தேனி அருகே 29 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மகாத்மா காந்தி கோவில்

where the mahatma is no less than god கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டிஎனும் கிராமத்தில், மகாத்மா காந்திக்கு கோயில் ஒன்றை கட்டி அதற்கு வழிபாடும் நடத்த படுகிறது.தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள காமயகவுண்டன்பட்டி எனும் கிராமத்தில் பல பேர் சுதந்திர போராட்டம் செய்து வந்தார்கள்.ஆகையால், தேசபக்தியும், காந்தியின் மேல் கொண்ட அளவுகடந்த அணிபின் வெளிப்பாடாக காமயகவுண்டன்பட்டி கிராம மக்கள், அந்த தேசத்தந்தைக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்து வருகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த பரமசிவம், சக்திவடிவேல், பாண்டியராஜ், கிருஷ்ணசாமி, பழனிவேல், ஈசப்பர், சாமாண்டி, ராமசாமி, குந்திலிராமசாமி, கிருஷ்ணசாமி, வீராச்சாமி, சுருளியாண்டி, சுப்பிரமணி, சுப்புசாமி உள்பட 80 க்கும் மேற்பட்டோர் தீவிரமாக பங்கேற்றனர். இந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாகவும், காந்திக்கு உருவசிலை வடிக்கவும், கோவில் கட்டவும்…

Read More

2 வயது சீனகுழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு கண்டுபிடிப்பு

‘Pregnant’ Boy, 2, ‘Gives Birth’ To His Parasitic Twin    சீனாவில் 2 வயது குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பிறகு ஆராய்ந்த போது அந்த குழந்தையின் தாய் கருவுற்ற போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது எனவும் ஆனால், ஒரு கரு முட்டை இவனது வயிற்றுனுள் வளர்ச்சி பெறாமல் நின்றுள்ளது அறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள குவாங்சி எனும் மாகாணத்தை சேர்ந்த தம்பதியினது  2 வயது மகன்  ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல் சாதரணமாகவே பிறந்தான். அவனுக்கு படிப்படியாக உடல் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் மிகவும் பெருத்து காணப்பட்டது. மூச்சு திணறலால் குழந்தை கஷ்டப்பட்டது. வழக்கமாக குழந்தைகளுக்கு வரும் ‘பிரைமரி காம்ப்ளக்ஸ்’…

Read More

இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான 3 குழந்தைகள் பிறப்பு

U.K. Couple Welcomes Rare Identical Triplets இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு, சோதனையில் ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் கர்ப்பப் பையில் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுபோன்று ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் உருவாவது ஆபூர்வமான மருத்துவ விந்தை எனவும், 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கில்பெர்ட்டை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள், இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என்பதைக் கண்டறிந்தனர். எனவே, இக்குழந்தைகளை…

Read More

காதலன் மீது ஆசிட் வீசிய பெண் கைது

Girl throws acid on lover for refusing to marry her உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை மணக்க மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்னி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும், தர்மேந்திரா என்னும் நபரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயிக்க முடிவுசெய்தனர். இந்த தகவலை தனது காதலன் தர்மேந்திராவிடம் தெரிவிக்க அப்பெண் சென்றுள்ளார். அப்போது, தனது காதலை மறுத்த தர்மேந்திரா, அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அந்த பெண் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அப்பெண் நேற்று தர்மேந்திரா மீது ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்தினார். பலத்த காயமடைந்த தர்மேந்திரா மாவட்ட மருத்துவமனையில் இருந்து தற்போது லக்னோ மருத்துவ கல்லூரி…

Read More

தாய் 2 மகள்களுடன் சமையல் வாயு சிலிண்டரில் தீ வைத்து தற்கொலை

A woman committed suicide with her two kids in Sankarankovil நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகாவில்  கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரில் சொக்கலிங்கபுரம் தெற்கு தெருவில் வாழ்த்து வருபவர் திரு.கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவியின் பெயர் திருமதி.பத்மா. இந்த தம்பதியினருக்கு  9 வயது மற்றும் 7 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். திரு.கோபாலகிருஷ்ணன் கேரளாவில் மாட்டு பால் கறக்கும் வேலை செய்து வருகின்றார். இவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்தை காண ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திரு.கோபாலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு குடும்பத்தை காண வந்தார். அன்று முதல் கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை ஏற்பட்டு வந்ததது. நேற்று இரவு மீ்ண்டும் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் திரு.கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்த தகராறில்  மன வருத்தம்…

