உலக அளவில் அரசியலில் பெண்கள் பங்கேற்பில் இந்தியா 73 வது இடத்தை பிடித்துள்ளது

India is 73rd in women’s participation in politics இந்தியாவில் மிக உயர்ந்த பொறுப்பான குடியரசுத் தலைவர் தொடங்கி தற்போதைய மக்களவை சபாநாயகராகவும், முதல்வர் களாகவும் பல பெண்கள் பதவி வகித்துள்ள நிலையிலும் இந்திய அரசியலில் பெண்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. நம் நாட்டில் மிகப் பெரிய பதவிகளில் பெண்களை அமரவைத்துள்ள பல கட்சிகள், தங்களது தேர்தல் வேட்பாளராக பெண்களை நிறுத்த இப்போதும் கூட அதிகம் யோசிக்கின்றன. அதிலும் தற்போதுள்ள சில பெண் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் கூட அவர்களது உறவினர்களின் மரணத்தைத் தொடர்ந்தோ அல்லது உறவினர் போட்டியிட முடியாத நிலையிலோதான் அத்தொகுதியில் போட்டியிட்டவர்களாகவே இருக்கின்றனர்.இந்நிலையில் உலக அளவில் உள்ள நாடுகளில் தேர்தல் உள்ளிட்ட அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்து ஐநா பெண்கள் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில் 2014ம் ஆண்டில் அரசியலில் பெண்களின் பங்கு குறித்த…

Read More

அழுது கொண்டிருந்த குழந்தையின் மூக்கை கடித்த தந்தை

California teen father arrested for biting nose off infant அமெரிக்காவில் அழுது கொண்டிருந்த மகனை அடக்கத் துப்பில்லாத ஒரு அப்பா, மகனுடைய மூக்கை கடுமையாக கடித்து விட்டார். இதனால் அந்தக் குழந்தையின் மூக்கில் கடும் காயம் ஏற்பட்டு எலும்பும் முறிந்து விட்டது. அந்த அப்பாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் குழந்தையின் மூளையிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாம். மூக்கும் பாதி அளவுக்கு துண்டிக்கப்பட்டு விட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது குழந்தையைச் சேர்த்துள்ளனர்.  பேர்பீல்ட் என்ற இடத்தில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த தந்தையின் பெயர் ஜோஷுவா கூப்பர். இவருக்கு 18 வயதுதான் ஆகிறது. இந்த இளம் வயதிலேயே தந்தையாகி விட்டார். இவரது குழந்தை பிறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. சம்பவத்தன்று கூப்பர் தனது வீட்டில்…

Read More

இந்தியாவில் சாலை விதிகளை மீறுவதால் ஒரு நாளைக்கு 166 பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்

Speeding claims 166 lives every day in India வேகத்தை மீறுவதால் அதிகரிக்கும் விபத்துகளில் தமிழகம் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் ஒரு நாளைக்கு 166 பேர் உயிரிழப்பதாக தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பிரிவான சாலை ஆய்வுத்துறை மேற்கொண்டது.  இதன்படி வேகத்தை மீறுவதால் ஏற்படும் விபத்துகளில் மட்டும் கடந்த ஆண்டில் 68000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் 8600 உயிரிழப்புகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் புறநகர சாலைகளில் வேகக்கட்டுபாடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் போதுமான கண்காணிப்பு இல்லாததால் பல வாகனங்கள் வேகத்தை மீறுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் அதிகபட்ச வேக அளவை கூட சாலைகளில் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சாலை…

Read More

பிரிட்டனில் பொய்யை கண்டறியும் மென்பொருள் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது

Lie-detector software has been used in Derbyshire to help in a crackdown on people falsely claiming council tax discounts. Should it have been? சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஆண், பெண் இருபாலரும் பொய் பேசுகிறார்கள். சிலர் குறைவாக மற்றும் சிலர் நிறைய. சிலரால் யோசிக்காமலேயே பொய் பேசுவதற்கு முடியும். அவ்வளவு முதிற்சி. மற்றும் சிலரால் யோசித்துதான் பேசுவதற்கு இயலும். சில தொழில்களில் பொய் பேசுபவர்கள்தான் அதிகமாகக் காணப்படுகின்றார்கள். உதாரணமாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தரகர்கள், விற்பனை பிரதிநிதிகள், அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், வக்கீல்கள் இன்னும் பலர். தொழிலில் வெற்றி பெற பொய் அவசியமாகி விடுகிறது இவர்களுக்கு.சரி, யார் வேண்டுமானாலும் பொய் பேசிவிட்டுப் போகட்டும். அந்த பொய் நம்மைப் பாதிக்கக் கூடாது என்றும் நாம் எல்லோரும் விரும்புகிறோம். இது…

Read More

அதிமுக எம்.பி தம்பிதுரையை ஓட்டு கேட்க ஊருக்குள் நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர்

