car catches fire outside parliament
டெல்லி: நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தின் நார்த் பிளாக்கில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று இன்று மதியம் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து மதியம் 1.45 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 2 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தன. கார் தீப்பிடித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கார் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னால் சதி எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
car catches fire outside parliament
A car parked outside the parliament caught fire. Fire tenders rushed to the spot and doused the fire.