டெல்லி: குழந்தை உரிமை நிபுணர் எனாக்ஷி கங்குலி மற்றும் பேராசிரியர் சாந்தா சின்ஹா தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை ஊடகங்கள் தெரிவித்தது.சுதந்திரம் மற்றும் உயிர் இழப்பு மீறல்களை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் . தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உயர்நீதிமன்றத்தின் சிறார் நீதிக் குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் .அவர்களை சிறார் நீதிக் குழுவின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும்.சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குCategory: நீதி சிறகுகள்
நீதி சிறகுகள்
Law news
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியினருக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்க வேண்டும். பிறகு அந்த தொகையை அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர்.
Read More பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுவிவாகரத்து வழக்கில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்த கணவர்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கர்நாடகா: விவாகரத்து மனுவில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்ததால் மனைவியால் மனுவிற்கு பதில் அளிக்க முடியவில்லை. ரேணு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்ற தர்வாட் கிளையில் விவாகரத்து மேல்முறையிடு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தெரிவித்தது என்னவென்றால் “என் பெற்றோர் வீடு ராஜஸ்தான் மாநிலம் ஷிரோனியில் உள்ளதால் அங்கு இணை உரிமைகளை மறுசீரமைத்தல் (restitution of conjugal rights) மனுவை தாக்கல் செய்தேன். அப்போது தான் என் கணவருக்கு விவாகரத்து கிடைத்தது பற்றி தெரியவந்தது. தீர்ப்பு நகலை பார்த்த பிறகு தான் எனது விவரங்களை தவறாக கொடுத்து மனுவிற்கு நான் பதில் அளிக்காத அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது”என்று மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதி சத்யநாராயணா மற்றும் நீதிபதி பாட்டில் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் விவாகரத்து வழக்கை புதிய வழக்காக நடத்த உத்தரவிட்டனர்.…
Read More விவாகரத்து வழக்கில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்த கணவர்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்புதலைமை நீதிபதி இடமாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு – உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
Read More தலைமை நீதிபதி இடமாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு – உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவுசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
Read More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புஈஞ்சம்பாக்கத்தில் இருந்த ஏரி,குளங்களை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: சென்னையை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த மனுவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
Read More ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த ஏரி,குளங்களை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குஅயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்
டெல்லி: அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் தவான் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடுவதால் நான் மிரட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.எனக்கு சென்னையை சேர்ந்த 88 வயது பேராசிரியர் சண்முகம் என்பவர் மிரட்டல் கடிதம் ஒன்றை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அனுப்பி இருந்தார். மேலும் சஞ்சய் கலாய் பஜ்ரங்கி என்பவர் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பி இருந்தார் என்று தவான் தெரிவித்தார்.எனவே முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் தவான் வழக்கறிஞரை மிரட்டியதால் பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ் அனுப்பியது.
Read More அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
பிலோலா: இலங்கையை சேர்ந்த பிரியா மற்றும் நாடேசாலிங்கம் தனி தனியாக படகு மூலம் 2012 மற்றும் 2013ஆம் வருடம் ஆஸ்திரேலியா சென்றனர்.பிறகு பிரியா மற்றும் நாடேசாலிங்கம் திருமணம் செய்து கொண்டு மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலா நகரத்தில் மூன்று வருடமாக வாழ்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு கோபிகா மற்றும் தருணிகா என்ற இரு பெண் குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்தனர்.அந்த இரு குழந்தைகளின் இப்போதைய வயது 4 மற்றும் 2 ஆகும்.அவர்களின் விசாக்கள் காலாவதியான பிறகு, குடும்பத்தை எல்லைப்படை அதிகாரிகள் மார்ச் 2018 இல் வீட்டிலிருந்து அகற்றினர்.அவர்கள் மெல்போர்னில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் வியாழக்கிழமை இரவு வரை இருந்தனர்.பிலோலா சமூகமும் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக நீதிக் குழுக்களும் குடும்பத்தை விடுவிக்க போராடியுள்ளன. இந்த வழக்கை மறுஆய்வு செய்வதற்கான…
Read More தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்த பாஜக
சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார்.அவரது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தெலங்கானா உட்பட கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பாஜக.
Read More தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்த பாஜகடெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்
டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , ராகுல் காந்தியின் அம்மா சோனியா காந்தி மற்றும் மற்றவர் மேல் வழக்கு தொடர்ந்தார்.நேஷனல் ஹெரால்ட் வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு நீதிபதி சமர் விஷால் முன் விசாரணைக்கு வந்தது.காந்தியின் வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியிடம் ஹிந்தியில் பேசினார்.அதற்கு சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் என்றும் நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் அதனால் ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தார். அதற்கு நீதிபதி நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எனவே இரண்டையும் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞரிடம் நீங்கள் பேசும் ஹிந்தி எனக்கு புரியவில்லை என்றும் எனக்கு சமஸ்கிருதம் கலந்த…
Read More டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்