பகுஜன் சமாஜ் கட்சியில் இந்திராகாந்தி கொலையாளி மகன் சரப்ஜித் சிங் சேர்ந்தார்

Indira assassin”s son joins Bahujan Samaj Party முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளார். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அவருடைய வீட்டில் அவருடைய பாதுகாவலர்களான பியாந்த் சிங் (வயது 33) மற்றும் சத்வந்த்சிங் (26) என்பவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது மற்ற பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குலில் பீந்த் சிங் சம்பவ இடத்திலேயே பலியானான். சத்வந்த் சிங்குக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்திரா கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா. சிரோன்மணி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியில் சேர்ந்தார். இவர், கடந்த 2007 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிண்டா தொகுதியில் போட்டியிட்டு…

Read More

மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மாதர் தினம்

International Women’s Day March 8 இன்று சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க படுகிறது.பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் 1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்டகாரர்களை சமாதான படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான்.   அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள்…

Read More

ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ள கூடாது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

People should cut their sugar intake to just six teaspoons a day   ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது என்றும், அதில் அபாயகரமான அளவில் சர்க்கரை இருப்பதாகவும் அது கூறியுள்ளது. 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொண்டால், அது உ டல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று விடுமாம்.  புகையிலை எந்த அளவுக்கு உடலுக்கு தீங்கானதோ அதே போல சர்க்கரையும் அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி காரணமாக பல சிசுக்கள் பிறப்பதற்கு முன்பே இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. லண்டனைச் சேர்ந்த இதயவியல்…

Read More

அமெரிக்காவில் தொடர்ந்து காணாமல் போகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள்

Indian-origin student reported missing in US அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து காணாமல் போவது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளோரிடாவில் உள்ள கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்ற 21 வயது மாணவர் ரெனி ஜோசை கடந்த திங்கள்கிழமை முதல் காணவில்லை. நண்பர்களிடம் கடற்கரையில் நடந்துவிட்டு வருவதாக சொன்ன ஜோஸின் உடைகள், மொபைல் போன் மற்றும் உடைமைகள் ஒரு குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து ஜாஸ்மின் ஜோசப் என்னும் 22 வயது இளம்பெண் மாயமாகியுள்ளார். இவரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மற்றொரு இந்திய வம்சாவளி மாணவரான பிரவீன் வர்கீஸ் காணாமல் போய் இலினியாஸில் உள்ள காட்டு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Indian-origin student reported missing in US A 22-year-old…

Read More

பழைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜனவரி ஒன்றம் தேதி வரை பயன்படுத்தலாம்

2005- ம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தின் கீழ்ப் பகுதியில் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடபடாத ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிகொள்ளலாம் என்றும் மேலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புழக்கத்துக்கு விடப்போவதில்லை எனவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. தற்பொழுது அந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி மேலும் 9 மாதம் கால அவகாசம் அளித்துள்ளது.எனவே வரும் 2015 ஜனவரி 1-ம் தேதி வரை மாற்றிக்கொள்ள முடியும். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் : பழைய ரூபாய்கள் செல்லாதவையே, ஆனால் பெரும்பாலான பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுவிட்டன. எனவே மீதம் உள்ள நோட்டுகளை மேலும் மாற்றிக்கொள்ள 9 மாதம் கால அவகாசம் அளிக்கபடுகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை எந்த வித அசவுகரியமு மின்றி…

Read More

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் மருந்து கண்டுபிடிப்பு

2nd HIV baby seemingly cured of virus in Los Angeles சென்ற வருடம் அமெரிக்காவின் மிஸிசிபி மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் கொண்ட தாயாருக்குப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அது பிறந்த 30 மணி நேரத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போது அது பூரண நலமுடன் இருப்பதாகவும் இந்தக் குழந்தைகள் நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டால் ஆண்டுதோறும் இதே நோயுடன் பிறக்கும் 3,00,000 குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் தொடங்கக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் லாங் பீச் என்ற இடத்தில் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைக்கு அதே முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒன்பது மாதங்கள் நிறைந்துள்ள இந்தப் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இன்னமும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வரும்போதிலும் அந்தக் குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் நோய்…

Read More

துணிச்சலுக்கான சர்வதேச விருது அமிலம் வீச்சில் பாதிக்கபட்ட இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது

Indian woman receives International Women of Courage Award துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமியின் பெயரை இந்த விருதுக்காக அமெரிக்கா தேர்வு செய்துள்ளது. 2007ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே. லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விருதை அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு…

Read More

உலகில் மிக அதிகம் குண்டுவெடிப்பு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம்

India among most dangerous places in the world   குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் அதிகம் நடக்கிறதாம். குண்டுவெடிப்புகளை பொறுத்த வரையில் உலகின் 3வது அபாயகரமான நாடு இந்தியா தானாம். தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிவர மையம் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 212 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை விட அதிகம் ஆகும். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு 108 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஈராக்கை அடுத்து இந்தியாவில் தான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றது.  உள்நாட்டு பிரச்சனையால் தவிக்கும் வங்கதேசத்தில் 75 குண்டுவெடிப்புகளும், சிரியாவில் 36 குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 241 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் 2013ம் ஆண்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 212 ஆக…

Read More

கெஜ்ரிவால் நரேந்திரமோடியை எதிர்த்து போட்டி?

நரேந்திரமோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி?

Read More

அசாமில் பிரசாரத்தின் போது ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் எரித்துக் கொலை

Assam woman who attended Rahul event dies of burn injuries, police say she’s not the one who kissed him அஸ்ஸாமில் ராகுல் காந்தி பயணம் செய்த போது, அவருக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது கணவரும் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் கடைசி நாளான்று கவுகாத்தி பகுதியில் பிரசாரம் செய்தார். அக்கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசுமபொது.’நாட்டின் வளர்ச்சியில் எல்லா துறைகளில் பெண்களின் பங்கு அதிகமாக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், எம்.பி., எம்எல்ஏ பதவிகளை பெண்களுக்கு…

Read More