International Women’s Day March 8
அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது. இத்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.
பெண்களின் போராட்டம் அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார். 1910ம், ஆண்டு ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது. சமீபகாலமாக ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.
International Women’s Day March 8
இதையும் படியுங்கள்
- பகுஜன் சமாஜ் கட்சியில் இந்திராகாந்தி கொலையாளி மகன் சரப்ஜித் சிங் சேர்ந்தார்
- உலக சிறுநீரக தினம்
- ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ள கூடாது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ள கூடாது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
அடுத்த செய்தி →: பகுஜன் சமாஜ் கட்சியில் இந்திராகாந்தி கொலையாளி மகன் சரப்ஜித் சிங் சேர்ந்தார்

