சென்னை: சென்னையை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த மனுவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
- தலைமை நீதிபதி இடமாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு – உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு
- அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்

