இந்தியாவில் வளமான நகரம் பட்டியலில் சென்னைக்கு இரண்டவது இடம்

இந்தியாவின் வளமான நகரங்களின் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் குர்காவுன் உள்ளது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. தற்போது சர்வதேச நிதி நெருக்கடியால் வெளிநாட்டினர் பலர் சிக்கனம் கருதி இந்திய நகரங்களில் வசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களது பட்டியலில் சென்னை உட்பட 7 நகரங்கள் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடியால் அந்நாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் உள்ள கிளை அலுவலகங்கள், துணை நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றன. அப்படி மாறுதல் பெறும் ஊழியர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் வசிக்க விரும்புகின்றனர். அவர்களது நாடுகளில் நிலவும் விலைவாசியை ஒப்பிடுகையில் இந்திய நகரங்களில் வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ளதாக கருதுகின்றனர். எனவே, சென்னை,…

Read More

அனந்தபூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் 26 பேர் பலி

Sleeping passengers caught in Nanded-Bangalore Express fire; 26 die, 15 injured ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். நான்டட்டில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   மின்கசிவால் ரெயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீயால் 5 பெட்டிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கொத்தசேவூர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ரெயிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க அனந்தபூர், தர்மாவரத்தில் இருந்து மருத்துவ மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். ரெயில்வே உயர் அதிகாரிகளும் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். எனினும், இந்தத் தீ…

Read More

ஜோத்பூர் மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமானது

High-Level Probe Ordered Into Wastage of 742 Eyes   ஜோத்பூர் மருத்துவமனை ஒன்றில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமாக்கப் பட்டது குறித்து  உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.  ராஜஸ்தான் மருத்துவமனை ஒன்றில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமாக்கப் பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் இயங்கி வரும் கண் வங்கியின் 17 வருடத் தகவல்களை வேண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு நபர் விண்ணப்பித்திருந்தார்.  அதன்படி, கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தானமாக பெற்ற மொத்த கண்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து கல்லூரியில் இருந்து பெறப்பட்ட தகவல்களை தகவல் ஆணையம் அவருக்கு அனுப்பி வைத்தது. 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரையில்…

Read More

கணனியை வேகமாக தாக்கி ஃபைல்களை அழிக்கும் கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ்

BEWARE – Cryptolocker ransomware has ‘infected about 300,000 PCs’ 1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்று வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது.   கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன? உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்தால் திறக்க வேண்டாம் . இது அநேகமாய் பேமென்ட் ரீஃபன்ட் / கொரியர் டெலிவிரி அட்டம்பன்ட் / லாட்டரி வின்னிங் அனவுன்ஸ்மென்ட் என்றே வரும். சில சமயம் உங்கள் நண்பர்கள் பி .சி பாதிகப்ட்டிருந்தால் அதிலிருந்தும் வரலாம். கிரிப்டோ லாக்கர் ஒரு முறை உங்கள் பிசியில் புகுந்தால் என்ன செய்யும். இந்த படத்தில் இருப்பது போல் ஒரு ஸ்லைடு…

Read More

இமாச்சல பிரதேச ஐ கோர்ட்டு ‘ஜங் புட்’ களை விற்க தடை செய்ய உத்தரவு

Himachal HC orders complete ban on junk food items, wafers and Kurkure in state இமாச்சல பிரதேசத்தில் வேப்பர்ஸ் மற்றும் குர்க்குரே பேன்ற `ஜங் புட்’களை விற்க தடை விதிக்க ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மக்காத மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாக பேக் செய்யப்படும் உருளை கிழங்கு சிப்ஸ், வேப்பர்ஸ், குர்க்குரே மற்றும் பிற ‘ஜங் புட்’ களை விற்க இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. ஆனால் குடிநீர் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . ஏற்கனவே அம்மாநில அரசால் இது போன்ற பொருட்களை விற்க, தயாரிக்க மற்றும் சேமிக்க தடை விதிக்கப்பட்டது. ஜூன் 26ம் தேதி இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது.…