Read More

நைஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 50 மாணவர்கள் படுகொலை

50 Students Killed in Nigerian Terrorist Attack நைஜீரியாவில்  தீவிரவாதிகள் கல்லூரி மாணவர்கள்  விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த 50 மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொலை செய்தனர். நைஜீரியாவில் குஜ்பா எனும் கிராமத்தில் இருக்கும் வேளாண்மை கல்லூரி மாணவர் விடுதிக்குள் திடீரென நுழைந்த தீவிரவாதிகள், உறங்கிக்கொண்டிருந்த  மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதல் நடத்தினார்கள். அலறியடித்துக் கொண்டு உயிருக்கு பயந்து ஓடிய கல்லூரி மாணவர்களை துரத்தி சென்று தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றார்கள். பல மாணவர்கள் ஓடி சென்று அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டார்கள், எனினும் தேடிச்சென்று அவர்களை தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் 50 மாணவர்கள் இறந்தனர். 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள். சம்பவம் பற்றி அறிந்தவுடன் ராணுவமும், காவல்துறையினரும் அங்கு விரைந்து சென்றார்கள். அதற்குள் அந்த  தீவிரவாதிகள் வாகனங்களில் ஏறி தப்பினர்.  அந்த கல்லூரிக்கு வந்த…

Read More

அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் போதைப் பொருள்

3-year-old US girl brings 14 bags of pot to school அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் 14 பொட்டலங்களில் போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்லம் பகுதியில் ஒரு பள்ளியில் படிக்கும் மூன்று வயது நிரம்பிய ஒரு சிறுமி தினமும் செல்வது போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த குழந்தையின் பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு காரணம் அந்த குழந்தையின் பையில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனும் போதைப் பொருள் இருந்தது. இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு உடனே தகவல் அளித்தனர். அவர்களும் உடனே பள்ளிக்கு விரைந்து சென்று போதைப் பொருளை பறிமுதல் செய்தார்கள். அந்த சிறுமியிடம் விசாரணை செய்து அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமியினுடைய தந்தையின் நண்பர் மெனா(24) என்பவர் அந்த போதைப் பொருளை சிறுமியினுடைய…

Read More

வண்டி ஒட்டும் போதே நெஞ்சு வலியால் இறந்த லாரி ஒட்டுநர்

a mini lorry driver died while driving the vehicle ஈரோடு மாவட்டம், பெருந்துறை பக்கமுள்ள  உத்தண்டி கிராமம், கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன், வயது- 48. அவரது மனைவி கீதா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மாரப்பன், மினி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சென்னையிலிருந்து, கோயமுத்தூருக்கு, பிளாஸ்டிக் சீட்களை தன்னுடைய மினி லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். சனிக்கிழமை இரவு சங்ககிரி அருகே உள்ள விராச்சி பாளையம் அருகே சென்றபோது, மாரப்பனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால், லாரியை சாலையோரம் நிறுத்தியவர், வண்டியை ஆஃப் செய்ய முடியாமல், பிரேக்கை காலால் அழுத்தி பிடித்த நிலையில் உயிரிழந்தார். இரவு முழுவதும், வண்டி ஓடிக்கொண்டே இருந்தது. அடுத்த நாள் காலை, வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருப்தை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து, டிரைவர் மாரப்பனை…

Read More

8 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த நைஜீரிய நபர் டெல்லியில் கைது

nigerian caught with cocaine worth rs 40 crore at 5 star hotel in delhi டெல்லியில் நைஜீரிய நாட்டவர் ஒருவரிடம் இருந்து 8 கிலோ எடையுள்ள சுமார் ரூ40 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று நைஜீரிய நாட்டவர் ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அவர் டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அவரது உடமைகள் வேறொரு விமானத்தில் வந்துள்ளன. பின்னர் விமான நிலையத்துக்கு வந்து உடைமைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஹோட்டலில் சேர்ப்பித்துவிடுமாறு விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஞ்சிய உடைமைகளுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு நைஜீரிய நாட்டவரிடம் உடைமைகளை கொடுத்து சோதனை…

Read More

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்கள் வாழ்க்கை சிக்கல்

Failed marriages with Pak nationals leave 226 Indian women in the lurch வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்யும் இந்திய பெண்கள் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானியரை திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.அவர்களில் 226 பெண்கள் தற்போது தங்கள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களில் 6 பேர் இந்துக்கள். விவாகரத்து மற்றும் கணவரின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் அவர்கள் தங்களது பிறந்த மண்ணுக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். எனவே, அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே உருவாகியுள்ள பிரச்சினையில் அவர்களை வைத்து பராமரிப்பதில் குடும்பத்தினரும், நண்பர்களும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.அதனால் அவர்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது. எனவே, நிரந்தர இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை நீண்ட…

Read More