நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை – ஆடுகள் கொன்று குவிப்பு ….

more than 5,000 buffaloes, sheeps, goats and other Birds animals slaughtered in Nepal animal sacrifice ritual நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை-ஆடுகள் கொன்று குவிப்பு …. காட்மாண்டு, நவ. 29– நேபாள கால்நடை பலி திருவிழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன. நேபாள நாட்டின் பாரா மாவட்டத்தில் இருக்கும் பரியபூர் எனும் கிராமத்தில் கதிமாங் அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஓர் முறை மிகப்பெரிய கால்நடைகளை பலிகொடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கால்நடை பலி திருவிழா நேற்று துவங்கியது. 2 நாட்கள் மட்டும் நடக்கும் இந்த பலி திருவிழாவில் பல்லாயிரகணக்கான கால்நடைகள் பலியிடப்படுகின்றன. தலா ஓர் பன்றி, புறா, வாத்து, சேவல், எருமை போன்றவற்றை…

Read More

கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…

Kerala planned new Pambar : T N government moved to the Supreme Court seeking directions to restrain Kerala from proceeding with the construction of a dam with a storage capacity of two tmcft across river Pambar at Pattissery in Idukki district. புதுடெல்லி: கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் அமராவதி அணை 1958-ம் ஆண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும்…

Read More

இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…

Read More

சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி…

Read More

தாயின் சடலத்துடன் செல்பி எடுத்துகொண்ட மகன்!

Lebanese takes selfie with dead mother… after digging up grave லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதிலும்,…

Read More

ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.

40 people were killed in Afghanistan Volley ball tournament and about 60 people seriously injured ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம். ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இருக்கும் பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான (கை பந்து ) வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த கைபந்துப்போட்டியை காண ஏராளமான மக்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். அப்பொழுது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்ட பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டார்கள். மேலும் சுமார் 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.…

Read More

மங்கள்யான் 2014ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஓன்று 'டைம்' பத்திரிகை பாராட்டு

Mangalyaan Among Best Inventions of 2014: TIME Magazine 2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான் என்று டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலமும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து டைம்ஸ் பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது, யாருமே முதல் முறையில் செவ்வாய்க்கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பவில்லை. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா தோல்வி அடைந்தது. ஆனால் செப்டம்பர் 24ம் தேதி இந்தியா அதை சாத்தியமாக்கியது. அன்று தான் மங்கள்யான் செவ்வாய்கிரகத்திற்குள் நுழைந்தது. வேறு எந்த ஆசிய நாடுகளாலும் செய்ய முடியாத சாதனையை இந்தியா செய்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் பட்டியலில் 2 இந்தியர்களின் கண்டுபிடிப்புகளும் இடம்பிடித்துள்ளன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள…

Read More

மத்தியப் பிரதேசத்தில் சென்ற ஓராண்டில் மட்டும் 10,577 குழந்தைகள் மாயம்

10,577 FIRs filed on missing children in one year, MP govt tells SC மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 90 சதவீதம் குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 3370 பெண் குழந்தைகள்…

Read More

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கண்டித்தும், 5 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம்…

Read More

ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிப்பு.

ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா  நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தற்சமயம் நலமாகி வருவதாகவும், பொதுமக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை எனவும் இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது, லைபீரியா நாட்டில் இருந்த அந்த நபருக்கு எபோலா நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளார். எனினும் அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு புது தில்லியில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவருடைய நிலைமை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருகிறார்கள். ஆகவே, பொது மக்கள் எவரும் அச்சம் கொண்டு பீதியடைய அவசியம் இல்லை என அவர்கள் கூறினார்கள். மேலும் எபோலா நோய் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த நபருக்கு டெல்லியில்…

Read More