Read More

பீகார் கிராம பஞ்சாயத்தில் திருமணம் அகாத இளம் பெண்கள் கைபேசி பயன்படுத்த தடை

Ban on mobile phones for unwed girls in Bihar panchayat பீகாரில் கிராமங்களில் புதிதல்ல. சிறுமியருக்கு ஆடை கட்டுப்பாடு, பள்ளி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை என அவ்வப்போது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்படுவது போல் அங்குள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது, சோம்கார். இந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ஜாகீர் அன்சாரி. நேற்று முன்தினம், கிராம பஞ்சாயத்து கூடியது.அதில், ‘திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமியர், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது’ என ஏக்மனதாக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நேற்று பஞ்., தலைவர் அன்சாரி அறிவித்தார்.அதில் ”தடையை மீறி யாரேனும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை அறிந்தால் அவர்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கப்படுவர்” என தெரிவித்தார். இது…

Read More

மகாராஷ்டிராவில் 66 வயது பெண் தன் கணவரின் உயிரைக் காக்க மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெறும் காலில் கட்டிய சேலையுடன் ஓடி 5,000 ரூபாய் பரிசு பெற்றர்

Sixty six year old granny runs ‘marathon’ in a saree in Maharashtra இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காக வெறும் காலில் கட்டிய சேலையுடன் மராத்தான் ஓட்டப் போட்டி ஒன்றில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்ற பாட்டியின் செயல் பலரையும் நெகிழ் வைத்துள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டியான லதா பகல்வான்காரே என்பவர் வெறும் காலில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்தையடுத்து அவரை சந்தித்து பேசிய மீடியாக்களிடம் சொன்ன செய்தியை கேட்டு பலரும் நெகிழ்ந்து விட்டார்கள் அதாவது இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின் ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காகவே அந்த முதிய பெண்மணி முதல்…

Read More

பெங்களூரில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது

Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs சச்சினின் முழு உருவ கேக் , பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேக் உலகிலேயே இது வரை மிகப்பெரிய  கேக் எனும் பெருமையை  தட்டிச்செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான ராமச்சந்திரன் என்பவர்தான் சச்சினின் முழு உருவ கேக்கினை செய்தவர்.ஒரு கையில் பேட்டையும் மற்றொரு கையில் ஹெல்மெட்டையும் பிடித்தவாறு சச்சின் நிற்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட கேக்கை காண பலர் வருகைபுரிந்துள்ளனர்.கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் கேக் கண்காட்சிக்காக இது அமைக்கப்பட்டுள்ளது. சச்சினின் முழு உருவ கேக்கை செய்ய 5 நாட்களானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs

Read More

ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சென்னை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை

உலகில் பிறக்கும் 2 லட்சம் குழந்தைகளில் ஒன்று என்ற விகிதத்தில்தான் உடற்பாகங்கள் ஒட்டிய நிலையில் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆண்களில் இத்தகைய இரட்டையர்கள் காணப்படுவது மிகவும் அரிது. இதுவரை உலக அளவில் இடுப்புக்குக் கீழ் ஒட்டிப் பிறந்த நிலையில் 30 ஜோடி குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாக சம்பந்தப்பட்ட சென்னை டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த வகை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. தான்ஸானியா நாட்டை சேர்ந்த 9 மாதமே ஆன எரிகா மற்றும் எல்யூடி என்ற இடுப்புக்கு கீழே ஒட்டிப் பிறந்த ஆண் குழந்தைகள் சிகிச்சைக்காக கடந்த ஜூன் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.…

Read More

பாகிஸ்தாநில் 13வயது சிறுவனுக்கு 50 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

13-Year-Old Pakistani boy Gets 50 Years in Jail for Murder பாகிஸ்தானில் தனது தந்தையை கொல்ல முயன்ற நபரை நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டு கொன்ற 13 வயது சிறுவனுக்கு 50 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குர்ஜன்வாலா பகுதியை சேர்ந்த ஒரு நபரை ஹபிஸ் கியாஸ் என்பவர் கொல்ல முயற்சித்தார். ஹபிஸ் தாக்கியதில் அந்த நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஹபிஸ் கொலை செய்ய முயற்சித்ததற்காக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஹபிஸ் தாக்கிய நபரின் 13 வயது மகன் கையில் துப்பாக்கியுடன் அங்கு வந்து, ஹபிசை சுட்டு கொன்றார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை குர்ஜன்வாலா மாவட்டத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு…

Read More