ராமர் பலம் வர்ணம் பூசிய சேது சமுத்திர திட்டம்: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அறிக்கை

Adams bridge sethusamudram தி.மு.க பெயர் எடுத்துவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே மக்கள் வரிப்பணம் பல கோடி செலவு செய்த பிறகு சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்: இந்திய தீபகற்பம் 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி இல்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளன. இது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள்…

Read More

கர்நாடக சட்டசபை தேர்தல் 2013. 70% வாக்கு பதிவு

Karnataka state assembly election 2013 பெங்களூர் மே 5: கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதாவிற்கும் காங்கிரசிற்கும் கடுமையான போட்டி நிலவும் நிலையில். 70% வாக்கு பதிவானது. 2008 தேர்தலில் 64.91%  பதிவானது குறிப்பிடத்தக்கது. Karnataka state assembly election 2013

Read More

மின்வெட்டு: மே 12-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் கண்டன பேரணி

மின்வெட்டை கண்டித்து தலைவர் விஜயகாந்த் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி தேமுதிக சார்பாக நடத்தவுள்ளார்.   ஞாயிற்றுக்கிழமை மே 5 தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் தொடர்ந்து வரும் கடுமையான மின்வெட்டினையும், அதனால் பாதிப்புக்குள்ளான பின்னலாடை உற்பத்தி மற்றும் தொழில் துறை மந்தநிலையை கண்டித்தும் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி நடைபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டர் சந்திப்பில் இருந்து பேரணி புறப்படும். பின்னர் மாலை 5 மணியளவில் ஊத்துக்குளி பிரதான சாலையில் உள்ள தனலட்சுமி மில் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த்துடன், அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மகளிரணி தலைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றறு பேசுகின்றனர் என அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Read More

2012 ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர அட்டவணை: இலங்கை162 ஆவது இடம்.

reporters without borders Chart 2012 மே 3-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2012 ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை ‘ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 140 ஆவது இடத்திலும், இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அட்டவணையில், பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து 29ம்  இடத்திலும், அமெரிக்கா 32வது இடத்திலும்,ரஷ்யா 148 ஆவது இடத்திலும்.  சீனா 173 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 159 ஆவது இடத்திலும் இருக்கின்றன. reporters without borders Chart 2012

Read More

ஐ.ஏ.எஸ் தேர்வு 2012 கேரள பெண் ஹரிதா வீ குமார் முதலிடம்.

IAS topper harith v Kumar 2012 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கேரள பெண்  ஹரிதா வீ  குமார் முதலிடம்.  இதில் கடந்த முன்று ஆண்டுகளாக பெண்களே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த 97 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  2012 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா முழுவதிலும் மொத்தம் 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்(IAS) பணிகளுக்கு 180 பேரும், ஐ.எஃப்.எஸ்(IFS) பணிக்கு 30 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ்(IPS) பணிக்கு 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச்-ஏப்ரலில் நடந்த நேர்காணல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 2013 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸின் முதன்மைத் தேர்வு இந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. IAS topper harith v Kumar

Read More

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு : 121 கோடி

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932. மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே ஏப்ரல் 30ம் தேதி பாராளுமன்றத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அவ்வறிக்கையில் 1-3-2011 நிலவரத்தின் படி மேற்குறிப்பிட்ட தொகை கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில்…

Read More

42 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா

Australia deports 42 Sri Lankan refugees கொழும்பு:  3 மே 2013: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலியா மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. இலங்கையில் தங்களது வாழ்வுரிமை பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடிபெயர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியா, கனடா, நார்வே, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமாக செல்கின்றனர். முக்கியமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேற முயற்சி செய்யும் இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசு வியாழக்கிழமை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இதுவரை   சுமார் 1000 அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. Australia deports 42 Sri Lankan refugees Colombo: Australia deported 42 Sri Lankan asylum…

Read More

சீன ராணுவம் லடாக் பகுதியில் ஊடுருவல்: பிரதமர் மன்மோகன் சிங் – ராணுவ தளபதி பிக்ரம் சிங் சந்திப்பு

Army chief General Bikram Singh briefed the Cabinet committee புதுடெல்லி 01 மே 2013: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி இருப்பதை தொடர்ந்து, ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து எல்லைப்பகுதி நிலவரம் குறித்து விளக்கி கூறினார். அப்போது, சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்தும், தற்போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர்   கூறினார். அதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிலும் ராணுவ தளபதி பிக்ரம் சிங் கலந்து கொண்டார்.  சீன ராணுவ ஊடுருவல் பிரச்சினை குறித்து விளக்கி கூறினார். அதற்கு தீர்வுகாண ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், தீர்வுக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. Army chief General Bikram Singh briefed the Cabinet…

Read More

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி திமுக தமிழகம் முழுவதும் மே 15ல் பொதுக்கூட்டம்

Sethusamudram Shipping Canal Project சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மே 15-ல் திமுக சார்பில்  தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம். வடசென்னை கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பேச உள்ளார். க.அன்பழகன் கடலூரிலும்,  மு.க.ஸ்டாலின் கரூரிலும், துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர். Sethusamudram Shipping Canal Project

Read More

சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம்: முதல்வர் ஜெயலலிதா

New bus terminus to come at Vandalur சென்னை 01-மே-2013: முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை 30 மே 2013 முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் :- தமது ஆட்சியில் சென்னை மாநகரில் பெருகிவரும் வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தென் மாவட்டங்களுக்கு எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக  செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் இயங்கவும், மேலும் 60 இயக்க படாத பேருந்துகளை நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்ல நீண்ட நேரமாகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் நிலையத்துக்குள்ளும், சுற்றுப் பகுதிகளில் உள்ள முக்கிய…

Read More