பெண் புகைபட கலைஞர் பலாத்காரம்: 5 பேர் வரைபடம் வெளியீடு

Photo journalist gang raped in Mumbai மும்பையில் 22வயது ‌பெண் ‌போட்டோகிராபர் மீது பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் தப்பியது.இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் தெற்கு மும்பை மகாலெட்சுமி மில் பகுதியில் நடந்துள்ளது.ஐந்து பேர் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண்ணுடன் பணிபுரியும் சக ஆண் நண்பர்கள் தான் இதில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இக்கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை ரயில் தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பியது. நண்பர்கள் அதிர்ச்சி:சம்பவம் குறித்து அறிந்த பெண் நண்பர்கள் ‌அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அப்பெண் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து என்எம் ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்தில்புகார் செய்தனர்.போலீஸ் அதிகாரிகள் புகார் பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்காக ஜஸ்லோக்‌ மருத்துவமனையில்அப்பெண்ணை சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 20 முதல்…

Read More

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து

fire accident near sivakasi சிவகாசி அருகே எம்.துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறியதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த வெடி விபத்தால் உயிரிழப்பு பற்றி எதுவும் இதுவரை ஆதரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு சிவகாசி அருகே முதலிபட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில்…

Read More

இந்திய பங்குச் சந்தையில் 4 நாட்களில் ரூ.6,00,000 கோடிகள் இழப்பு

stock markets in india has left investors poorer by over $100 billion மும்பை: ரூபாயின் மதிப்பு சரிவைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்கள் ரூ. 6 லட்சம் கோடியை இழந்துள்ளனர். அதாவது பங்குகளின் விலை சரிவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கணக்குப்படி இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ. 58,60,000 கோடி. நேற்று மட்டும் இதில் ரூ. 1,09,000 கோடி காற்றோடு கரைந்துபோய்விட்டது. stock markets in india has left investors poorer by over $100 billion The four-day carnage in stock markets in india has left investors poorer by over $100 billion, while they suffered a…

Read More

சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு தாக்குதல்:1300 பொதுமக்கள் பலி

1300 civilians killed in Syria சிரியாவில் அரசுப்படையினர் நடத்திய ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 1300 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அயர்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் நேற்று இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷவாயு தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரின் நுரையீரலுக்குள் ஊடுருவிய நச்சுப் பொருட்கள், நரம்பு மணடலத்தை பாதித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். இதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அறியாமலேயே பலர் மரணத்தை தழுவியுள்ளனர். இதில் பலி எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஆராயவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கூடுகிறது.…

Read More

தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு 375வது பிறந்த நாள்!

Chennai Day சென்னை: மனிதர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு 375வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சென்னை நகரம் உருவானது. எழும்பூர், திரு வல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. ஆங்கிலேயர் வசமிருந்த காரணத்தால் உலகின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்த வேகத்தில் சென்னைக்கும் வந்தன. தொலைபேசி, ரெயில், சினிமா, தபால் போன்றவை அடுத்த சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு அறிமுகமாகின. Chennai Day It’s August 22, the day Chennaiites commemorate the founding of the city. The Madras Day celebrates the history, heritage, culture and food of our city. Advertisement:…

Read More

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு

India refusal to negotiate with Pakistan இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் இதனை தெரிவித்தார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்று கூறிய அவர், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தனது வாக்குறுதியை அந்த நாடு காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில்தான் இந்தியாவின் கவனம் உள்ளது என்றும் அக்பருதீன் தெரிவித்தார். முன்னதாக, அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொது அவை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்…

Read More

ராயல்டி வேண்டி பாடகர்கள் திடீர் போர்க்கொடி

Popular singers struggle to royalty தற்போது பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் ராயல்டி பெற்று வருகிறார்கள். அதாவது ரேடியோ, தொலைக்காட்சி உள்பட எந்த இடத்திலும் கமர்ஷியல் நோக்கத்துக்காக பாடல் ஒலிபரப்பப்பட்டால் அந்த பாடலை எழுதிய பாடலாசியரிருக்கும், இசை அமைத்த இசை அமைப்பாளருக்கும் ராயல்டி வழங்கப்படுகிறது. ஒரு பாடலுக்கு பத்து பைசா, ஐந்து பைசாதான் ஆனால் அதுவே ஒரு மாத்தில் பல்பெருகி நிற்கும். வைரமுத்து, நா.முத்து-குமார் போன்ற பாடலாசிரியர்கள் லட்சகணக்கில் ராயல்டி பெற்று வருகிறார்கள். இசை அமைப்பாளர்களும் லட்சக் கணக்கில் பெற்று வருகிறார்கள். பாடகர்களுக்கு இல்லாமல் இருந்தது. எங்களுக்கும் ராயல்டி வேண்டும் என்று பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் சோனி நிகாம், ஜாவீத் அக்பர் போன்றவர்கள் தொடர்ந்து போராடி வந்தார்கள். அதன் பலனாக 2012ம் ஆண்டு ஜுன் மாதம் பார்லிமென்ட்டில் பாடகர்களுக்கும் ராயல்டி வழங்க வேண்டும் என்று சட்டம்…

Read More

மலேசியாவில் மலையில் பஸ் கவிழ்ந்து 33 பேர் பலி

Malaysia crash: Toll rises to 37 after bus plunges into ravine கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் 33 பேர் பலியானார்கள். இவர்களில் இந்தியர்கள் இருவர் என்று கூறப்படுகிறது. ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் பகுதியில், இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தானது, 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததால் விபத்து நேரிட்டது. விபத்தில் சிக்கிய பேருந்தில் 53 பேர் இருந்தனர். இவர்களில் 27 ஆண்களும், 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மலேசியர்கள் தவிர வங்கதேசம், தாய்லாந்து, சீன நாட்டவரும் அடக்கம். பலத்த காயமடைந்தவர்கள் செலயாங் மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்காய் புலோ மருத்துவமனை, பென்டாங் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டிலிருந்து திரும்பும் வழியில் பஸ் விபத்துக்குள்ளானது. இறந்தவர்களில் 30…

Read More

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

India, US bank on Manmohan visit to boost ties அடுத்த மாதம் ஐ.நா. அவைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். வாஷிங்டன்னில் பிரதமரின் பயண ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசுடன், ஆலோசனை நடத்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு, வர்த்தகம், பருவநிலை மாற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார். பின்னர் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் கலந்து கொள்கிறார்.  India, US…

Read More

இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் மீண்டும் 20 கி.மீட்டர் ஊடுருவல்

Chinese troops intrude into Arunachal இந்திய எல்லைக்குள் கடந்த மே மாதம் சீனா மீண்டும் ஊடுருவியது. வாபஸ் பெற்றுச்சென்ற இடத்துக்கு மீண்டும் தனது படைகளுடன் அத்துமீறி நுழைந்து உள்ளது. சீனப்படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தன. சுமார் 19 கி.மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் ஊடுருவி இருந்தன. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின. அவ்வேளையில், சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண சீன-இந்திய ராணுவ அதிகாரிகள் கூட்டாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டு, சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்தது. அதன்படி,…

Read More