Indian man shot dead in the US கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட இந்தியர் மன்பிரீத் குமான் சிங் வழக்கு குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 253,429.99 பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மஜ்கி கிஷேவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ப்ரீத் குமான் சிங்(27). அவர் கலிபோர்னியா சவுத் லேக் தஹோவில் உள்ள கேஸ் ஸ்டேஷனில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 6ம் தேதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. கேஸ் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் குற்றவாளி தனது முகத்தை துணியால் மறைத்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.253,429.99…
Read More அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலைCategory: செய்தி சிறகுகள்
தர்மபுரியில் கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைது
woman fake doctor arrested தர்மபுரியில், இளம்பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைது செய்யப் பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மனைவி வனிதா (27). ஏற்கனவே, இத்தம்பதிகளுக்கு இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வனிதா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதனையடுத்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, இம்முறையும் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்ததாம். 3வதும் பெண் குழந்தையா என நினைத்த தம்பதிகள், அக்குழந்தையை கருக்கலைப்பு செய்து விட முடிவு செய்துள்ளனர். இதற்காக தெரிந்த நர்சு மூலம் பாப்பாரப்பட்டியில் கிளினிக் நடத்தி வரும் ரேணுகா என்பவரிடம் அழைத்து செல்லப் பட்டுள்ளார் வனிதா. ரேணுகாவிடம் கருக்கலைப்பு செய்து கொண்ட வனிதாவிற்கு வீட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில்…
Read More தர்மபுரியில் கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைதுஷூவில் மறைத்து வைத்து யுரேனியம் கடத்தியவர் கைது
Uranium shoe man arrested in US அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்றில் யுரேனியம் தொடர்பாக விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் உலகம் முழுவதும் ‘எல்லோ கேக்’ என்று அழைக்கப்படும் ‘யுரேனியத்தை யாரேனும் விற்க தயாராக இருக்கிறீர்களா. எவ்வளவு விலை கொடுத்தும் அதை வாங்க தயார் என்று விளம்பரத்தை வெளியிட்டவர் தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை கண்ட பேட்ரிக் கேம்பல் என்பவர், தனக்கு தங்கம், வெள்ளி, யுரேனியம் போன்றவற்றை விற்பவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், உலகின் எந்த மூலைக்கும் தன்னால் யுரேனியத்தை கொண்டு சென்று விற்க முடியும் என்றும் விளம்பர நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதற்கு, Ôஈரானுக்கு கொண்டு செல்ல முடியுமா’ என விளம்பரம் வெளியிட்டவர் கேட்டுள்ளார். ‘ஈரானில் உள்ள பந்தர் அபாஸ் துறைமுகத்துக்கு யுரேனியத்தை 1000 கிலோ வரை கடத்தி சென்று சப்ளை செய்ய முடியும்’…
Read More ஷூவில் மறைத்து வைத்து யுரேனியம் கடத்தியவர் கைதுஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்
Japan woman ties herself up to skip work ஜப்பானில் அலுவலகத்திற்கு செல்ல விருப்பமில்லாத ஒரு பெண் தன்னை தானே கட்டிப்போட்டு கொண்டு நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். கால்களும், கைகளும் கயிற்றில் கட்டப்பட்டு அப்பெண் மயங்கிய நிலையில் இருந்ததை அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கண்டு அதிர்ச்சியடைந்தார். பெண்ணை கட்டிப்போட்டு விட்டு வீட்டை திருடர்கள் கொள்ளையடித்திருக்ககூடுமென எண்ணிய அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல…
Read More ஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்மியான்மரில் முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்த புத்த மதத்தினர்
Buddhists in Myanmar Torch Muslim Homes and Shops புத்த மதத்தினருக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் கலவரங்களால் மியான்மர் நாடு அமைதி இழந்து நிற்கிறது. இனக்கலவரங்கள் சிறிது தணிந்திருந்த வேளையில், தற்போது நேற்று புத்த மதப் பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியதை அடுத்து மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.கண்ட்பாலு என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. செய்தியை கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்தை அணுகி குற்றவாளியைத் தங்களிடம் விடுமாறு கேட்டுள்ளனர். அங்கிருந்த காவலர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பனிரெண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி…
