பாலிவுட் ரசிகர்கள் உருவாக்கிய பிரபுதேவா மெழுகுச்சிலை

Prabhu Deva unveils his wax statue

Prabhu Deva unveils his wax statue

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பெருமையோடு அழைக்கப்படும் பிரபுதேவாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர் பாலிவுட் ரசிகர்கள். அதனை இன்று திறந்து வைத்த பிரபுதேவா நெஞ்சுருகி ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மும்பை – புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லொனவாலா வேக்ஸ் மியூசியத்தில் பிரபு தேவாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தா பிரபுதேவா ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ச்சியடைந்தார். நடன இயக்குநராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த பிரபுதேவா, பின்பு நடிகராகி, அதன்பிறகு இயக்குநராகவும் ஆகிவிட்டார். தமிழ், தெலுங்கில் அவர் இயக்கிய படங்கள் சரியாகப் போகாததால், இந்திக்குப் போனார் பிரபுதேவா.இந்தியில் இவர் இயக்கிய வாண்டட், ‘ரவுடி ரத்தோர்’, ‘ராமையா வஸ்தாவையா’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ்கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களை டைரக்டு செய்கிறார். பிரபுதேவா நடனத்துக்கு இந்திபட உலகில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்கள் இந்த மெழுகு சிலையை உருவாக்கியுள்ளனர். இதுபற்றி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள பிரபுதேவா, இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மிகவும் முக்கியமான நாள். என்னுடைய மெழுகுச் சிலையை நான் தொட்டுப்பார்த்தேன். அதை உருவாக்கிய குழுவினருக்கு நன்றி என்று கூறியுள்ளார். லண்டன் மியூசியத்தில் அமிதாப்பச்சன், சச்சின், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் போன்றோருக்கு மெழுகு சிலைகள் உள்ளன. பிரபு தேவாவின் சிலை லண்டன் மியூசியத்தில் உள்ள சிலைகள் போல தத்ரூபமாக இருக்கிறதாம்.

Prabhu Deva unveils his wax statue

Director-actor-choreographer Prabhu Deva unveiled his wax statue today for the Lonavala Wax Musseum. The ace choreographer who is known as the India’s Michael Jackson seems to be touched by this gesture of making a wax statue of him. After unveiling the statue Prabhu Deva tweeted “Today is a very imp day for me. Just unveiled my wax statue for the Lonavla wax museum. I’m touched! Sunil and his team have done a great job with my statue.” Prabhu Deva was known as a dancer and choreographer who later excelled as an actor and director as well. He is known for his works predominantly in Tamil, Telugu cinema, Bollywood, Malayalam and Kannada films. In a career spanning twenty-five years, He has performed and designed a wide range of dancing styles. He has garnered two National Film Awards for Best Choreography. The director Prabhu Deva is currently busy with his upcoming Bollywood flick ‘Rambo Rajkumar’ starring Shahid Kapoor and Sonakshi Sinha. He would also be wielding the megaphone for two more Bollywood projects with Ajay Devgan and Salman Khan.

Industrial Residential and Commercial property for sale in Chennai

Related posts