Bangalore woman lay dead for four months in her sprawling bungalow
பெங்களூரின் இதயம் போன்ற இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பிணவாடை அடிப்பதாக சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
‘ஏதாவது நாய் செத்துக் கிடக்கும்’ என்று பொறுப்புடன் பதில் கூறிய பெங்களூர் போலீசார் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்துவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
வெளியூரில் வசிக்கும் ஒருவர் பெங்களூர் இந்திரா நகரில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு வந்தார். வீடு உள்புறம் தாழிடப்பட்டிருந்ததால், வெகுநேரம் காலிங் பெல்லை அடித்து ஓய்ந்துப்போன அவர், வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார்.
உள்ளே, அவரது சகோதரியான ஷீலா ரெட்டி (53) உடலின் பெரும் பகுதி தசைப்பகுதி அழுகி, சிதைந்துப்போன நிலையில் அரை எலும்புக்கூடாக தரையில் கிடந்தார். இதனையடுத்து, அவரது சகோதரர் ஷங்கர் ரெட்டி அளித்த புகாரையடுத்து பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மர்மமான முறையில் இறந்து கிடந்த ஷீலா ரெட்டியின் குடும்பத்துக்கு பெங்களூர் இந்திரா நகர் பகுதியில் ஏராளமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். அவரது தூரத்து உறவினர்களில் சிலர் அவ்வப்போது உணவு கொண்டு வந்து கொடுப்பதுண்டு. அதைத்தவிர ஷீலா ரெட்டியை சந்திக்க யாருமே வந்தது கிடையாது என அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த வீட்டை சோதனையிட்ட தடயவியல் துறை நிபுணர்கள், அவர் இறந்து 4 அல்லது 5 மாதங்களாகி இருக்கலாம். வீட்டினுள் உணவுபொருள் ஏதும் காணப்படவில்லை என கூறினர். எனவே, ஷீலா ரெட்டி பசி, பட்டினியால் இறந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக போலீசார் கூறினர்.
கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிகம் வசிக்கும் பகுதியின் தனி பங்களாவில் 5 மாதங்களாக கேட்பாரற்று கிடந்த பிணம் பற்றிய செய்திகள் கர்நாடக ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
Bangalore woman lay dead for four months in her sprawling bungalow
Bangalore: A 53-year-old woman lay dead in her sprawling bungalow in the heart of Bangalore for over four months, her body decomposed and half reduced to bones as not even close relatives visited her. The police say Sheela Reddy may have starved to death in her two-storey home at least four or five months ago, a shocking irony in the Indiranagar colony, which is counted among the affluent parts of the IT-city. Neighbours say Ms Reddy, a single woman, was upset that her family hadn’t visited her for long. She had stopped going anywhere after her mother died a few months ago. Some claimed she had a “medical condition” and was often seen walking around her house, mumbling to herself or screaming at people. Such was her isolation, that her remains were found only when her brother Shankar Reddy came calling on Monday, after six months, and spotted her body through a window. The police found no food in the house. “We got to know of the death from the papers,” said former Director General of Police MD Singh, who lives right opposite Ms Reddy’s bungalow. “If it is a single woman, there is not much we can do by way of interaction,” said Mr Singh, when asked whether neighbours tried to help her. A report quoted neighbours as saying they had complained of an overpowering stench from the house a few months ago, but the police dismissed it saying it could be a dead dog. Neighbours said Ms Reddy never had visitors barring some relatives who came to give her food. Her parents reportedly owned large tracts of land in the area years ago.