அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்

டெல்லி: அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் தவான் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடுவதால் நான் மிரட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.எனக்கு சென்னையை சேர்ந்த 88 வயது பேராசிரியர் சண்முகம் என்பவர் மிரட்டல் கடிதம் ஒன்றை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அனுப்பி இருந்தார். மேலும் சஞ்சய் கலாய் பஜ்ரங்கி என்பவர் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பி இருந்தார் என்று தவான் தெரிவித்தார்.எனவே முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் தவான் வழக்கறிஞரை மிரட்டியதால் பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ் அனுப்பியது.

Related posts