tamil nadu housing board land encroached தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வருடாந்தர தணிக்கை அறிக்கையின் படி மொத்தமாக ரூ.442.99 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாகவும் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கையகபடுத்த நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு சென்னையில் அதிகபடியாக அண்ணாநகர், பெசன்ட் நகர், முகப்பேர், கே கே நகரில் நடந்திருப்பதாகவும் இதுபோல் கோவையுலும் நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிப்பு விவரம்: அண்ணாநகர் – ரூ.178.கோடி பெசன்ட் நகர் – ரூ.177.28கோடி முகப்பேர் – ரூ.47.63கோடி கோவை – ரூ.17.6கோடி இதில் கே.கே நகர் பகுதியில் 229.6 ஏக்கர் நிலமும், கோவையில் 82.64 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கையகபடுத்தபட்ட சுமார் 3,353 ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் அண்ணாநகர், பெசன்ட் நகர், கே கே நகர், முகப்பேர் பகுதியில் பெரும்பாலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. tamil nadu…
Read MoreAuthor: NR Sharavanan
தேமுதிக பேரணிக்குத் திருப்பூரில் தடை
dmdk tirupur meeting தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் உள்பட பல தொழில்கள் நலிவடைந்து வருவதாகவும், இந்த பாதிப்பினால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைவடைந்து வருவதாக கூறி, தே.மு.திக சார்பாக கண்டன பொதுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தே.மு.திக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரமாக திருப்பூர் இருப்பதால், பேரணி நடத்த தே.மு.திகவிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. dmdk tirupur meeting
Read Moreசித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு
Congress MLAs elected Siddaramaiah as Karnataka CM பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தனக்கு 120 பேர் ஆதரவாக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்தார் . இந்நிலையில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கரஸின் மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங், கர்நாடக மாநில தேர்வுக் குழுத் தலைவர் பெலைரோ, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்த்ரி ஆகியோர் பெங்களூர் விரைந்தனர். முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து…
Read More1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை
தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும்…
Read Moreகுல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்
Gulshan Rai appointed as Indian cyber security chief புது தில்லி 10 மே 2013: திரு குல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமனம். தற்சமயம் நிலவிவரும் இணையதள சமூக குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல் களை கண்டறியவும், வரும் காலங்களில் நடக்கவிருக்கும் குற்றங்களை தடுக்கவும் இந்த முதல் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. திரு குல்சான் ராய் தற்சமயம் இந்திய கணினி அவசர நடவடிக்கை மையத்தை தலைமை தங்கிகொண்டிருகிறார். Gulshan Rai appointed as Indian cyber security chief
Read Moreதமிழ்நாட்டில் குட்கா-பான் மசாலாவிற்கு மீண்டும் தடை
Pan Masala and Gutka banned again in Tamilnadu சென்னை: 08 மே 2013: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் பான் மசாலா-குட்கா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் மீண்டும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முந்தைய 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த தடை கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசினுடைய உணவுப் பாதுகாப்பு & தர நிர்ணயம் விதிகளின் படி பான் மசாலா மற்றும் குட்காவுக்கு மீண்டும் தடை விதிப்பதாக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். புகையிலையினால் உண்டாகும் பல்வேறு நோய்களை குறிப்பாக புற்று நோய்களைத் தடுக்கும் பொருட்டு குட்கா, பான் மசாலா போன்ற உட்கொள்ளும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து விநியோகிக்கவும், விற்கவும் தடை விதிக்க பட்டுள்ளது. Pan Masala and Gutka banned again in Tamilnadu Property sale in Chennai Pan Masala and Gutka banned
Read Moreகர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.
Victory for congress in karnataka election 2013.மே. 8 பெங்களூரு: நடந்து முடிந்த கர்நாடக சட்டபேரவை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 121 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. மொத்த தொகுதிகள்: 224 காங்கிரஸ்: 121 பா.ஜ.க:40 ம.ஜ.த: 40 க.ஜ.க: 6 மற்றவை: 16 இதில் தொழில் அதிபர் அசோக் கனி உள்ளிட்ட 12 சுயட்சை வேட்பாளர்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. victory for congress in karnataka election Advertisement: Real estate company in chennai: Buying and selling of Residential, commercial, industrial and Agricultural properties. The best deal by best square feet
Read Moreகர்நாடகா சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி படுதோல்வி
Karnataka assembly election 2013 Posted by Lion Sathish பெங்களூர், மே. 8 2013 கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பிஜேபி படு தோல்வி அடைந்தது. cயை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரி யார்? என்பதே கர்நாடக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, சித்தராமையா, வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருக்கிறர்கள். Karnataka assembly election 2013
Read Moreதென் தமிழ்நாட்டில் ஒன்பது புதிய தொழில் பூங்காக்கள் : முதல்வர் அறிவிப்பு
New Industrial parks planned in southern districts of Tamil nadu: SIPCOT complex சென்னை 8 மே 2013: தென் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும், இது சுமார் 18,650 ஏக்கரில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று, சட்டசபையில் 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பில் : சிவகங்கை – மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் கூடுதலாக 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், கிராபைட் மற்றும் பிற தொழிற்சாலைகள் அமைக்க வசதியாக புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும். ராமநாதபுரம்: ரசாயனம், பெட்ரோலிய சுத்திகரிப்பு, உரம் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும். புதுக்கோட்டை: உலோகத் தொழிற்சாலைகள், பொறியியல், மற்றும் உலர் தோல் போன்ற தொழில்களுக்கு தொழில் பூங்கா 2,000 ஏக்கரில் உருவாக்கப்படும். திண்டுக்கல்: பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில் பூங்கா,…
Read Moreகரிகால் சோழனுக்கு மணி மண்டபம்: முதல்வர் அடிக்கல்
karikala cholan கரிகால் சோழனுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா 6 மே 2013 ( திங்கள்கிழமை) நாட்டினார். இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் பென்னிகுயிக் நினைவு மண்டபம் விழாவின் போது, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் பழமையான அணைகளில் ஒன்றான கல்லணையை உருவாக்கிக் கொடுத்த கரிகால் சோழனின் சேவையைப் போற்றி கௌரவிக்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன் படி, ரூ.2.10 கோடியில் 4000 சதுர அடிப் பரப்பில் 32 அடி உயரம் கொண்ட அரங்கம், அதனைச் சுற்றி நான்கு புறங்களிலும் 28 அடி உயரத்தில் தூண்களுடன் கூடிய நான்கு முகப்பு மண்டபங்கள்…
Read More