180 children fall sick after having meals at school in China மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 180க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் பாலும், பிஸ்கெட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்தப் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக தலைவலி, வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக அந்த குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 168 மாணவர்கள் குணமடைந்து வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் 12 பேர் மருத்துவமனை காண்காணிப்பில் உள்ளனர் என்று மாகாண அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் பிஸ்கெட்டுகளின் மாதிரிகள், மாகாண நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு பால் காரணமாக இருக்கலாம் என்று மாகாண அரசின் ஆரம்பகட்ட விசாரணை முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆயினும்,…
Read More சீனாவில் பால், ரொட்டி சாப்பிட்ட 180 குழந்தைகள் உடல்நலம் பாதிப்புCategory: உலகம் சிறகுகள்
உலகில் ஒவ்வொரு நாளும் சுமார் 87 கோடி பேர் பட்டினியால் பாதிப்பு
One third of food wasted, costs world economy $750 bn: UN ஒவ்வொரு ஆண்டும் மூன்றில் ஒரு பங்கு உணவு பொருட்கள் வீணாக போவதால், உலகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 87 கோடி பேர் பட்டினியால் பாதிக்கபடுவதாக ஐ.நா.சபையின் விவசாய மற்றும் உணவு நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட அய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். அந்த ஆய்வின்படி, வருடந்தோறும் சுமார் 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறதாம். வீணாக்கப் படும் உணவுப் பொருட்களின்…
Read More உலகில் ஒவ்வொரு நாளும் சுமார் 87 கோடி பேர் பட்டினியால் பாதிப்புதலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க தூதரகத்தின் மீது தற்கொலை தாக்குதல்
Afghanistan Taliban kills two in attack on US consulate ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தின் மீது தலிபான்கள் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். தலிபான்களின் இந்த பயங்கர தற்கொலைபடை தாக்குகுதல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை ஆப்கான் நேர படி 5.30 மணியளவில், தலிபான் தீவிரவாதிகள் திடீரென ஒரு டிரக்கை வெடிக்கச் வைத்து, அங்கே பாதுகாப்புக்காக இருந்த இராணுவத்தினரின் மீது சரமாரியாகச் சுட்டனர். பாதுகாப்பு படையினர் அவர்களை எதிர்த்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக ஹெராத் மாகாண ஆளுநர் சையது பஷுல்லா அறிவித்துள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென அமெரிக்க பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மேரி ஹர்ப் தெரிவித்துள்ளார். மேலும் அதில் 2 நபர்கள்…
Read More தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க தூதரகத்தின் மீது தற்கொலை தாக்குதல்41 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட தென் கொரிய நபர் ஊர் திரும்பியுள்ளார்
Fisherman kidnapped by North Korea flees after 40 years கடத்தப்பட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு நபர் தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் தாயகம் திரும்பியுள்ளார். தென் கொரியாவை சேர்ந்த ஜீயான் வோக்-பியோ என்பவர் கடந்த 1972ம் ஆண்டு 25 பேருடன் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது வட கொரியாவுக்கு கடத்தப்பட்டார். இதன்பின்பு இவரைப் பற்றி எவ்வித தகவலும் இல்லாததால், நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் தவித்தனர். இந்நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். தற்போது இவருக்கு 68 வயதாகிறது, இவரை பார்த்த உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதனையடுத்து இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித விவரமும் வெளியிடப்படவில்லை. Fisherman kidnapped by North Korea flees after 40 years A South Korean fisherman kidnapped by the North Korean navy…
Read More 41 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட தென் கொரிய நபர் ஊர் திரும்பியுள்ளார்கொலம்பியா விமான நிலையத்தி 2கி கோகைன் கடத்த முயன்ற பெண் கைது
Woman caught trying to smuggle 2kg of cocaine in fake pregnancy bump கொலம்பியா விமான நிலையத்தில் கர்ப்பிணி போல் நடித்து, 2கி கோகைன் போதைப்பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடாப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த ஒரு கர்ப்பிணிப்பெண் மீது, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது. அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டனர் அதிகாரிகள். அப்போது கர்ப்பம் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை அப்பெண் கூறியுள்ளார். இதனால், பெண் அதிகாரி ஒருவர் மூலம், அப்பெண்ணை சோதனை செய்து பார்க்க முடிவு செய்தனர் அதிகாரிகள். அதன்படி, அப்பெண்ணை சோதனை செய்த அதிகாரி அப்பெண்ணின் வயிறு மிகவும் கடினமாகவும், அதேசமயம் குளிர்ந்தும் காணப்படுவதாக…
