mother killed trying to save sons சென்னையில் தனது பிள்ளைகளை காப்பாற்ற முயன்ற தாய் எரித்து கொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஒட்டேரி அருகே இருக்கும் சுவாமிதாஸ்புரத்தில் வாழும் தண்டபாணி (வயது 40) தினமும் மது அருந்திவிட்டு, அப்பகுதியில் உள்ள மக்களிடம் தகராறு செய்து வம்பு வளர்ப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு தகராறு செய்தார். இதனால் அப்பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் சார்லஸ் மற்றும் விவேக் ஆகியோர் குடிகார தண்டபாணியை கண்டித்துள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி பின் அடிதடியாகி, சகோதரர்கள் இருவரும் குடிகார தண்டபாணியை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட தண்டபாணியின் உறவுக்காரர்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தார்கள். இந்தி கண்டு பயந்து போன சகோதர்களின் தாயார் மோட்ஷா (வயது 48) தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
வீட்டில் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய பா.ஜ.க பிரமுகர் கைது
Attempt to boost his image lands BJP leader in jail கோயம்புத்தூர் வடவள்ளியில் தமது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடகமாடிய பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ராமநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வடவள்ளி சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியை சேர்ந்தவர் ராமநாதன். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கோவையில் உள்ள இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து ராமநாதனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி இரவில் ராமநாதன் தங்கி இருக்கும் வீட்டின் மேல் பகுதியில் டமார் என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர் சென்று பார்த்தபோது…
Read Moreவரும் 7ம் தேதி முதல் ரயில் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
Indian Railways to increase passenger fare, freight tariff by 2 per cent பயணிகளின் இரயில் பயண கட்டணத்தை 2% முதல் 3% வரை வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் உயர்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய ரயில்வே பட்ஜெட்டில், டீசல் விலைக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒரு முறை பயணிகள் மற்றும் சரக்கு இரயில் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உயர்த்தப்பட்ட சரக்கு ரயில் கட்டணம், மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 15 % உயர்த்தப்பட்டது. நேற்று பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த மத்திய இரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பயணிகள் இரயில் கட்டணத்தை கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில், பயணிகளின் இரயில்…
Read Moreஉத்தரபிரதேசத்தில் தேர்வில் தோல்வியுற்ற சி.ஏ மாணவர் தற்கொலை
CA student commits suicide in Uttar Pradesh at Ghaziabad railway station உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இளைஞர் தனது பெற்றோர்கள் கண் முன்னே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர் ராகுல் (வயது 21) சி.ஏ தேர்வில் கடுமையாக முயன்று படித்தும் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தனது பெற்றோர்கள் திட்டியதை தாங்கிக்கொள்ள முடியாததால் இந்த விபரீத தற்கொலை முடிவை எடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் (வயது 21). சி.ஏ படிப்பு படித்துக் கொண்டிருந்த இவர் நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரை அவரது பெற்றோர்கள் திட்டியுள்ள்ளர்கள். இதனால் மனமுடைந்து ஆத்திரப்பட்ட அவர் வீட்டைவிட்டே வெளியேறினார். இதை தொடர்ந்து மாணவர் ராகுலின் தந்தை…
Read Moreஅமெரிக்காவில் அழுக்கு சேராத புதிய வகை துணி கண்டுபிடிப்பு
Military Invents Self-Cleaning Clothes, Take That Tide Detergent ஆராய்ச்சி மையம் ஒன்று அமெரிக்க ராணுவத்தில் ‘‘யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட் இன்ஜினியரிங் சென்டர்’’ எனும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மூத்த விஞ்ஞானி திரு.தாவுரங் என்பவர் ஒரு புதிய வகை துணியை உருவாக்கியிருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் ஒவ்வொரு நபருக்கும் ஆண்டுக்கு 5 செட் சீருடைகள் வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என பல இடங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்களது ஆடைகளை பணிபுரியும் இடங்களில் துவைத்து சுத்தம் செய்து கொள்ள வசதிகள் ஏதும் கிடையாது. ஆகையால் பல ராணுவ வீரர்கள் தங்களது அழுக்குக்கான உடுப்புகளோடு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கவேண்டியுள்ளது. ஆகையால் ராணுவ வீரர்களுக்கு துவைத்து சுத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லாத துணியை உருவாகினால்…
