13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

13 year old senior student at Lucknow University

13 year old senior student at Lucknow University

உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பகதூரின் கடைசி மகள் சுஷ்மா வயது 13. இந்த சிறு வயதிலேயே அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம் ஆண்டில் பிறந்த சுஷ்மா தன் இரண்டரை வயதில் லக்னோவில் நடைபெற்ற ராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். சிறு வயதில், கடினமான ராமாயணத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்த சுஷ்மா தன் 5 வது வயதில், 10ம் வகுப்பு பாடங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தார். எனினும், 5 வயதில், நேரடியாக, 10ம் வகுப்பில் சேர அனுமதி கிடைக்காததால், 2005 – 06 ல், 9 ம் வகுப்பில் சேர்ந்தார். 2006 – 07ல், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று, நாட்டிலேயே மிகக் குறைந்த வயதில் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி என்ற பெருமையை பெற்றார். அதன் பின் 2009 – 10 ம் ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று தன், 10 வது வயதில் லக்னோ பல்கலை அனுமதியுடன் பி.எஸ்சி., விலங்கியல் மற்றும் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தார். இந்த ஆண்டு ஜூனில் வெளியான பி.எஸ்சி., பட்டத் தேர்வு முடிவுகளில் 66 சதவீத மதிப்பெண்களைப் பெற்று பட்டப் படிப்பை நிறைவு செய்தார். இதன் பின் அதே லக்னோ பல்கலையில் எம்.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படிப்பில் சேர விண்ணப்பித்தார். இதிலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே அதிலும் 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார். இந்த தகவல் அறிந்த பலரும் சுஷ்மாவுக்கு உதவ முன் வந்துள்ளனர்.பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர் சுஷ்மாவின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை அனுப்பும்படி பல்கலை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் சுஷ்மாவின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார் என்று தெரியவருகிறது.

13 year old senior student at Lucknow University

 At an age when she should be in school, the 13-year-old daughter of a poor labourer in Uttar Pradesh has baffled everybody by galloping to a master’s programme in microbiology. Sushma Verma was the youngest ever to pass class 12 exams, at just over 9 years. Now the teen prodigy has finished her graduation and has been named in the merit list for microbiology at the Lucknow University. She begins her master’s classes next week. Behind her remarkable success lies the story of a family determined to educate their children, no matter what it takes. Sushma’s father Tej Bahadur Verma, a daily wage labourer, earns barely two hundred rupees a day to feed a family of five. But when he saw his daughter’s name on the merit list, he paid the initial fee of Rs. 25,000 instantly, not thinking about the rest – at least 75,000 rupees – to be paid later. The family had to sell their land to pay for Sushma’s education. At their one-room home in Lucknow, their most precious possessions are a study table and a second-hand computer. “I think education is important for my children, so I didn’t hesitate in selling the land. We never got the chance to study – I don’t want my children to work as labourers, I will do whatever I can to educate them,” says Verma. It took three years of college for Sushma to get used to studying with “big boys and girls”. “At first, it was intimidating but everyone was really nice to me, so I was okay,” she smiles. Many at her college are shocked to see a senior who looks little more than a schoolgirl. “She is much younger, but I will give her the respect any senior deserves,” said Renu Rathore, a third year science student and a year ‘junior’ to Sushma. Sushma wants to be a doctor and tried for medical college after school but was just too young. Now she plans to give her dream another shot when she turns 18. Age, she says, is just a number.

13 year old senior student at Lucknow University

Related posts