IOB core banking system caught in technical glitch இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் முடங்கி உள்ளது. கம்யூட்டர் சர்வரில் ஏற்பட்டுள்ள கோளாறால் நாடு முழுவதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சர்வர் கோளாறால் ஏடி.எம்-மிலும் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். IOB core banking system caught in technical glitch customers were not able to withdraw money from its ATMs since updation of transaction was not working The Core Banking System (CBS) of Indian Overseas Bank (IOB) was affected on Monday due to “complex technological malfunction,” restraining the banking services to its customers. While the…
Read MoreCategory: செய்தி சிறகுகள்
கடலுக்கடியில் வனுவாத்தூ தபால் நிலையம்
Vanuatu Postal Station Underwater நாட்டின் தொலைத் தொடர்புப் பணியில் தபால் சேவைக்கென முக்கியப் பங்கு இன்றைக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட சேவையை அளிக்கும் தபால் நிலையங்கள் பொதுவாக மக்கள் எளிதாக அணுகும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் இந்தத் தபால் நிலையம் முற்றிலும் வித்தியாசமானது. வனுவாத்தூ தபால் நிலையம் நிலத்திலிருந்து 3 மீட்டர் கடலுக்கடியில் செயல்பட்டு வருகிறது.ஆஸ்திரேலியா அருகே சுமார் 100 தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. வனுவா என்றால் நிலம் என்று பொருள். இதனால் இந்த தீவு வனுவாத்தூ என அழைக்கப்படுகிறது. ஹைடுஅவே தீவின் அருகே கடலுக்கு அடியில் இருக்கும் இந்த தபால் நிலையத்தை காண வரும் பார்வையாளர்கள் தண்ணீருக்குள்ளே அணியப்படும் முகமூடி உள்ளிட்ட கவசங்களையெல்லாம் அணிந்துக்கொண்டு செல்கின்றனர். வனுவாத்தூவில் கிடைக்கும் சிறப்பு வாட்டர் ப்ரூப் தபால் அட்டைகளை இதுவரை ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளனர். இங்கிருந்து அனுப்பபடும்…
Read Moreசீனாவில் 10 மாத குழந்தைக்கு சரமாரி கத்திக்குத்து
China knife attack: Police arrest suspect in bus rampage சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்குவோ நகரில் இருந்து அனியாங் மாவட்டத்திற்கு நேற்று ஒரு பஸ்சில் 33 பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர். அயாங் நகரை நெருங்கும்போது பஸ்சில் பயணித்த ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக உருமாறிய போது, தகராறு செய்த பயணி மடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளை சரமாரியாக வெட்டினான். கத்திக்குத்தில் படுகாயமடைந்த 10 மாத கைக்குழந்தை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். கத்தியால் வெட்டிய ஆசாமி பஸ்சில் இருந்து எகிறி குதித்து தப்பித் தலைமறைவானான். படுகாயமடைந்த 15 பேரையும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே 10 வயது சிறுவன் ஒருவனும்,…
Read Moreஅதிவேகமாக பைக் ஒட்டி சாதனை படைத்த பார்வையற்றவர்
A BLIND former British soldier has vowed to break the 200mph barrier — on a motorbike இங்கிலாந்தில் கண்பார்வையை இழந்த ஒரு நபர் அதிவேகமாக பைக்கை ஓட்டி புதிய சாதனை படைத்து பார்ப்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். எடின்பர்க்கை சேர்ந்தவர் ஸ்டுவர்ட் கன். இவருக்கு வயது 39. உலகில் மிக அதிவேகமாக பைக் ஓட்டிய கண் பார்வையற்றவர் என்னும் பெருமையை ஸ்டுவர்ட் பெற்றுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஸ்டுவர்ட் சிக்கினர். விபத்தில் சிக்கி தோள் பட்டை எலும்பு உள்பட முதுகில் 2 இடங்களில் எலும்பு நொறுங்கி, அவரது உடலின் வலது புறத்தில் பக்கவாதம் ஏற்பட்ட போதும் மனவலிமை இழக்காமல் அவர் தொடர்ந்து போராடினார். அதிவேகமாக பைக் ஓட்டவேண்டுமென தன்னம்பிக்கையுடன் முயற்சித்த ஸ்டுவர்டிற்கு அவரது தந்தையான ஜியோப் உறுதுணையாக இருந்தார். A BLIND…
Read More610 கிலோ எடை: கிரேன் மூலம் சிகிச்சைக்கு சென்ற இளைஞர்
