அசாமில் பிரசாரத்தின் போது ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் எரித்துக் கொலை

Assam woman who attended Rahul event dies of burn injuries, police say she’s not the one who kissed him

Assam woman who attended Rahul event dies of burn injuries, police say she’s not the one who kissed him

அஸ்ஸாமில் ராகுல் காந்தி பயணம் செய்த போது, அவருக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது கணவரும் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் கடைசி நாளான்று கவுகாத்தி பகுதியில் பிரசாரம் செய்தார். அக்கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசுமபொது.’நாட்டின் வளர்ச்சியில் எல்லா துறைகளில் பெண்களின் பங்கு அதிகமாக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், எம்.பி., எம்எல்ஏ பதவிகளை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் எப்போதும் பாடுபட்டு வருகிறது என்ற ரீதியில் பேசி கொண்டிருந்தார்.அப்போது,அங்கிருந்த பெண்கள் ராகுல் காந்தியிடம் கை குலுக்க பலர் முண்டியடித்தனர். அவர்களில் ஒரு பெண் திடீரென ராகுலை நெருங்கி உச்சந்தலையில் முத்தமிட்டார். புன்னகையுடன் ராகுல் அமைதியாக இருந்தார். திடீரென இன்னொரு இளம்பெண் வந்து, ராகுல் கன்னத்தில் முத்தமிட்டார்

இந்நிலையில் ராகுலுக்கு முத்தம் கொடுத்து வரவேற்றதை விரும்பாத அவரது கணவர் இவரின் செயலால் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். இதை அடுத்து இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் அவர் தனது மனைவியை தீவைத்து எரித்துள்ளார். தானும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும், கணவர் தீக்காயங்களுடன் போராடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா அல்லது தீவைத்து எரிக்கப்பட்டாரா என்பது குறித்து குழப்பமான நிலை நிலவுவதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Assam woman who attended Rahul event dies of burn injuries, police say she’s not the one who kissed him

Related posts