Read More மியான்மரில் முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்த புத்த மதத்தினர்ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் 28 பேர் பலி
Iraq suicide bomber kills at least 28 people ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நேற்று முன்தினம் மாலை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியான அல் – கஹிராவில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த பூங்காவில் வெடிகுண்டுகளை அணிந்த நபர் ஒருவர் தற்கொடைப் படை தாக்குதலை நடத்தியிருக்கிறான். இத்தாக்குதலில் பூங்காவில் இருந்த ஏராளமான குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Iraq suicide bomber kills at least 28 people At least 28 people were killed and 36 others wounded in a suicide bombing in Iraq on Friday evening. Police officials in Baghdad said a man wearing an…
Read More ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் 28 பேர் பலிபொலிவியா சிறை கலவரம்.. குழந்தை உட்பட 30 பேர் பலி
Violence in Bolivia jail takes 30 lives பொலிவியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறையில் இரு பிரிவினருக்கு இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு குழந்தை உள்பட 30 பேர் பலியாகினர். பொலிவியாவின் சான்டா குரூஸில் இருக்கிற பால்மசோலா சிறைச் சாலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. இந்த வன்முறையின் போது சிறைக்குள் இருந்த ப்ரோபோன் வாயு டேங்குகளை கைதிகள் சிலர் தீயிட்டனர். மேலும் பலரை எரித்தும் கொன்றுள்ளனர். இந்த மோதலில் 18 மாத கைக்குழந்தை உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கு யார் தலைவராக இருப்பது என்ற மோதலிலேயே இந்த கலவரம் மூண்டதாக தெரிகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பொலிவியா அரசு 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தங்கள் பெற்றோருடன் சிறையில் இருக்க…
Read More பொலிவியா சிறை கலவரம்.. குழந்தை உட்பட 30 பேர் பலிஉணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் தேவை: பிரதமருக்கு கடிதம்
Food Security Bill CM writes another letter to PM சென்னை, ஆக. 25: தமிழக அரசின் சார்பில் தாம் குறிப்பிட்டுள்ள பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து போதிய திருத்தங்களை உணவு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டு வரவேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள நேர்முக கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- மத்திய அரசால் அவசர அவசரமாக பிறப்பிக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து ஆகஸ்ட் 2ம் தேதி நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். நான் தெரிவித்த யோசனைகளில் சிலவற்றை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு மசோதாவில் சில திருத்தங்கள் செய்து இருப்பதாக அறிகிறேன். இதில் மிக முக்கியமானது என்னவென்றால் எனது வேண்டு கோளின்படி பொதுவிநியோக திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு தற்போது…
Read More உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் தேவை: பிரதமருக்கு கடிதம்விஜயகாந்துக்கு ராகுல் காந்தி டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்து..
Rahul gandhi sent birthday greeting to DMDK chief Vijayakanth 25 ஆகஸ்ட் 2013: இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி, டெலிபோனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தனது மனைவி பிரேமலதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வழிபட்ட அவர் வழக்கம் போல எளிமையாக இன்று பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். செய்தியாளர்கள் கூட்டத்தில், வரும் 2014- தேர்தலில் யாருடன் கூட்டணி என கேட்டனர். முதலில் தேர்தல் தேதியை அறிவிக்கட்டும் பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கிறேன் என்றார். அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சமீபத்தில்தான் தலைவா பட சிக்கலிலிருந்து மீண்ட நடிகர் விஜய்யும், விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன்,…
Read More விஜயகாந்துக்கு ராகுல் காந்தி டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்து..மலையாளம் தெரிந்தால் மட்டும் கேரள அரசு வேலை: உம்மன் சாண்டி
Malayalam compulsory for govt jobs ஆகஸ்ட் 25, 2013: திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக பதவியேற்றதும் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் வாழும் தமிழ் மற்றும் கன்னடம் பேசும் சிறுபான்மையின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்தக் கோரி சில மலையாள அமைப்புகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை…
Read More மலையாளம் தெரிந்தால் மட்டும் கேரள அரசு வேலை: உம்மன் சாண்டி