Read More கொலம்பியா விமான நிலையத்தி 2கி கோகைன் கடத்த முயன்ற பெண் கைதுநாசா விண்வெளியில் கீரைகள் பயிரிட திட்டமிட்டுள்ளது
Nasa set to grow lettuce in space வீரர்கள் உணவுக்காக விண்வெளியில் கீரைகள் பயிரிட நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. அதற்காக அவர்களுக்கு 450 கிராம் (ஒரு பவுண்டு எடை) உணவுக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகிறது. எனவே, செலவை குறைக்க வீரர்களின் உணவுக்கு பூமியில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் உள்ள விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகளை பயிரிட ‘நாசா’ மையம் திட்டமிட்டுள்ளது. பின்னர் படிப்படியாக காய்கறிகளும் பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய பண்ணை அமைக்கும் வசதியை உருவாக்கும் எந்திரங்கள் விரைவில் அனுப்பப்பட உள்ளன.இந்த தகவலை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் திட்ட…
Read More நாசா விண்வெளியில் கீரைகள் பயிரிட திட்டமிட்டுள்ளதுஅமெரிக்க நிறுவனத்தின் தாவரப் பொருட்களை வைத்து தயாரான சைவ முட்டை
Artificial egg made from plants on sale கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தை பயன்படுத்தி சைவ முட்டை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனத்தை ஒன்றை சேர்ந்த உணவு பொருள் விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க தாவரப் பொருள்களை வைத்து நவீன செயற்கை சைவ முட்டையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த சைவ முட்டையை பட்டாணி, பயறு வகைகளை கொண்ட 11 சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் புளி கரைசல் கொண்டு உற்பத்தி செய்கிறார்கள். தற்போது இந்த செயற்கை தாவர முட்டை அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. கோழி முட்டையை விட இதன் விலை 19 சதவீதம் குறைவு என்றும், இதனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் தெட்ரிக் கூறுகிறார்.மேலும்”சைவ பிரியர்கள் முட்டை…
Read More அமெரிக்க நிறுவனத்தின் தாவரப் பொருட்களை வைத்து தயாரான சைவ முட்டைமாஸ்கோ மருத்துவமனையில் தீ விபத்து 37 பேர் பலியாயினர்
37 dead after fire at Russian psychiatric hospital ரஷ்யாவில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 37 பேர் பலியாகினர். ரஷ்யாவின் நோவ்கோரோட் மாகாணத்தில் லூகா என்ற ஊரில் மனநோயாளிகளுக்கான மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு 60-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. அது பயங்கரமாக எரிந்து அடியோடு தரைமட்டமானது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு சிலரை மீட்டனர். இருப்பினும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி 37 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் மருத்துவ ஊழியர் ஒருவர் ஆவார். மேலும் 27 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.…
Read More மாஸ்கோ மருத்துவமனையில் தீ விபத்து 37 பேர் பலியாயினர்உலகின் அதிபயங்கர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது கராச்சி
Karachi termed ‘most dangerous megacity’ in world உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது. அதில், பாகிஸ்தானின் கராச்சி நகரம், மக்களின் உயிருக்கு ஆபத்தான, “அதிபயங்கர நகரம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால், வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டு சதியால், மக்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றனர். உலகிலேயே, கராச்சியில் தான், மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். 2000 முதல், 2010ம் ஆண்டு வரை, கராச்சி நகரின் மக்கள் தொகை, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, கராச்சியில், ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே, பலத்த மோதல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை…
Read More உலகின் அதிபயங்கர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது கராச்சிகணவரை மலை மேலிருந்து தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்
Honeymoon murder: woman charged with pushing husband off cliff அமெரிக்காவில் தேனிலவு சென்ற ஒரு புதுப்பெண் தனது கணவரை மலை மேலிருந்து தள்ளி கொலைச் செய்துள்ளார். திருமணமாக ஒரு வாரகாலமே ஆன நேரத்தில், ஜோர்டான் என்ற 22 வயது பெண்ணும், கோடி என்ற 25 வயது ஆணும் தேனிலவிற்கு செல்ல திட்டமிட்டு சென்றனர். இந்நிலையில், திருமணம் செய்துக்கொண்டது குறித்து ஜோர்டனுக்கு மாற்று கருத்து இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அன்று இரவு கிளேசியர் தேசிய பூங்காவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு முன் ஒரு நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய ஜோர்டான், நான் இது குறித்து எனது கணவரிடம் பேசவுள்ளேன், இன்று இரவுக்குள் நான் உனக்கு பதிலளிக்காவிட்டால் ஏதோ விபரீதமாக நடந்துள்ளது என புரிந்துக்கொள் என அனுப்பியிருக்கிறார். அன்று இரவு அந்த இடத்தில் ஜோர்டனுக்கும், கோடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.…
Read More கணவரை மலை மேலிருந்து தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்