டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்

டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , ராகுல் காந்தியின் அம்மா சோனியா காந்தி மற்றும் மற்றவர் மேல் வழக்கு தொடர்ந்தார்.நேஷனல் ஹெரால்ட் வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு நீதிபதி சமர் விஷால் முன் விசாரணைக்கு வந்தது.காந்தியின் வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியிடம் ஹிந்தியில் பேசினார்.அதற்கு சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் என்றும் நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் அதனால் ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தார். அதற்கு நீதிபதி நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எனவே இரண்டையும் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞரிடம் நீங்கள் பேசும் ஹிந்தி எனக்கு புரியவில்லை என்றும் எனக்கு சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி தான் தெரியும் என்றும் நீங்கள் பேசும் ஹிந்தி உருது கலந்த ஹிந்தி என்று தெரிவித்தார். பிறகு நீதிபதி வழக்கறிஞரை ஆங்கிலத்தில் குறுக்கு விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Related posts