இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் மீண்டும் 20 கி.மீட்டர் ஊடுருவல்

Chinese troops intrude into Arunachal

இந்திய எல்லைக்குள் கடந்த மே மாதம் சீனா மீண்டும் ஊடுருவியது. வாபஸ் பெற்றுச்சென்ற இடத்துக்கு மீண்டும் தனது படைகளுடன் அத்துமீறி நுழைந்து உள்ளது. சீனப்படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தன.
சுமார் 19 கி.மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் ஊடுருவி இருந்தன. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின.

அவ்வேளையில், சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண சீன-இந்திய ராணுவ அதிகாரிகள் கூட்டாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதில் சமரசம் ஏற்பட்டு, சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்தது. அதன்படி, அத்துமீறி நுழைந்த பகுதியில் இருந்து சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன.

இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் உள்ள சக்லகாம் பகுதியில் மீண்டும் கடந்த 13ம் தேதி 20 கி.மீட்டர் தூரம் வரை ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள், இங்கு 2 நாட்களுக்கும் மேலாக தங்கியுள்ளனர்.

அவர்களின் ஊடுருவலை கண்டுபிடித்த இந்திய படையினர் வெளியேறும்படி ‘பேனர்’களை காட்டிய பின்னர் அவர்கள் திரும்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதைப்போன்று எல்லை கடந்து வீரர்கள் முன்னேறி செல்வதும், பின்னர், பின்வாங்கி செல்வதும் எல்லைக் கோட்டுப் பகுதியில் சகஜமாக நடைமுறை தான் என ராணுவ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களில் இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் சுமார் 150 முறை ஊடுருவியுள்ளனர். இதே போல், இந்திய வீரர்களும் சில வேளைகளில் சீன எல்லைக்குள் தெரியாமல் பிரவேசித்ததுண்டு எனவும் கூறப்படுகிறது.

Chinese troops intrude into Arunachal

The sources said paramilitary force Indo-Tibetan Border Police is also present in the area to guard the LAC there.

In yet another face-off with Indian soldiers, Chinese troops had come more than 20 kilometres inside Indian territory in Chaglagam area of Arunachal Pradesh on August 13 and stayed there for over two days. However, the Army Headquarters sought to play down the incursion, saying the Chinese troops have gone back to their areas and such incidents keep taking place as both sides enter areas claimed by the other side while patrolling the disputed Line of Actual Control (LAC). People’s Liberation Army (PLA) troops had come over 20 kms inside Indian-claimed territory in Chaglagam area of Arunachal Pradesh and after they were stopped by the Indian troops, the two sides showed banners to each other to leave the area, sources said here. However, the two sides held to their positions and the Chinese soldiers left after staying put for two-three days, they said. The area falls under the 2 Division of the Army and the deputy commander of the formation had also intervened to resolve the issue, they said. The sources said paramilitary force Indo-Tibetan Border Police is also present in the area to guard the LAC there. In April, Chinese troops had entered 19 kms deep inside the Indian Territory and pitched their tents in Depsang plains in Ladakh. They returned after a three-week stand-off and several rounds of hectic parleys between the top officials of the two countries. In the last eight months, Army sources said there have been over 150 incursions by the Chinese side and that Indian troops also enter areas claimed by them during patrolling.

Related posts