ஜப்பானில் மழையால் மூழ்கிய கிராமங்கள் 5000 பேர் வெளியேற்றம்

Japan Flood: 5,000 Japanese told to evacuate due to rains கடந்த வாரம் முதல் ஜப்பானில்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனிடையே ஒரு புயல் தாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  5000 பேர் பாதுகாப்பிற்காக ஜப்பானிலிருந்து வெளியேறியுள்ளனர்.  இதனால்வெள்ளத்தில் குமாமோட்டோ மாகாணத்தின் பல பகுதிகள் சூழ்ந்துள்ளது. மழையின் வேகம் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. ஆறுகளின் கரைகளில்  இதனால் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் மற்றும் வீடுகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  நான்கு லட்சம் பேர் கியூஷூ தீவில் மட்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் உள்ள முதியவர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர்.  கடற்படை வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள எரிமலையின் அடிவாரத்தில் உள்ள அசோ என்ற இடத்தில், 80 முதல் 100 செ.மீ., அளவுக்கு மழை அளவு பதிவாகியுள்ளது. Japan flood: 5,000 Japanese told to evacuate…

Read More

உளவுத்துறை ஊழியர்களையே ரகசியமாக வேவு பார்க்கிறது அமெரிக்கா

Al-Qaeda tried to infiltrate US intelligence agencies: Report அமெரிக்க உளவுத்துறைக்குள் ஊடுருவ அல்-கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருவதாக சிஐஏ தெரிவித்துள்ளது. இதனால் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து சிஐஏ ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க உளவு அமைப்பு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையில் வேலைகோரி விண்ணப்பிப்போர், வேலையில் சேர்க்கப்பட்டோர் ஆகியோரில் பலர் குறித்தும் சந்தேகம் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் இதில் பணியில் உள்ளவர்களின் பின்னணி குறித்து அடிக்கடி ரகசிய விசாரணை நடத்த வேண்டிய நிலைக்கு சிஐஏ தள்ளப்படுகிறதாம். குறிப்பாக அமெரிக்க உளவு அமைப்பில் பணியில் உள்ள 5ல் ஒருவர் மீது பெரிய அளவில் சந்தேகம் வந்துவிடுகிறதாம். இவர்களுக்கு தீவிரவாத அமைப்புகள், பிற நாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றன…

Read More

உ.பி மாநில ஆசிரமத்தில் 10 பசுக்கள் பலி தீவனத்தில் விஷம்

Gopalgarh : 10 cows die of food poisoning at ashram உ.பி. மாநிலம் மதுரா நகரில் உள்ள கோபால்கர் பகுதியில் ஒரு ஆசிரமத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 பசு மாடுகள் திடீரென இறந்தன. கோபால்கர் பகுதியில் அகந்தானந்த் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் நேற்று பசு மாடுகளுக்குத் தீவணம் போடப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து பிற மாடுகளும் பாதிக்கப்பட்டன. இதில் 10 மாடுகள் பரிதாபமாக இறந்து போயின. அந்த மாடுகள் உண்ட தீவனம் விஷமாகிவிட்டதன் காரணமாக இந்த பசு மாடுகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 24 மாடுகள் உடல் நலம் குன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிற மாடுகளை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆசிரமத்தில் இருந்த பசுக்கள்…

Read More

பாலிவுட் ரசிகர்கள் உருவாக்கிய பிரபுதேவா மெழுகுச்சிலை

Prabhu Deva unveils his wax statue இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பெருமையோடு அழைக்கப்படும் பிரபுதேவாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர் பாலிவுட் ரசிகர்கள். அதனை இன்று திறந்து வைத்த பிரபுதேவா நெஞ்சுருகி ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மும்பை – புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லொனவாலா வேக்ஸ் மியூசியத்தில் பிரபு தேவாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தா பிரபுதேவா ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ச்சியடைந்தார். நடன இயக்குநராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த பிரபுதேவா, பின்பு நடிகராகி, அதன்பிறகு இயக்குநராகவும் ஆகிவிட்டார். தமிழ், தெலுங்கில் அவர் இயக்கிய படங்கள் சரியாகப் போகாததால், இந்திக்குப் போனார் பிரபுதேவா.இந்தியில் இவர் இயக்கிய வாண்டட், ‘ரவுடி ரத்தோர்’, ‘ராமையா வஸ்தாவையா’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ்கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களை டைரக்டு செய்கிறார். பிரபுதேவா நடனத்துக்கு இந்திபட…

