அறுவை சிகிச்சை இல்லாமல் சூப்பர் பேஸ்மேக்கர்

World’s smallest pacemaker implanted without surgery  இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி உள்ளார்கள்.   அதாவது இது பழைய பேஸ்மேக்கரை விட பத்து மடங்கு சிறிது நீளம் வெறும் 24 மில்லி மீட்ட்ர் – அகலம் 0.75 கியூபிக் சென்டி மீட்டர் மட்டுமே கொண்டது இதில் இன்னொரு மகிழ்ச்சி விஷயம் இதை இம்ப்ளான்ட்…

Read More

மருத்துவ கழிவு பொருட்களால் வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள்…

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர், மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படும். பயன்படுத்தப்பட்ட ஊசிகள், செயற்கை சுவாசக் குழாய்கள், சிரிஞ்சுகள், கத்தி, ரத்தக்குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை மருத்துவக்கழிவுகள் ஆகும் . சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப்…

Read More

இந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடை

National Green Tribunal bans burning of plastic, rubber across the country இந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத முறையில் திறந்தவெளியில் ரப்பர்பொருட்களின் கழிவுகளை எரிக்க நேற்று தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தடை முறைப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கழிவுகளின் கையாளுதலும், அகற்றுதலும் தடை செய்து மறு சீரமைப்பு சூழலில் இயற்கையின் பாதுகாப்பிற்குத்தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் வழி வகுப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு விதிகளுக்கு உட்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள், பழைய பொருட்கள் விற்பனையாளர்கள், மறுசுழற்சியாளர்கள் மற்றும் பி.வி.சி / பாலிஸ்டர்/ பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் என என்.ஜி.டி தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் கூறியுள்ளார்.…

Read More

பெண்களுக்கான உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அணி வெற்றி

India won Womens Kabaddi World Cup 2013 உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது.இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.   விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ…

Read More

சீனாவில் மனவளர்ச்சி குன்றிய மகனை 40 ஆண்டுகளக கூண்டில் அடைத்து வைத்து வளர்த்த தாய்

Chinese boy kept in cage for 40 years மனவளர்ச்சி குன்றிய தனது 48 வயது மகனை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளார் சீனத் தாய் ஒருவர். தற்போது தனது மரணத்திற்குப் பின் தனது மகனுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை என கருதி மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்ததன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐந்தறிவு படைத்த விலங்குகளையே கூண்டில் அடைத்து வளர்ப்பது தவறு என மிருகவதைத் தடுப்பு ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தனது 48 வயது மகணை கூண்டில் அடைத்து தாயே வளர்த்து வந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. சீனாவின், மத்திய ஹெனான் பகுதியில் உள்ள ஷென்சோ பகுதியைச் சேர்ந்தவர் பென்ங் வீகிங் என்ற 48 வயது மனிதர். மனவளர்ச்சி குன்றிய இவர் தனது வாழ்க்கையின்…

Read More

செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு லட்சம் பேர் நிரந்தரமாக குடியேற விருப்பம்

Over 20,000 Indians apply for one-way trip to Mars செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார்…

Read More

ஐஃபொன், ஸ்மார்ட்ஃபொன் மூலம் அல்ட்ரா சவுண்ட் அமெரிக்க மருத்துவகல்லூரி மாணவர்கள் சாதனை

Ultrasound now possible in your smart phone. மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம். பெரும்பாலான நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை…

Read More

டிசம்பர்-11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 132ஆவது பிறந்தநாள்

Today Bharathiyar’s Birthday (11 December) தமிழ் வரலாற்றில் சிறந்த முதல் மூன்று கவிகளுள் பாரதியும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. தனது எழுத்துகளில் பல பரிணாமங்களை கொண்ட ஒரே கவி பாரதியே! இன்றைய வரலாற்று நாளில், இவர் புகழ் கூற நினைவுகொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞன். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே சொன்னவர் பாரதியார். அந்த மகாகவி பிறந்த தினம் டிசம்பர் 11. தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்தியா முழுவதற்கும் உரிமையான கவிஞன்தான் பாரதி. இன்று 132-வது பிறந்த நாள் விழா காணும் எமது மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றிய சில குறிப்புகள். பெயர்: சுப்பிரமணிய…

Read More

மனநலம் குன்றிய 18 வயது மகனை கருணை கொலை செய்யக்கொரி பெற்ற தாயே மனு அளித்த அவலம்

A mother of 18 years old mentally affected so given petition to the police for mercy killing மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கருணை கொலை செய்யக்கோரி பெற்ற தாயே மனு கொடுத்துள்ள வேதனை தரும் சம்பவம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் 13-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 40). இவரது மகன் ரோகித்(18). கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை பாக்கியலட்சுமி ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மகன் ரோகித் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்தேன். ஆனால் அவனது மூர்க்கத்தனமான செயல்பாடு காரணமாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். கடந்த 6 மாதங்களாக நான் தான் அவனை பாதுகாத்து வருகிறேன்.அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள்,…

Read More

கைபேசியில் வலைத்தளம் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்த ஏற்பாடு

After Facebook, now access Twitter on mobiles without Internet உலகளவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் அவற்றின் வழி இன்டர்நெட் பயன்பாடும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலக அளவில், 260 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 170 கோடி பேர் மொபைல் போன்களின் வழியே இணையம் செல்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதனால் டுவிட்டரின் பயன்பாடு குறைவாக இருப்பதாக கருதி மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு…

Read More