…

Read More ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி பெட்ரோல் பங்கை இரவு மூட முடிவு

அரசு ஊழியர்களுக்கு 3ஆண்டுக்கு பின் 10% அகவிலைப்படி உயர்கிறது

After 3 years government employees get 10% dearness allowance தற்போது மத்திய அரசு ஊழியர்களின்  அடிப்படை சம்பளத்தில் 80 சதவீதமாக அகவிலைப்படி உள்ளது. இதை 10 % உயர்த்தி  90 % மாக ஆக்க மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அளவுக்கு அகவிலைப்படி உயர்வு செய்து இந்த மாதம் வெளியிடபடுகிறது.   தொழிற்சாலை ஊழியர்களுக்கான இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (ஜூன் மாதம்) திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி கொடுக்கபடுகிறது. கடந்த, ஜனவரி முதல் அமலுக்கு வந்த 8 % அகவிலைப்படிஉயர்வால்  72 % தில்  இருந்து  80 % மாக உயர்த்தப்பட்டது. தற்போது 10 % மானால் 90%த்தை எட்டும். இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்கள்.ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி…

Read More அரசு ஊழியர்களுக்கு 3ஆண்டுக்கு பின் 10% அகவிலைப்படி உயர்கிறது

கல்லூரி விழாவுக்கு மேற்குவங்காள மந்திரிக்கு பொதுமக்கள் அடி–உதை

West Bengal minister severely beaten up by public and held hostage ராம்புரத்: மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் ராம்புரத் அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி நூர் ஆலம் சவுத்ரி வந்தார். அப்போது அங்கே கூடிய பொதுமக்கள் மந்திரியை பிடித்து அடித்து உதைத்து, கல்லூரி அறை ஒன்றில் சிறை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் படுகாயமடைந்த மந்திரியை மீட்க விரைந்தனர்.  ஆனால் போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, கல்லூரி வாசலையும், அந்த ஊருக்கு செல்லும் சாலைகளையும் பொதுமக்கள் அடைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க போலீசார் அனுப்பி வைத்த மருத்துவ வேனையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி…

Read More கல்லூரி விழாவுக்கு மேற்குவங்காள மந்திரிக்கு பொதுமக்கள் அடி–உதை

சென்னை முகப்பேரில் விடுதலைப் புலிகள் இருவர் கைது

Two former LTTE cadres arrested in chennai Mogappair சென்னை அண்ணாநகர் முகப்பேரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர்முகப்பேரில்  கோல்டன்ஜார்ஜ் நகரில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி 2 பேர் தங்கியிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் க்யூ பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை அங்கு சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (34), கோபி (30) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு மற்றும் வான்படையில் முக்கிய நிர்வாகிகளாக இருந்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாம். மேலும், கடந்த ஆண்டு பம்மல் சங்கர்நகரில் ஒரு வீட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டபோது, இவர்கள்…

Read More சென்னை முகப்பேரில் விடுதலைப் புலிகள் இருவர் கைது

மகளை விபசாரத்தில் தள்ளிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை

forcing minor daughters into prostitution, Mother sentenced சென்னை: பெற்ற மகள்களை விபசாரத்தில் தள்ளிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி பேரலை வீசியது. இதில் பலர் உடமைகளை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் ஆட்கடத்தல், விபசாரம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நீதி பணிக்குழு, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்தது. அப்போது இந்த ஆய்வு குழுவினர், புதுச்சேரியில் ஆனந்த் என்ற விபசார புரோக்கரை சந்தித்தனர். விபசாரத்தின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக, விபசாரத்துக்கு பெண் கேட்டு ஆனந்திடம் நடித்தனர்.  அவர் தமிழ் என்ற மற்றொரு நபரிடம் அவர்களை அழைத்து சென்றார். அதன் பிறகு, அந்த வெளிநாட்டவர்களுக்கு கண்ணனை தமிழ் அறிமுகம் செய்து…

Read More மகளை விபசாரத்தில் தள்ளிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிரியாவில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்

Indian citizens in Syria to return India:  India has advised its citizens in Syria to leave the West Asian country வாஷிங்டன்: ஓராண்டுக்கும் மேலாக சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவம் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இதில் பலியாகினர். டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் கடந்த மாதம் சிரிய ராணுவம் நடத்திய ரசாயன குண்டு தாக்குதலில் 1300க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியானதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து அங்கு ஐநா பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிரதமர் டேவிட் கேமரூன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சிரியா மீது போர் தொடுக்கும் திட்டத்தில் இருந்து இங்கிலாந்து பின்வாங்கியது. எனினும், சிரியா மீது ராணுவ…

Read More சிரியாவில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்

10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3முதியவர்கள் கைது

Tuticorin police arrested 3 elders for sexually harassing 10 year old girls தூத்துக்குடியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக மூன்று முதியவர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழந்தது. இந்நிலையில், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு…

Read More 10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3முதியவர்கள் கைது

பெண்ணை அடித்து உதைத்து கற்பழித்த 2போலீஸார் உள்பட4 பேர் கைது

woman gang raped and robbed two constables among four arrested in Noida. Police have arrested 4 persons in this regard, among them 2 are policemen. நொய்டா: டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து கற்பழித்த 2 போலீஸார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் ஒரு பெண். அவரை ஒரு கும்பல் கற்பழித்து அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்று விட்டது. இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், நான் குடியிருந்த அதே குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபர் போலீஸ் வேலையில் சேருவதற்கு தயாராகி வந்தார். அவர்…

Read More பெண்ணை அடித்து உதைத்து கற்பழித்த 2போலீஸார் உள்பட4 பேர் கைது

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை..

 Navaneetham pillai condemns Srilankan Government and sri lanka rejects navaneetham pillai demands. இலங்கையில்  “பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மோசமான நிலையில் – பயண முடிவில் நவநீதம்பிள்ளை  இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள், இலங்கையில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவ்வாறு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.  நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்கிளடம் பேசிய போதே இதனை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது. இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது. போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில்,…

Read More நவநீதம்பிள்ளை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை..