microsoft ceo steve ballmer retire soon அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீவ் பால்மர் பதவி வகித்து வருகிறார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்சின் நீண்டநாள் நண்பரும், நம்பிக்கைக்குரியவரும் ஆவார். இந்நிலையில் ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சிஇஓ தேர்வு செய்யப்படும்வரை ஸ்டீவ் பால்மர் பதவியில் நீடித்திருப்பார். புதிய சிஇஒ தலைமையின் கீழ் புதிய உத்திகளுடன் சந்தையில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் மைக்ரோசாப்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. microsoft ceo steve ballmer retire soon In a surprise move, Microsoft on Friday announced that CEO Steve…
Read MoreAuthor: NR Sharavanan
மசூதி அருகே குண்டு வெடிப்பு லெபனானில் 42 பேர் பலி
Bombs kill 42 outside mosques in Lebanon’s Tripoli திரிபோலி:லெபனானில் மசூதி அருகே நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 42 பேர் பலியானார்கள். லெபனானில் ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவினருக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவினர் ஹெஸ்போலாக் என்ற அமைப்புடன் சேர்ந்து சன்னி பிரிவினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இருதரப்பினரிடையே இதுவரை நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் லெபனான் திரிபோலி நகரத்தில் உள்ள தாஹ்வா மசூதியில் ஏராளமான சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மசூதி அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள். இந்த பரபரபரப்பு அடங்கும் முன்பு சில நிமிடங்களில் அல் சலாம் மசூதி அருகே மற்றொரு குண்டு…
Read Moreஇந்தியாவை பங்கு போட அடுத்த நாடு!!! மியான்மர் ஊடுருவல்
Myanmar army crossed the indian border entered Manipur Myanmar army enters Manipur, stakes claim to border village இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் பிரச்சனை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில் புதிய பிரச்சனையாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா – மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து உள்ளூர் காவல் துறையினர்…
Read Moreஆந்திரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில்3 பேர் பலி
Vizag refinery fire death toll rises to 4 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பணியாளர்கள் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்குச் சொந்தமான சுத்தகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுத்திகரிப்பு ஆலையில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை திடீரென ஆலை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பலர் தங்களது உடமைகளை விட்டு விட்டு அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு அகன்று சென்று விட்டனர்.தகவலறிந்ததும் விசாகப்பட்டினம் நகரிலிருந்து ஏராளமான தீயணைப்பு வண்டிகள் சுத்திகரிப்பு ஆலைக்கு விரைந்தது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்தத் தீ விபத்தில் முதலில் ஒரு பணியாளர் உயிரிழந்ததாக…
Read Moreஆப்பிளின் அடுத்த படைப்பு கை கடிகாரம் விரைவில்
apple new iwatch coming soon ஆப்பிள் நிறுவனமானது புதிய iWatch உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது . தற்போது குறித்த iWatch தொடர்பான வடிவமைப்பு தொடர்பான தகவல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2014ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனம் ஆப்பிளின் முன்னைய ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. மேலும் இதனை செல்போண்ணுக்கு இணையாக பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே ஆப்பிளுக்கு போட்டியாக விளங்கும் சாம்சுங் நிறுவனம் இவ்வருட இறுதியில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ இணைப்பு apple new iwatch coming soon We know that Apple is working on their new Apple iWatch, although we have no idea what the device will look like. The following…
Read Moreஒபாமாவை திணற வைத்த இளம் பெண்
obama questioned by a young lady அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரையாற்றிய போது குறுக்கிட்ட ஒரு பெண், அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராட்லி மேனிங்கை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கின் சிராக்யூஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் எழுந்து, “பிராட்லி மேனிங்கை விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை எழுப்பினார். அவர் தொடர்ந்து தனது கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தார். இதனால், தனது உரையை சில நொடிகள் நிறுத்திய ஒபாமா, “நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது” என்று தெரிவித்தார். அப்போதும், அந்தப் பெண் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் அப்பெண்ணை உட்காருமாறு சத்தம் போட்டனர். ஆனால், ஒபாமா குறுக்கிட்டு, “அமைதியாக…
Read Moreஅரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும்: நடிகர் விஜய்
actor vijay twitter news words நடிகர் விஜய் தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்றும் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில், “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம். இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன். என் தந்தையோ வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். விஜய்யின் சமீபத்திய ‘தலைவா’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலே அவரை இவ்வாறு கூற வைத்துள்ளதாக தெரிகிறது. ‘தலைவா’ படத்தின் விளம்பரத்தின் கீழ் ‘Time to lead’ ( தலைமையேற்கும் தருணம் ) என்று போடப்பட்ட வாசகமும், அப்படத்தில்…
Read Moreஆவடியில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: இரட்டையர்கள் பலி
Two students killed road accident : twins சென்னை: மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் இருவர் மீது டேங்கர் லாரி மோதியதில் அதே இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் செல்லதுரை. தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் விஜயசாரதி, விஜயவரதன் (வயது 18) இருவரும் இரட்டையர்கள். விஜயசாரதி செம்பரம் பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விஜயவரதன் ஆவடி எஸ்.ஏ.என்ஜினீரிங் கல்லூரியில் பி.டெக் படித்தார். இன்று காலை அண்ணன்-தம்பி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றனர். சென்னீர் குப்பம் அருகே சென்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் லாரியின் அடியில்…
Read Moreகடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி கைது
Cuddalore District business tax officer Rajeswary arrested கடலூரில் ஒன்றரை லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய மாவட்ட வணிக வரித் துறை அதிகாரி ராஜேஸ்வரி (40) லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். சிதம்பரம் தேரடி தெருவில் சதீஷ்குமார் என்பவர் நிலக்கரி சாம்பலில் இருந்து செங்கல் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி வந்து கணக்கு வழக்குகளை சரிபார்த்தார். அந்த நிறுவனத்துக்கு வரி குறைப்பு செய்திருப்பதாகவும், அதற்கு ரூ.8 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்றும் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமாரிடம் கேட்டார். அதற்கு அவர் முதல் தவணையாக ரூ. 1½ லட்சம் தருவதாக அதிகாரியிடம் கூறினார். பின்னர் வணிக வரித்துறை அதிகாரி அந்த பணத்தை நாளை காலை சிதம்பரம் தேரடி வீதிக்கு கொண்டு வந்து தரும்படி கூறிவிட்டு…
Read Moreகச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு தடை
The Sri Lankan government rejected a plan to allow Indian fishermen கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். சர்வதேச கடல் எல்லை கோட்பாட்டை தமிழக அரசோ தமிழக மீனவர்களோ மீற முடியாது என அவர் கூறினார். கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதித்தால் அது இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,ஆண்டுக்கு 70 நாட்கள் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் பகுதியில் தமிழக மீனவர்கள்…
Read More