ADMK’s Candidate M. Thambidurai is fighting voters he finished his campaign last night கரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற அதிமுக எம்.பியும் தற்போதைய அதிமுக வேட்பாளருமான தம்பித்துரையை ஊருக்கு நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பித்துரை பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை எம்.பி. பிரச்சாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை செவலிப்பட்டி என்ற இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா, அட்மா சேர்மன் பழனியாண்டி, துணை சேர்மன் திருமூர்த்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் சென்றனர்.  இரவு 7.30 மணியளவில் வானதிரையான்பட்டி கிராமத்தில் தம்பிதுரை பிரச்சாரம் செய்ய சென்ற போது கிராம மக்கள் ‘கடந்த 5 வருடத்தில்…

Read More

புது வகை அறுவை சிகிச்சை கண்ணாடிகள் புற்று நோய் செல்களை முற்றிலும் அழிக்க

New Hi-Tech Surgery Glass can remove 100% Cancer Cells புற்று நோய்க்கு மருத்துவம் பல வழிகளில் இருந்தாலும் ஆரம்ப நிலை முதல் அட்வான்ஸ் நிலை வரை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். அதாவது டியூமர் எனப்படும் புற்று நோய் கட்டிகள் மூலம் குணப்படுத்த இயலும் போது அதை முழுவதும் வெட்டுவது மட்டுமில்லாமல் அதன் அருகே இருக்கும் புற்று நோய் செல்களையும் முற்றிலும் ஒழிக்க இயலாத போது திரும்பவும் புற்று நோய் பரவும். இது வரை வெறும் கண்கள் மற்றும் எந்த வித ஆப்டிக்ஸ் மூலம் இதை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் இப்போது வாஷிங்க்டன் பல்கலை கழகம் ஒரு புது வகை கண்ணாடிகளை மாட்டி கொண்டு அறுவை சிகிச்சை செய்தால் புற்று நோய் இல்லாத இடங்களை வெட்டாமலும் வேறு எங்காவது உடம்பில் கேன்சர் செல்கள் இருந்தால்…

Read More

சத்தீஸ்கரில் விதவை மறுமணம் செய்தால் தேனிலவு பயண செலவு இலவசம்

Widow remarriage: Chhattisgarh NGO to sponsor couples’ honeymoon தமிழ்நாடு அரசு விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தனியாக நிதியுதவி அளிக்கும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம் ஒன்றை செயல் படுத்தி வருவது தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் சத்தீஸ்கரில் உள்ள ஒரு அமைப்பு விதவை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின், வெளிநாட்டு தேனிலவு பயண ஏற்பாடுகளை இலவசமாக செய்வதாக அறிவித்துள்ளது.   சத்தீஸ்கர் மாநிலத்தில் ‘நேச்சர் கேர்’ என்ற சமூக அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு கணவனை இழந்த விதவைப் பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன்படி விதவை பெண்களை திருமணம் செய்ய முன் வரும் ஆண்களுக்கு அவர்களின் வெளிநாட்டு தேனிலவு பயணத்துக்கான செலவு முழுவதையும் ஏற்பதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்…

Read More

70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் தகவல்கள் வெளியாகியுள்ளது

70 Indian passports stolen from San Francisco: report மெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் காணமல் போய் உள்ளன. காணாமல் போன 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர். சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாஸ்போர்ட் “விசா” தொடர்பான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தது. அதில் 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் மாயமாகி விட்டன. அந்த நிறுவனம் அளித்த புகாரை அடுத்து அமெரிக்க போலீசார் பாஸ்போர்ட்டுகளை தேடி வருகின்றனர். காணாமல் போன பாஸ்போர்ட்டுகளை இந்திய தூதரக அலுவலகம் ரத்து செய்துள்ளது. எனவே அந்த பாஸ்போர்ட்டை வைத்து யாரும் இனி பயணிக்க முடியாது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்பவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பதை தெரிவிக்கும் ஆதாரமாக பாஸ்போர்ட்…

Read More

பணியிலிருந்து பாதியில் விலகும் 60 சதவிகித பெண்கள்

கடந்த 10 ஆண்டுகளாக பெண்கள் திறன் படைத்தவர்களாக விளங்கி வருகின்றனர். பெண்கள் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், முதன்மை செயல் அதிகாரிகள், தமிழக காவல்துறை தலைவர் என பெண்கள் பலவித உயரிய பதவிகளை வகித்து வருகின்றனர்.மென்பொருள் நிறுவனங்களில் 30 சதவீதம் பேர் பெண்கள்; ஊரகப்பகுதிகளில் வேளாண் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 89.5 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். பால் உற்பத்தி தொழிலில் 94 சதவீத பெண்கள் பணியாற்றுவதாக உலக வங்கி ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது.  மேலும் பெண்களின் பணி திறன் குறித்து 17 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய பெண்களின் தன்னம்பிக்கை 70 சதவீதமாகவும், சீனா பெண்கள் 68 சதவீதமும், பிரேசில் பெண்களின் அளவு 58 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் பெண்கள் 29…

Read More

உலக சிறுநீரக தினம்

world kidney day ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்ப டும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப் படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும்,சிறுநீரகப் பிரச்சனை வரும். சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும்…

Read More