ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த ஏரி,குளங்களை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: சென்னையை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த மனுவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Read More

அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்

டெல்லி: அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் தவான் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடுவதால் நான் மிரட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.எனக்கு சென்னையை சேர்ந்த 88 வயது பேராசிரியர் சண்முகம் என்பவர் மிரட்டல் கடிதம் ஒன்றை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அனுப்பி இருந்தார். மேலும் சஞ்சய் கலாய் பஜ்ரங்கி என்பவர் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பி இருந்தார் என்று தவான் தெரிவித்தார்.எனவே முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் தவான் வழக்கறிஞரை மிரட்டியதால் பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ் அனுப்பியது.

Read More

தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்

பிலோலா: இலங்கையை சேர்ந்த பிரியா மற்றும் நாடேசாலிங்கம் தனி தனியாக படகு மூலம் 2012 மற்றும் 2013ஆம் வருடம் ஆஸ்திரேலியா சென்றனர்.பிறகு பிரியா மற்றும் நாடேசாலிங்கம் திருமணம் செய்து கொண்டு மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலா நகரத்தில் மூன்று வருடமாக வாழ்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு கோபிகா மற்றும் தருணிகா என்ற இரு பெண் குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்தனர்.அந்த இரு குழந்தைகளின் இப்போதைய வயது 4 மற்றும் 2 ஆகும்.அவர்களின் விசாக்கள் காலாவதியான பிறகு, குடும்பத்தை எல்லைப்படை அதிகாரிகள் மார்ச் 2018 இல் வீட்டிலிருந்து அகற்றினர்.அவர்கள் மெல்போர்னில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் வியாழக்கிழமை இரவு வரை இருந்தனர்.பிலோலா சமூகமும் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக நீதிக் குழுக்களும் குடும்பத்தை விடுவிக்க போராடியுள்ளன. இந்த வழக்கை மறுஆய்வு செய்வதற்கான…

Read More

தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்த பாஜக

சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார்.அவரது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தெலங்கானா உட்பட கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பாஜக.

Read More

டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்

டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , ராகுல் காந்தியின் அம்மா சோனியா காந்தி மற்றும் மற்றவர் மேல் வழக்கு தொடர்ந்தார்.நேஷனல் ஹெரால்ட் வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு நீதிபதி சமர் விஷால் முன் விசாரணைக்கு வந்தது.காந்தியின் வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியிடம் ஹிந்தியில் பேசினார்.அதற்கு சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் என்றும் நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் அதனால் ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தார். அதற்கு நீதிபதி நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எனவே இரண்டையும் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞரிடம் நீங்கள் பேசும் ஹிந்தி எனக்கு புரியவில்லை என்றும் எனக்கு சமஸ்கிருதம் கலந்த…

Read More

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் 1000, 500 ஆகிய பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.பழைய ரூபாய் 1000, 500 ஆகிய நோட்டுகளை வங்கியில் செலுத்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளித்தது மத்திய அரசு.மதுரையைச் சேர்ந்த ராமன் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் செலுத்த சென்றார்.ஆனால் வங்கி மறுத்தது.இதனால் ராமனுக்கு எதிராக செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு ராமன் மனு அனுப்பினார்.ஆனால் ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது .பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராமர். மனு நீதிபதிகள் என்.வி. ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய்…

Read More

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் மீது பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஐ.ஜி. முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்தார்.பெண் எஸ்.பி. தரப்பில் கேரளாவுக்கு மாற்ற தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றி 6 மாதத்தில் அறிக்கை தர அந்த மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. தெலங்கானா மாநில டிஜிபி-க்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி, மூத்த பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி…

Read More

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி:முத்தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக மசோதா நிறைவேறியது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.அதன் படி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து சமஸ்தா கேரள ஜமாய்துல் உலமா, ஜமாத் உலமா இ ஹிண்டு ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

Read More

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Chennai Highcourt

சென்னை: கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.இவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் கணவன் பராமரிப்பில் உள்ளனர்.மகளுக்கும், தந்தைக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார்.முன்னாள் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி முன்னாள் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் தாய் முன்னாள் கணவர் மீது பொய் புகார் அளித்தது தெரியவந்தது. குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என கூறி, பொய் புகார் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read More

டெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.பிறகு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமனறம் மறுத்துவிட்டது.இதனால் எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்புள்ளது.டெல்லியில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிற்கு கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.அவர் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்.ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை விசாரிக்க வாய்ப்புள்ளது.

Read More