குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ்

உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். பனாஜி நகரில் உள்ள உல்லாச நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த காவல் துறையினர் , தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர். பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியிலிருந்து காவல் துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த…

Read More குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ்

உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா! – ரத்தன் டாடா

With economy in distress, India has lost confidence of the world: Ratan Tata பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ள நிலையில் ரத்தன் டாடா இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா மேலும் கூறியிருப்பதாவது: பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது ஆரம்ப காலத்தில். சமீபகாலமாக அந்த மதிப்பு சரிந்துள்ளது. பொருளாதார நிலையின்மை குறித்து பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்து…

Read More உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா! – ரத்தன் டாடா

இந்திய ரூபாயின் இன்றைய வர்த்தகத்தில் நல்ல நிலையில் உள்ளது.

rupee vs dollar 29-8-2013 10:15 இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இன்று சரிவில் இருந்து மீண்டு உள்ளது காலை வர்த்தகம் ஆரம்பத்தில் இருந்தே முன்னேற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நேற்றை விட 130 புள்ளிகள் அதிகரித்து 18,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ். தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 50 புள்ளிகள் ஏற்றம் கண்டு நல்ல நிலையில் உள்ளது. rupee vs dollar

Read More இந்திய ரூபாயின் இன்றைய வர்த்தகத்தில் நல்ல நிலையில் உள்ளது.

இந்திய ரூபாய் மீண்டும் வரலாறு காணாத சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. வரலாறு என்பது எப்பொழுதாவது நிகழ்வது ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு அதை தாண்டி சராசரி நிகழ்வை மாறியுள்ளது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 1.21% வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 19.2% வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் டீசல், பெட்ரோல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 5,136 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்ட எண் சென்செக்ஸ் 17,500க்கும் கீழே சென்றுள்ளது. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ஆசிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது. மேலும் ஆசிய பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவடைந்து 105ஐ தாண்டியுள்ளது.  

Read More இந்திய ரூபாய் மீண்டும் வரலாறு காணாத சரிவு

மும்பையில் பிரபல T.V நடிகைக்கு நடுரோட்டில் அடி, உதை..

Actor assaulted by three men as Mumbai crowd watches   மும்பையில் டிவி நடிகை லவ்லீன் கெளர் என்பவரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியது. ஆனால் இதைத் தடுக்காமல் மக்கள் வேடிக்கை பார்த்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை லவ்லீன் கெளர் நேற்று ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஒரு பிக்பாக்கெட் திருடன், அவர் வைத்திருந்த பர்ஸைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றான். இதையடுத்து ஆட்டோவிலிருந்து குதித்த லவ்லீன் அந்த திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். அந்த சமயத்தில் திடீரென அந்தத் திருடனுக்கு ஆதரவாக 2 பேர் திரண்டனர். மூன்று பேரும் லவ்லீனை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இதை நடிகை எதிர்பார்க்கவில்லை. அங்கு கூட்டமும் கூடியது. ஆனால் தனி ஆளாக திருடர்களுடன் போராடிக் கொண்டிருந்த லவ்லீனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அத்தனை பேரும்…

Read More மும்பையில் பிரபல T.V நடிகைக்கு நடுரோட்டில் அடி, உதை..

குஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

5 dead after two 7-storey buildings collapse in Gujarat குஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். வடோதராவில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 7 மாடி கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தை அகற்றிய போது அடுக்கு மாடி இடிந்து விழுந்தது. அடுக்குமாடியில் 12 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மீட்பு பணி அங்கு தீவிரம் அடைந்து வருகிறது. இந்த 7 மாடி கட்டிடம் வடோதரா மேம்பாட்டு ஆணையத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 5 dead after two 7-storey buildings collapse in…

Read More குஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

அன்னை தெரசாவின் 103ஆவது பிறந்த நாள்

Today Mother Teresa 103rd birthday அன்னை தெரசா யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரத்தில் 26-08- 1910 ஆம் தேதி பிறந்தார் இவரத இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ.அன்னை தெரசாவின் செல்லப்பெயர் கோன்ஸா. தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ . தாயின் பெயர் திரானி பெர்னாய். உடன் பிறந்தவர்கள் அக்கா அகா  மற்றும் அண்ணன் லாஸர். அன்னை தெரசா  தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு மடை திறந்த வெள்ளம் போல் காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். 1970 ஆம்…

Read More அன்னை தெரசாவின் 103ஆவது பிறந்த நாள்

மலையாளம் தெரிந்தால் மட்டும் கேரள அரசு வேலை: உம்மன் சாண்டி

Malayalam compulsory for govt jobs ஆகஸ்ட் 25, 2013: திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக பதவியேற்றதும் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் வாழும் தமிழ் மற்றும் கன்னடம் பேசும் சிறுபான்மையின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்தக் கோரி சில மலையாள அமைப்புகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை…

Read More மலையாளம் தெரிந்தால் மட்டும் கேரள அரசு வேலை: உம்மன் சாண்டி

நாடாளுமன்றத்துக்கு தேர்வானார் நடிகை ரம்யா

Congress wins Karnataka by-polls: Actress Ramya wins Mandya seat   கர்நாடகாவில் உள்ள இரு மாக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மாண்டியாவில் போட்டியிட்ட பிரபல நடிகை ரம்யா, மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் புட்டராஜுவை விட 67 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். அதேபோல பெங்களூர் ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி கே சுரேஷ், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியை ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனான, குமாரசாமி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதையடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல மாண்டியா நாடாளுமன்ற…

Read More நாடாளுமன்றத்துக்கு தேர்வானார் நடிகை ரம்யா

இந்தியாவை பங்கு போட அடுத்த நாடு!!! மியான்மர் ஊடுருவல்

Myanmar army crossed the indian border entered Manipur Myanmar army enters Manipur, stakes claim to border village இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் பிரச்சனை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில் புதிய பிரச்சனையாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா – மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து உள்ளூர் காவல் துறையினர்…

Read More இந்தியாவை பங்கு போட அடுத்த நாடு!!! மியான்மர் ஊடுருவல்