Read More

இன்டர்நெட்டும் ஒரு போதை! லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

internet addiction linked depression says study சமீப காலமாக சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், பலருக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது என்றும் அதனால் வாழ்க்கையே விரக்தியாகி விடுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வருகிறது.  இண்டர்நெட் இல்லாவிட்டால் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகிறார்களோ, அதே போலத்தான் இன்டர்நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.  இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர்,…

Read More

ரஷ்யாவின் சி-17 விமானம் இந்திய விமானப்படையில் சேர்ப்பு

C-17 heavy-lift transport plane inducted into IAF  போர் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை சுமந்துச் செல்லக்கூடிய சி-17 ரக விமானத்தை பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணி இன்று இந்திய விமானப் படைக்கு அர்ப்பணித்தார். ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஐ.எல்-76 ரக விமானங்களில்தான் இந்திய வீரர்கள் இதுவரை போர்களுக்கு ராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை அனுப்பி வந்தனர்.இந்த விமானம் 40 டன் எடையுள்ள பொருட்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் ஆற்றல் கொண்டது என்பதால், அதிக எடையை ஏற்றிச் செல்லும் அதிநவீன விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, அமெரிக்காவில் இருந்து 10 சி-17 ரக விமானங்களை வாங்க கடந்த 2011ம் ஆண்டு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 70 டன் (70 ஆயிரம் கிலோ) எடை வரை ஏற்றிக்கொண்டு சவாலான பகுதிகளிலும்…

Read More

நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்ற கார் திடீரென தீப்பிடித்தது

car catches fire outside parliament டெல்லி: நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தின் நார்த் பிளாக்கில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று இன்று மதியம் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து மதியம் 1.45 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 2 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தன. கார் தீப்பிடித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கார் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னால் சதி எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். car catches fire outside parliament A car parked outside the parliament caught fire. Fire…

Read More

13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

13 year old senior student at Lucknow University உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பகதூரின் கடைசி மகள் சுஷ்மா வயது 13. இந்த சிறு வயதிலேயே அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம் ஆண்டில் பிறந்த சுஷ்மா தன் இரண்டரை வயதில் லக்னோவில் நடைபெற்ற ராமாயணம் ஒப்புவித்தல்…

Read More

இந்தியாவில் வரதட்சணையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி

Dowry Deaths: One Woman Dies Every Hour in India இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிர் இழக்கிறார்.தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு தெரிவித்துள்ள இத்தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சார்ந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2007-லிருந்து 2011-க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை தொடர்பான இறப்புகள் பன்மடங்கு அதிகரித்து விட்டன. அதே வேளையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விகிதமும் 35.8-லிருந்து 32 ஆக குறைந்துள்ளது என தெரிய வருகிறது. முன்னெல்லாம் கீழ்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களில்…

Read More

ஷீலா தீட்சித்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.! நீதிமன்றம் உத்தரவு

FIR against Sheila Dikshit : Court orders FIR against Sheila Dikshit for misusing funds for poll ads தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2008ம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் அரசு நிதியை தவறான முறையில் பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. தகவல் கேட்பு ஆர்வலர் விவேக் கர்க், பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் சிறப்பு நீதிபதி நரோத்தம் கௌஷல் விசாரணை மேற்கொண்டார். இந்த இரு மனுக்களிலும் ரூ.22.56 கோடியை 2008ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியாக தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில், ஊழல் தடுப்புச்…

Read More