Today Bharathiyar’s Birthday (11 December)
தமிழ் வரலாற்றில் சிறந்த முதல் மூன்று கவிகளுள் பாரதியும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. தனது எழுத்துகளில் பல பரிணாமங்களை கொண்ட ஒரே கவி பாரதியே! இன்றைய வரலாற்று நாளில், இவர் புகழ் கூற நினைவுகொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞன். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே சொன்னவர் பாரதியார். அந்த மகாகவி பிறந்த தினம் டிசம்பர் 11. தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்தியா முழுவதற்கும் உரிமையான கவிஞன்தான் பாரதி. இன்று 132-வது பிறந்த நாள் விழா காணும் எமது மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றிய சில குறிப்புகள்.
பெயர்: சுப்பிரமணிய பாரதி.
இதரப்பெயர்கள்: மகாகவி, பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882.
இறப்பு: செப்டம்பர் 11 , 1921.
வாழ்ந்த காலம்: 38 ஆண்டுகள், 11 மாதங்கள், 1 நாள்.
பெற்றோர்: சின்னசாமி ஐயர், லக்ஷ்மி அம்மாள்.
மனைவி: செல்லம்மா.
திருமணம் நடந்த ஆண்டு: 1897.
மகள்கள்: சகுந்தலா, தங்கம்மாள்.
வாழ்ந்த இடங்கள்: எட்டையபுரம் (1882 – பிறந்த ஊர்), காசி (1898 முதல் 1902 வரை), மதுரை (1904, சிறிது காலம் – தமிழ் ஆசிரியராக), புதுச்சேரி (1908 முதல் 1918 வரை – முக்கிய மற்றும் பிரபல படைப்புகள் உதிர்த்த இடம்), கடையம் (1918 – முதல் 1920 வரை – மனைவி செல்லம்மாவின் கிராமம்), சென்னை (1921 – மறைந்த இடம்).
பரிணாமங்கள்: கவிஞர், சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், எழுத்தாளர், விடுதலை வீரர், தேச பத்தர், பெண்ணுரிமைப் போராளி.
அறிந்த மொழிகள்: தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம் மற்றும் ஆங்கிலம்
Today Bharathiyar’s Birthday (11 December)
Today is Bharathiyar’s 132 birthday. TN journalists celebrated the birth day