Read Moreகணவன் மனைவி ஈரோடு தனியார் மருத்துவமனையில் தற்கொலை
A young couple committed suicide in Erode after the husband was suffering from prolonged illness ஈரோடு மாவட்டதில் உள்ள மொடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த இளம் தம்பதியர் தற்கொலை செய்துகொண்டனர். இதில் கணவருக்கு வந்த இதயநோயினால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டனர் என அறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், மொடக்குறிச்சி எனும் பேரூரின் அருகே உள்ள சிற்றூர் எழுமாத்தூர். எழுமாத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி திரு.விஜயராஜ்.(வயது 27). இவர் இதய நோயால் அவதியுற்று வந்தார். இவரது மனைவியின் பெயர் கெளதமி ( 23 வயது). தம்பதியினர் இருவரும் இதய நோய் சிகிச்சைக்காக பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்தனர். பல மருத்துவர்களை கண்டு வந்தும் திரு.விஜயராஜின் இதய கோளாறு தீரவில்லை. இதனையடுத்து ஈரோட்டில் உள்ள வீரப்பன்…
Read Moreசீன நாட்டை இந்தியா விரைவில் பின்னுக்குத்தள்ளும்
India will beat china in population growth in the year 2050 சீன நாட்டை இந்தியா மக்கள் தொகை பெறுக்கத்தில் பின்னுக்குத் தள்ளி முன்னேறும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வு அறிக்கை தெரிவித்திருக்கிறது. 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி முதலிடத்தை பிடிக்கும் எனவும் அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2-ம் இடத்திற்கு தள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அப்போது உலகத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 970 கோடியாக இருக்கும் எனவும் கூறுகிறது. கடந்த 200 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகை எழு மடங்கு உயர்ந்து தற்சமயம் 710 கோடியாக இருக்கிறது. தற்சமயம், உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் 3-ல் ஒருவர்…
Read Moreஇங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர்ச்சில் ரசாயன ஆயதங்கள் சர்ச்சை
Churchill wanted to use chemical weapons against Indian tribes இரசாயன ஆயுதங்களை கொண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதி பழங்குடியின மக்களை கொல்ல இங்கிலாந்தின் முன்னால் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் திட்டமிட்டிருந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபல வரலாற்று புத்தக ஆசிரியர் கைல்ஸ் மில்டன். இவர் ஸ்காட்லாந்தின் விக்டவுனின் நடந்து கொண்டிருக்கும் விக்டவுன் புத்தக விழாவினில் கலந்து கொண்டு தமது புதிய புத்தகமான ரஷ்யன் ரூலெட் பற்றி விளம்பரம் செய்திருந்தார். அங்கு அவர் உரையாடுகையில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இரசாயன ஆயுதம் பயன்படுத்துவதில் அதிகம் விருப்பம் கொண்டு இருந்தார்.20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவினுடைய வடகிழக்கு பகுதியினில் தொல்லை தந்த பழங்குடியின மக்களை இரசாயன ஆயுதங்களை கொண்டு கொன்று குவிக்க சர்ச்சில் விருப்பம் கொண்டிருந்தார். இது குறித்த கட்டளை குறிப்பு (மெமோ) ஒன்றை அவர் இந்திய…
Read Moreஎஸ்.வி சேகருக்கு தொலைபேசியில் பெண் குரலில் கொலை மிரட்டல்
Actor cum politician S V Shekar was received life threat from some unknown women திரைப்பட மற்றும் நாடக நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்ததால் அவர் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேகரின் வீடு, சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் உள்ளது. இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்கள் வீசி தாக்குதல் நடத்தியும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவர் பட்டினபாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டபூர்வ…
Read Moreஅக்டோபர் 5 முதல் பெட்ரோல் நிலையங்களில் சமையல் கேஸ்
You can buy mini gas cylinders at petrol pumps from 5th October நாட்டின் பெரு நகரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள், “நிறுவனத்துக்குச் சொந்தமான – நிறுவனத்தால் நடத்தப்படும்’ (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் கிடைக்கும். இது நாட்டில் மொத்தமுள்ள 47,000 பெட்ரோல் நிலையங்களில் 3 சதவிகிதம் மட்டுமே. இது சந்தை விலைக்கு விற்கப்படும். தற்போது மானிய விலையாக 14.2 கிலோ எடை சிலிண்டர் ரூ.410-க்கு விநியோகிக்கப்படுகிறது. சந்தை விலையானது அதைவிட இரு மடங்குக்கு மேல் அதிகமாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையை அக். 5 ஆம் தேதி பெங்களூரில்…
Read More