Tuesday Aug 20, 2013: 610 kg Saudi man forklifted to hospital for treatment சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த 610 கிலோ இளைஞர் கிரேன் மூலம் சிகிச்சைக்காக வெளியேற்றபட்டார். சவிதியில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. 610 கிலோ உடல் எடையினால் அவதிப்பட்டுவரும் இந்த இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார். இவரை பற்றி அறிந்த சவுதி மன்னர் அப்துல்லா காலித் மோஷின் ஷைரியை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்து, அரசு செலவில் எடை குறைப்பு சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார். English News Summary: 610 kg Saudi man…
Read Moreசீனாவில் யாஹூ இணையதளத்தின் இமெயில் சேவை நிறுத்தம்
Yahoo email service stopped in china சீனாவில் இ மெயில் சேவையை நிறுத்திக் கொள்வதாக ‘யாஹூ‘ இணையதளம் அறிவித்துள்ளது. சீனாவில் இணைய தளங்கள் மூலம் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசுக்கு எதிரான வெப்சைட்டுகளை சீன அரசு முடக்கி வருகிறது. இந்நிலையில், தனது இ மெயில் சேவையை இந்த மாதம் 31ம் தேதி நிறுத்தி கொள்ள போவதாக யாஹூ இணையதளம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயிலில் தகவல் அனுப்பி உள்ளது. அதில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை யாகூ இ மெயில் வழியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். English Summary: Yahoo email service stopped in China Yahoo’s email service in China has shut down, with a note on its log-in page asking users to…
Read Moreதி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம்
DMK leader M.karunanidhi’s letter to prime minister திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரோ மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தை அமைக்க தேவையான நிலம் மற்றும் வசதிகள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ளது. குறிப்பாக, வான்வெளி, திரவ உந்துவிசை, அதிவேக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பம் இங்கு கிடைக்கும். எனவே, இக்கல்வி நிலையத்தை மகேந்திரகிரியில் அமைக்க வேண்டும். இதேபோல் இரண்டாவது…
Read Moreகாரைக்கால் விநோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள்
காரைக்கால்: காரைக்கால் வினோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வினோதினி கொலை வழக்கில் காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளி சுரேஷுக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை வினோதியினி குடும்பத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த வினோதினி பிப்ரவரி 12ல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Read Moreவெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் புதிய வரி
new tax for importing electronics வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு…
Read Moreஅக்டோபர் மாதம்15ம் தேதிக்குள் மகளிர் வங்கிகள் துவக்க முடிவு
Women banks decided to start before October 15 முழுவதும் பெண்களால் இயக்கப்படும் மகளிர் வங்கிகள் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் சென்னையில் திறக்கப்படும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்த போது, நாட்டிலேயே புதுமையாக முழுவதும் பெண்களால் இயக்கப்படும் , பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் வழங்க வகை செய்யும் மகளிர் வங்கிகள் துவக்கப்படும் என அறிவித்தார். முதற்கட்டமாக சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, இந்தூர் மற்றும் கவுகாத்தி நகரங்களில், மகளிர் வங்கிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பார்லிமென்டில் சமீபத்தில் 1,000 கோடி ரூபாய் துவக்க முதலீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மகளிர் வங்கி துவக்குவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்குள் சென்னை உட்பட ஆறு இடங்களில் மகளிர்…
Read More