42 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா

Australia deports 42 Sri Lankan refugees கொழும்பு:  3 மே 2013: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலியா மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. இலங்கையில் தங்களது வாழ்வுரிமை பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடிபெயர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியா, கனடா, நார்வே, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமாக செல்கின்றனர். முக்கியமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேற முயற்சி செய்யும் இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசு வியாழக்கிழமை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இதுவரை   சுமார் 1000 அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. Australia deports 42 Sri Lankan refugees Colombo: Australia deported 42 Sri Lankan asylum…

Read More